ஆன்மிக செய்தி – சிவனை வணங்கும் முன் இதை தெரிந்துக் கொள்ளுங்கள்

நம்முடைய இந்து மத வழிபாட்டு முறைகளில் ஒவ்வொரு கடவுளை வழிபடுவதற்கும், ஒவ்வொரு ,முறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.
 | 

ஆன்மிக செய்தி – சிவனை வணங்கும் முன் இதை தெரிந்துக் கொள்ளுங்கள்

நம்முடைய இந்து மத வழிபாட்டு முறைகளில் ஒவ்வொரு கடவுளை வழிபடுவதற்கும், ஒவ்வொரு ,முறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. அவரவருக்கு உகந்த பூ, மந்திரங்கள், மற்றும் வழிபாட்டு முறைகள் கொண்டு பூஜிக்கும் போது, நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேற்றப்படுகிறது. ஈசனை  வழிபடுவதற்கும் சைவ சமயத்தில் நிறைய கட்டப்பாடுகள் உண்டு. அதைத் தெரிந்து கொண்டு அதன்படி வழிபட பயன்கள் அதிகம். இவை எல்லாவற்றையும் விட ,சிவபெருமானை வழிபடும்போது என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதையும் அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். 

முறையான சடங்குகளுடன் சீரான வழிபாடு இல்லாத இடத்தில் சிவனை வைத்து வழிபாடு செய்தால், அது சிவனைக் கோபமடையச் செய்யும்.அது போல் கண்ட இடங்களிலும் சிவலிங்கத்தை வைக்கக்கூடாது. வில்வ இலை, வில்வ பழம், குளிர்ந்த பால், சந்தனம் ஆகிய குளிர்ச்சியான பொருள்களே ஈசன் விரும்புவது. தாழம்பூவை சிவ பூஜைக்கு எப்போதும் வைத்து வழிபடக்கூடாது.துளசியும்  சிவ வழிபாட்டுக்கு உகந்தது இல்லை. 

அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படும் தேங்காயின்  தண்ணீரை சிவனுக்குப் படைக்கக் கூடாது. மஞ்சள் புனிதமானது என்றாலும், மஞ்சளை சிவனுக்கு வைத்து வழிபடக்கூடாது. அதேபோல் குங்குமத்தையும் சிவனுக்கு வைத்து வழிபடக் கூடாது. நந்தியாவட்டை மலர்களும் சிவனுக்கு உகந்தது அல்ல. 

சிவனுக்கு விருப்பமானவை வெந்நிற மலர்கள் தான். அதனால் வெண்ணிற மலர்களை வைத்து வழிபடலாம். வெள்ளைநிற அரளியை மாலையாக அணிவது கூடுதல் சிறப்பு.மிக முக்கியமாக சிவனுக்காக படைத்த உணவுகளை திரும்ப எடுத்து யாரும் உண்ணக்கூடாது.
பூஜை செய்யும் போது, இது போன்ற முக்கியமான தகவல்களை தெரிந்துக் கொண்டால் தெய்வக் குற்றம் ஏற்படாமல் காத்துக் கொள்ளலாம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP