ஆன்மீக செய்தி - ஏழு உலகையாளும் அரங்கனின் சிறப்புகள் 7

அரங்கமா நகருள் ஸ்ரீரங்கத்தில் பள்ளிக் கொண்டிருக்கும் அரங்கநாதப் பெருமாள் தரிசனம் எளிதில் கிடைத்திடாதப் பெரும்பேறு. அரங்கனின் திருக்கோயிலில் நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறார் உடையவர் ஸ்ரீராமானுஜர்.
 | 

ஆன்மீக செய்தி -  ஏழு உலகையாளும்  அரங்கனின்  சிறப்புகள் 7

அரங்கமா நகருள் ஸ்ரீரங்கத்தில் பள்ளிக் கொண்டிருக்கும் அரங்கநாதப் பெருமாள் தரிசனம் எளிதில் கிடைத்திடாதப் பெரும்பேறு. அரங்கனின் திருக்கோயிலில் நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறார் உடையவர் ஸ்ரீராமானுஜர்.ஸ்ரீரங்கப்பெருமாளை சேவித்து வருபவர்கள் வாழ்வு நலமாகிறது. நோய் நொடிகள் நீங்குகிறது. ஏழு பிரகாரங்களுடன் ஏழு திருமதில்களை கொண்டுள்ளது ஸ்ரீரங்கம் கோவில். 7 உலகங்களை அரங்கன் ஆளுமை செய்கிறார் என்பதன் உள்ளடக்கமே இது.நம்மை காத்து ரட்சிக்கும் திருவரங்கப் பெருமாளைப் பற்றிய சுவையான 7 முத்தான தகவல்கள்  இநதப் பதிவில்

1.  1) பெரிய கோவில் (2) பெரிய பெருமாள் (3) பெரிய பிராட்டியார் (4) பெரிய கருடன் (5) பெரியவசரம் (6) பெரிய திருமதில் (7) பெரிய கோபுரம் இப்படி அனைத்தும் பெரிய என்ற சொற்களால் வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம் திருக்கோயில் .

 2. ஏழு சேவைகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கண்டுகளிக்கும் சேவைகளாகும். (1) பூச்சாண்டி சேவை (2) கற்பூர படியேற்ற சேவை (3) மோகினி அலங்காரம், ரத்னங்கி சேவை (4) வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாஹனம் (5) உறையூர், ஸ்ரீரங்கம் மற்றும் ராமநவமி சேர்த்தி சேவை (6) தாயார் திருவடி சேவை (7) ஜாலி சாலி அலங்காரம்.

3. ஸ்ரீரங்கம் அரங்கநாதருக்கு 7 நாச்சிமார்கள் (1) ஸ்ரீதேவி (2) பூதேவி (3) துலுக்க நாச்சியார் (4) சேரகுலவல்லி நாச்சியார் (5) கமலவல்லி நாச்சியார் (6) கோதை நாச்சியார் (7) ரெங்கநாச்சியார்.

 4. (1) விருப்பன் திருநாள் (2) வசந்த உத்சவம் (3) விஜயதசமி (4) வேடுபறி (5) பூபதி திருநாள் (6) பாரிவேட்டை (7) ஆதி பிரம்மோத்சவம் என நம்பெருமாள் ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை  தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார்

5.  ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும். (1) கோடை உத்சவம் (2) வசந்த உத்சவம் (3) ஜேஷ்டாபிஷேகம், திருப்பாவாடை (4) நவராத்ரி (5) ஊஞ்சல் உத்சவம் (6) அத்யயநோத்சவம் (7) பங்குனி உத்திரம்.

6. (1) சித்திரை(2) வைகாசி (3) ஆவணி (4) ஐப்பசி (5) தை (6) மாசி (7) பங்குனி ஆகிய மாதங்களில் ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் உற்சவத்தில் 7ம் திருநாளன்று வருடத்திற்கு 7 முறை நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுவார்

 7. தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும் 30 நாட்களும் தங்க குடத்தில் புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும்.

ஏழேழு ஜன்ம பாபங்கள் விலகிட அரங்கமா நகரமாம் ஸ்ரீரங்கத்தில் பள்ளிக் கொண்ட பெருமாளை தரிசிப்போம்.பேரருள் பெறுவோம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP