ஜாதகத்தில் ராகுவின் அமைப்பும் அதனால் வரக்கூடிய நோய்களும்

ராகு பகவான் எந்த ராசியில் இருந்தால் எந்த வகையான நோய்களை தருவார் என்று குறித்து இந்தப் பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
 | 

ஜாதகத்தில் ராகுவின் அமைப்பும் அதனால் வரக்கூடிய நோய்களும்

ராகு பகவான் எந்த ராசியில் இருந்தால் எந்த வகையான நோய்களை தருவார் என்று குறித்து இந்தப் பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

மருத்துவ ஜோதிடத்தில் ராகு பகவானுடைய காரகத்துவம்:

முதுமை - ஒழுக்கம் இல்லாதவர்களுடன் சேர்க்கை - எலும்பு - வயிற்றுப் புண் - கீழ் பார்வை - ஆபத்தான கட்டி (ராஜபிளவை) - கபம் - கெட்ட கனவுகள் - தோல் வியாதி - பாம்பு தீண்டி விஷம் - வாயு - இளைப்பு - இவை அனைத்தும் ராகுவின் மருத்துவ காரகத்துவங்களாகும்.

ஒருவரது ஜாதகத்தில் ராகு கிரகம் யோகம் செய்யக்கூடாது என்பார்கள். அவ்வாறு யோகம் செய்யும் போது, மிகப் பெரிய கெடுதலையும் செய்து விடுவார் என்பது பொதுவான கருத்து. அதற்கு அனுபவத்திலும் பல உண்மைகள் இருக்கின்றன.  

ஒருவரது ஜாதகத்தில் ராகு பலமாக அமைந்தால், பல நாள்பட்ட நோய்கள், கொஞ்சம் கொஞ்சமாக மறையும். உதாரணமாக ராகுவின் நக்ஷத்ரங்களான திருவாதிரை - ஸ்வாதி - ஸதயம் ஆகிய நக்ஷத்ரங்களில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். இந்த நக்ஷத்ரங்களில் பிறந்தவர்களுக்கு பொதுவாக பெரிய வியாதிகள் எதுவும் வராது. அதே போன்று ராகு லக்னங்களில் இருக்கப் பிறந்தவர்களுக்கும் நாள்பட்ட நோய்கள் அண்டாது.சித்த மருத்துவத்தில் ராகு வாத நாடியை குறிப்பவர்.

ராகுவின் பகை ராசிகள் - மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், கும்பம் ஆகியவைகள் ஆகும். இதில் அதிக பகை அதாவது, கொடும் பகை என்று சொல்லக்கூடியது மேஷம் மற்றும் சிம்மம். 

சூரியனுக்கு நேர் எதிர் கிரகம் ராகு. ராகுவிற்கு கருங்கோள் என்றொரு பெயரும் உண்டு. இவர் சனியின் அம்சம். (அதே வேளையில் கேதுவிற்கு செங்கோள் என்று வேறொரு பெயர் உண்டு. அவர் செவ்வாய் அம்சம்). சூரியன் எதையெல்லாம் நன்றாக இயக்குவாரோ அதை ராகு கெடுத்து விடுவார். உதாரணத்திற்கு சூரியன் பலமுடைய ஜாதகருக்கு கண் பார்வை சராசரி மனிதர்களை விட பிரகாசமாக இருக்கும். அந்த ஜாதகருக்கு ராகு எப்போது கெடுதல் செய்யும் இடங்களில் வருகிறாரோ அப்போது கண் சம்பந்தமான பிரச்சனைகளை சந்திப்பார்.

ராகு நீச்ச ராசியான ரிஷபத்தில் இருந்தால், சுவாசக் கோளாறு அவ்வப்போது வரும். விஷ வாயு தாக்கலாம். பீடி, சிகரெட் குடிப்பதால் வரக்கூடிய புற்றுநோய்களுக்கு ராகுவே காரணம்.ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரனும் ராகுவும் இணையும் போது அந்த ஜாதகர் காமம் சார்ந்த விஷயங்களில் அதிக நாட்டம் கொண்டவராக இருப்பார். 

ராகு தனது பகை கிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாயுடன் இணைந்து இருந்தால், ஜாதகருக்கு கண் பார்வை கோளாறு இருக்கலாம். தண்ணீரில் கண்டம் உருவாகலாம். இடி, மின்னல், மின்சாரம் மூலம் பாதிப்பு வரலாம். தோல் சம்பந்தமான வியாதிகள் (உதாரணம்: சோரொயாசிஸ்) போன்ற வியாதிகள் வருவதற்கும் ராகுவே காரணம்.

ராகு பகை கிரகமான சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய கிரகங்களின் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தால், அந்த ஜாதகர் கெட்ட பழக்க வழக்கத்தால் பல நோய்களை தேடிக் கொள்வார்கள். தனக்குரிய நோய்கள் பற்றி சிறிதும் அக்கறை காட்ட மாட்டார். இவர்களுக்கு பெரும்பாலும் மரண பயமே பாதி நோய்க்கு வழி வகுக்கும்.

ராகு குரூரர் தன்மை கொண்ட கிரகம் என்பதால் 3 - 6 - 12-ல் மறைவு பெற்றால் அதிர்ஷ்டம் தரும், அதே நேரம் 8-ல் நின்றால் நெஞ்சில் கபம் கட்டும். இதன் மூலம் சுவாசம் தடைபடும். உண்ணும் உணவு நஞ்சு ஆகும். சிலருக்கு விந்து பாதிக்கும். விந்து உற்பத்தி ஆகி செல்லும் குழாய்களில் அடைப்புகள் உருவாகும். தீராத காம இச்சை உடையவர்களாக இருப்பர்.

ராகு கிரகம் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களுக்கான அதிபதிகளுடன் இணைந்து இருந்தாலோ அல்லது இதன் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தாலோ தனக்கு உண்டான நோய்கள் குறித்து மன விரக்தி அடைவார். நோய் தீர்க்கும் மருந்து எடுத்துக் கொள்ளாமல், மாற்று மருந்துகள் எடுத்துக் கொண்டு அவதிப்படுவார்கள். தீர்க்க முடியாத நோய்களில் சிக்கி தவிப்பார்கள்.

ராகு லக்னத்திற்கு பாதகாதிபதியுடன் இணைந்து இருந்தாலோ அல்லது பாதகாதிபதியுடன் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தாலோ, அந்த ஜாதகருக்கு மரணத்திற்கு ஒப்பான கண்டங்கள் ஏற்படலாம். புதிய நோய்கள், தோல் அரிப்புகள், உடலில் கட்டிகள் வரக்கூடும். மருத்துவர் கண்டு பிடிக்க முடியாத மர்ம நோய்கள் வரக்கூடும்.

ராகு கிரகத்திற்கு பகை கிரகங்கள் அல்லது பாதகாதிபதிகள் பார்வை இருந்தால், ஜாதகருக்கு நோய் பயம் வாட்டி எடுக்கும். காற்றில் பரவும் தொற்று நோய்கள் தாக்கக் கூடும். அடிக்கடி மூச்சு திணறல் உண்டாகும். பெரு குடல், சிறுகுடல் வழியாக வாயுத் தொல்லை இருக்கக் கூடும். இதனால் மலச்சிக்கல் உண்டாகும்.

உணவு பரிகாரம்:

ராகுவினுடைய சஞ்சாரத்தால் ஒருவருக்கு நோய் வருகிறதென்றால் அவர் அதிகமான புளிப்பு சேர்க்கக்கூடாது. உணவில் புளிப்பை எந்தளவு கட்டுப்படுத்துகிறாரோ அந்தளவு அவருக்கு ராகுவின் வீர்யம் குறையும். அதே போல் தினமும் காலை வெறும் வயிற்றில் துளசி இலைகளை சாப்பிடுவதும் நன்மை தரும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP