ராமாவதாரம் நமக்கு சொல்லும் நான்கு தர்மங்கள்

இந்த நான்கு தர்மங்களையும் உலகத்தவருக்கு எடுத்துக் காட்டவே, இராமாவதாரத்தில் நான்கு புத்திரர்கள், தசரதருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன.
 | 

ராமாவதாரம் நமக்கு சொல்லும் நான்கு தர்மங்கள்

பிள்ளை வரம் வேண்டி யாகம் செய்து, தவமாய் தவம் இருந்து பிள்ளைப் பெற்றான் தசரதன். பிள்ளை இல்லை,பிள்ளைகள் . ஆமாம் இறைவனிடம் தசரதன் ஒரு பிள்ளை வேண்ட, நான்கு பிள்ளைகள் பிறந்தன. தசரதனுக்கு பிறந்தவர்கள் பிள்ளைகள் அல்ல. தர்மமே அவனுக்கு பிள்ளைகளாக பிறந்தார்கள். தர்மம் நான்கு வகைப்படும்.

அதில் முதலாவது சாமான்ய தர்மம். பிள்ளைகள் பெற்றோரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? சீடன் குருவிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை என்ன? கணவன் மனைவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? இத்தகைய சாமான்ய தர்மங்களை சொல்வதோடு, அவற்றை தானே பின்பற்றியும் வாழ்ந்து காட்டினார் இராமர்.

இரண்டாவது சேஷ தர்மம். சாமான்ய தர்மங்களை ஒழுங்காகச் செய்து கொண்டு வந்து,இறுதியில்  பகவானுடைய பாதங்களைத் தவிர வேறு ஒன்றும் சதம் அல்ல என்ற நினைப்பு ஏற்படும் தர்மத்துக்கு சேஷ தர்மம் என்று பெயர். இதைப் பின்பற்றிக் காட்டினான் இலட்சுமணன்.

மூன்றாவது விசேஷ தர்மம். தூரத்தில் இருந்து கொண்டே எப்போதும் பகவானின் சிந்தனையாகவே இருப்பது விசேஷ தர்மம். சேஷ தர்மத்தைக் காட்டிலும் கடினமான இதைக் கடைப்பிடித்துக் காட்டியவன் பரதன்.

நான்காவது,பகவானை விட அவருடைய அடியார்களுக்குத் தொண்டு செய்வதே முக்கியம் எனக் கருதுவது விசேஷதரதர்மம். சத்ருகன் உத்தமனாகிய பரதனுக்குத் தொண்டு செய்தே கரையேறி விட்டான்.

இந்த நான்கு தர்மங்களையும் உலகத்தவருக்கு எடுத்துக் காட்டவே, இராமாவதாரத்தில் நான்கு புத்திரர்கள், தசரதருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன.அதி உன்னதமானது நமது இந்து மதம். இதைப் போற்றி பாதுகாத்து நாம் இந்துக்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP