குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை!

கல்வியில் மேன்மை, நல்ல உத்தியோகம், திருமண தடை நீங்கி விரைவில் திருமணம், சந்தான பாக்கியம், வேலையில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு, விருப்பப்பட்ட இடத்திற்கு பணி இட மாற்றம் உள்ளிட்டவை இனிதே அமையப்பெறும்.
 | 

குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை!

ஆண்டுக்கு ஒரு முறை நிகழும் குரு பெயர்ச்சி, இந்த ஆண்டு, அக்டோபர் 28ம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம், விருச்சிக ராசியிலிருந்து, தனுசு ராசிக்கு செல்லும் குரு பகவான், தன் சொந்த வீட்டில் அமர்ந்து, அடுத்த ஓர் ஆண்டுக்கு ஆட்சி செய்யப்போகிறார். 

இதுவரை, செவ்வாய்க்கு சொந்தமான விருச்சிக ராசியில் இருந்து வரும் குரு பகவான், தனுசு ராசிக்குள் நுழைவதால் தன் சொந்த வீட்டில் நுழையும் மகிழ்ச்சியிலும், முழு பலத்தாலும் அருளை வாரி வழங்க உள்ளார். 

குருவுக்கான பார்வையாக, 5, 7, 9 ஆகிய இடங்கள் சொல்லப்படுவதால், தனுசு ராசிக்கு 5, 7, 9ம் இடங்களில் உள்ள ராசிக்காரர்களுக்கு யோகம் அடிக்க உள்ளது. அதாவது, மேஷ ராசியை 5ம் பார்வையாகவும், மிதுன ராசியை 7ம் பார்வையாகவும், சிம்ம ராசியை 9ம் பார்வையாகவும் குரு பகவான் பார்க்க உள்ளார். 

இந்த ராசிக்காரர்கள் மீது குருவின் பொன்னொளி பார்வை வீச உள்ளதால், குரு பார்க்க கோடி நன்மை என்பதற்கிணங்க, இந்த குரு பெயர்ச்சியில், மேற்கண்ட மூன்று ராசிக்காரர்கள் அமோக பலனை பெற உள்ளனர். 

கல்வியில் மேன்மை, நல்ல உத்தியோகம், திருமண தடை நீங்கி விரைவில் திருமணம், சந்தான பாக்கியம், வேலையில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு, விருப்பப்பட்ட இடத்திற்கு பணி இட மாற்றம் உள்ளிட்டவை இனிதே அமையப்பெறும். 

இதுவரை இல்லாத வகையில் திடீர் அதிர்ஷ்டங்கள் உங்கள் வீடு தேடி வரும். எனினும், பல வாய்ப்புகள் காத்துக்கிடப்பதால், உங்களுக்கு உகந்தவற்றை தேடி தேர்வு செய்துகொண்டால் நன்மை பயக்கும். 

இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு மட்டுமின்றி, மீதமுள்ள ராசிக்காரர்களுக்கான குரு பெயர்ச்சி பலன்களையும் வரும் நாட்களில் தொடந்து காணலாம். 

குரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு?

newstm.in

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP