சனி பன்னிரெண்டில் இருந்ததால் வந்த விளைவு

சனி பகவானுக்கு ‘மந்தன்’என்ற பெயர் உண்டு. மந்தன் என்றால் அவர் சுற்றுவதில் தான் மந்தன் . ஆனால், அவரின் கடமையை ஆற்றுவதில் அவருக்கு நிகர் வேறு யாரும் இல்லை
 | 

சனி பன்னிரெண்டில் இருந்ததால் வந்த விளைவு

சனி பகவானுக்கு ‘மந்தன்’என்ற பெயர் உண்டு. மந்தன் என்றால் அவர் சுற்றுவதில் தான் மந்தன். ஆனால், அவரின் கடமையை ஆற்றுவதில் அவருக்கு நிகர் வேறு யாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு காரியத்தில் கண்ணாக இருப்பார். அது சரி கிரகங்கள் எப்படி மந்தமாக சுற்றும்? எல்லா கிரகங்களுமே அப்படி தானா? ஒன்பது கிரகங்களில் சந்திரன் மிக வேகமாகச் சுற்றுபவர். சனி மெதுவாகத்தான் சுற்றுகிறார். ஏனென்றால், சனிக்கு ஒருகால் கிடையாது என்பதால் தான் மெதுவாக சுற்றுவதாகவும் கூறப்படுகிறது. சனி பகவான் ஏன் கால் ஊணம் ஆனார் என்பதற்கு ஒரு கதை உண்டு.

ராவணன் தன் மகன் இந்திரஜித் பிறக்கும் முன்பு அவன் சாகாவரம் பெற்று சிரஞ்சீவியாக  இருக்க வேண்டும் என விருப்பினான். பொதுவாக ஒருவர் ஜாதகத்தில் 11ம் வீடு என்பது வெற்றியைக் குறிக்கும் என்பதால், அவன் எல்லா கிரகங்களையும் தன் மகன் பிறக்கும் சமயத்தில் அவன் ஜாதகத்தில் 11ம் வீட்டில் வைத்து அடைத்து விடுகிறான். அதில் எல்லா கிரகங்களும் இருக்குமேயாகில் அவனுக்கு தோல்வியே கிடையாது என்பது அவன் எண்ணம். இதை மனதில் கொண்டு ராவணன் இந்திரஜித்தின் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அத்தனை கிரகங்களும் இருக்குமாறு செய்து விட்டான்.

தேவர்கள் இதனால் மனம் பதைத்தனர். ஒரு அசுரன் இவ்வாறு பிறந்தால் இந்த உலகம் என்னாவது. அவனை மரணமே நெருங்கா விட்டால் அவனின் அக்கிரமங்களை எப்படி பொறுப்பது. அப்புறம் உலகத்தில் அநீதிதானே தலைவிரித்தாடும் என்று கலங்கினர். அப்போது நாரதர் சனிபகவானிடம் சென்று, “உன்னால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும். நீ நினைத்தால் அவனுக்கு நாசத்தை விளைவிக்க முடியும், நீதான் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சனி பகவானும் அவர் வேண்டுகோளுக்குகிணங்கி, மற்றவர்களை காப்பாற்றும் பொருட்டு, இந்திரஜித் பிறக்கும் சமயத்தில் தன் இடது காலை 12ம் வீட்டில் வைத்துவிட்டார். ஒருவர் ஜாதகத்தில் 12ம் வீடு என்பது நாசத்தைக் கொடுக்கு இடமாகும். இந்தக் கட்டத்தில் இடது காலை சனி பகவான் வைத்து விட்டதால், இந்திரஜித் ஜாதகத்தில் சனி பகவான் 12ம் இடத்தில் காணப்பட்டார். மற்ற கிரகங்கள் எல்லம் 11ம் இடத்தில் இருந்தன. 

ராவணன் குழந்தை பிறந்ததும் ஜாதகத்தைக் கணித்துப்பார்த்தான், சனி 12ம் இடத்தில் காணப்பட்டார். தன் எண்ணம் நிறைவேறாத காரணத்தால் கடும் சினம் கொண்டு, உடனே 12ம் இடத்தில் காலை வைத்த சனி பகவானின் இடது காலை வெட்டுமாறு கட்டளையிட்டான். 

இதனால் தான் சனி மந்தமாக சுற்றுகிறார். நீதி தேவனான சனி பகவான் செய்த அந்த செயல் அன்று மற்ற கிரகங்களை காத்தது  மட்டுமின்றி அநீதி அழியவும் காரணமாக இருந்தது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP