ஆன்மீக கதை – என் பக்தர்களுக்காக நான் எதையும் செய்வேன்

குருஷேத்ரப் போரில்,கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே நடந்த கடும் போரில், ஒவ்வொரு நாளும், பாண்டவர்களிடம் கௌரவர்கள் தோல்வியடைந்து வரவே, பெரிதும் கலக்கமுற்ற துரியோதனன், மறுநாள் பீஷ்மர் எப்படியாவது அர்ச்சுனனைக் கொன்று விடவேண்டுமென்ற வாக்குறுதியைப் பெற்றுக் கொண்டான்.
 | 

ஆன்மீக கதை – என் பக்தர்களுக்காக நான் எதையும் செய்வேன்

குருஷேத்ரப் போரில்,கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே நடந்த கடும் போரில், ஒவ்வொரு நாளும், கௌரவர்கள், பாண்டவர்களிடம் தோல்வியடைந்து வந்தனர். இதைக்கண்டும் பெரிதும் கலக்கமுற்ற துரியோதனன், அடுத்த நாள் யுத்தத்தில் எப்படியாவது அர்ஜுனனைக் கொன்று விடவேண்டுமென்று பீஷ்மரிடம் வாக்குறுதி பெற்றுக் கொண்டான். பீஷ்மரும் துரியோதணின் விருப்பத்தின்படியே செயல்படுவதாக சபதமேற்கொண்டார்.

அதைத்தொடர்ந்து அர்ஜுனனை கொல்வதாக பீஷ்மர் எடுத்துள்ள சபதம் பகவான் கிருஷ்ணருக்குத் தெரிய வந்தது. அதைத் தடுத்து விடுவது என்ற நோக்கத்தோடு, கிருஷ்ணர் திட்டம் ஒன்றை வகுத்தார். அதுகுறித்து திரௌபதியிடம் கிருஷ்ணர், விரிவாக விளக்கி அவள் செய்ய வேண்டியது குறித்து எடுத்துரைத்தார்.

அதன் அவர் திரௌபதியிடம் நீ எப்படியாவது பீஷ்மர் தங்கியிருக்கும் பாசறைக்குச் சென்று அவர் பாதங்களைத் தொட்டு நமஸ்கரித்து அவர் ஆசியைப் பெற்றுவிடு என்று அறிவுறுத்தினார். மேலும். நீ அங்கு செல்லும்போது காலணிகளை அணிந்து சென்றால், வந்திருப்பது நீதான் என்பதை பீஷ்மர் அறிந்து கொண்டுவிடுவார் கூறி அவளது காலணிகளை கிருஷ்ணர் வாங்கி வாங்கி வைத்துக் கொண்டார்.

அதைத்தொடர்ந்து கும்மிருட்டான அந்த இரவு நேரத்தில் யுத்தப் பாசறையில், அவரது கட்டிலில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த பீஷ்மரின் பாதங்களைத் துழாவிக் கண்டறிந்த திரௌபதி, அவரது பாதங்களைத் தொட்டு தன் கண்களில் ஒற்றிக்கொண்டு, அவரை நமஸ்கரித்து எழுந்தாள்.

அந்த இருட்டிய வேளையில் வந்திருப்பவரின் உருவம் முழுவதும் அவரது கண்களுக்கு தெளிவாகப் புலப்படாவிட்டாலும் தன் பாதங்களைத் தொட்டு வணங்கியவள் ஒரு பெண்மணி என்பதை அறிந்து திடுக்கிட்டு, படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தார் பீஷ்மர். பின்னர் திரௌபதி மீண்டுமொருமுறை அவரது பாதங்களை கண்களில் ஒத்திக்கொண்டு வணங்கினாள். உடனே பீஷ்மர், திரௌபதியை ஆசிர்வதித்து, தீர்க்க சுமங்கலி பவ! என்று உச்சரித்தார்.

அதன் பின்னர் பீஷ்மர், அறையிலிருந்த விளக்கின் ஒளியைத் தூண்டிவிட்டு, வந்திருப்பவரை உற்று நோக்கியபோது,  தன்னிடம் ஆசிர்வாதம் வாங்கியவள் திரௌபதி என்பதை அவர் அறிந்தார். இவ்வாறு, தன் சபதத்தை நிறைவேற்ற முடியாமல் ஸ்ரீ கிருஷ்ணர்தான் செய்திருப்பாரென்று உடனடியாக ஊகித்து அறிந்த பீஷ்மர் திரௌபதியை அழைத்துக்கொண்டு பாசறையை விட்டு வெளியே வந்தார். 

அங்கு அவர் எதிர்பார்த்தபடியே பகவான் கிருஷ்ணர் காத்துக் கொண்டிருந்தார். மேலும் கிருஷ்ணர் அவரது திருக்கரத்திலில் திரௌபதியின் காலணிகளை ஏந்தி நிற்பதைக் கண்டு திடுக்கிட்டார். அதைத்தொடர்ந்து பீஷ்மர் கிருஷ்ணரை நோக்கி, பகவானே! இவ்வுலகமே தங்கள் திருவடிகளை வணங்கும்போது, தாங்கள் திரௌபதியின் காலணிகளை ஏந்தி நிற்பதா? என்று வினவினார்.

அதற்கு பதிலளித்துப் பேசிய கிருஷ்ணர், பீஷ்மரே! திரௌபதியும் அர்ச்சுனனும் என் பக்தர்கள். என் பக்தர்களுக்காக நான் எதையும் செய்வேன்! என்று பதிலளித்தார். இதுவே இறைவனானவன் தன் பக்தர்களிடத்து செலுத்தும் பண்பின் வீச்சு. அவன் தன்னைச் சரணடைந்த பக்தர்கள் எவராயிருந்தாலும் அவர்களை தக்க சமயத்தில் துணையிருந்து காப்பாற்றி வரும் காரணத்தால் மட்டுமே அவனை நாம் ஆபத்பாந்தவன் என்று அழைத்து வணங்குகிறோம்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP