கோலாகலமாக நடந்தேறிய திருப்பதி ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகம்

பக்தர்களின் வாழ்வில் பல தித்திக்கும் திருப்பங்களை தந்துக் கொண்டிருக்கும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 16-08-2018 வியாழக்கிழமை , வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அஷ்டபந்தன பாலாலய மகா சம்ப்ரோக்ஷணம் நடத்தப்படுவது வழக்கம்.
 | 

கோலாகலமாக நடந்தேறிய திருப்பதி ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகம்

பக்தர்களின் வாழ்வில் பல தித்திக்கும் திருப்பங்களை தந்துக் கொண்டிருக்கும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 16-08-2018 வியாழக்கிழமை ,வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அஷ்டபந்தன பாலாலய மகா சம்ப்ரோக்ஷணம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி பக்தர்களின்  கோவிந்தா கோஷம் விண்ணை அதிரச் செய்ய, வேத விற்பன்னர்களின் மந்திரங்களுடன் புனித  நீரால் கும்பாபிஷேகம் மிக விமரிசையாக நடத்தப்பட்டது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 11-ம் தேதி முதலே,திருமலையில்,  பக்தர்கள் தரிசனத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதைத் தொடர்ந்து கோவிலில் உள்ள மூலவர், துவாரபாலகர்கள், விமான வெங்கடேஸ்வர சுவாமி, கருடாழ்வார், வரதராஜ சுவாமி உள்ளிட்ட சன்னதிகளுக்காக 28 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடந்தேறியது.நேற்று காலை 10.16 மணிக்கு தொடங்கி 12 மணி அளவில் நிறைவு பெற்ற, திருப்பதி ஏழுமலையான் கோவில் குடமுழுக்கை காண நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் திருப்பதியில்  குவிந்திருந்தனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP