புத்திர தோஷத்திற்கான எளிய பரிகாரங்கள்

நம்முடைய முன்னோர்கள் காலத்தே பயிர் செய் என்பதில் அதிக நம்பிக்கை உடையவர்கள். ஏற்ற வயதில், திருமணம், தக்க வயதில் மக்கட் பேறு என அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை மருந்து மாயம் இல்லாத ஆரோக்கிய வாழ்வு.
 | 

புத்திர தோஷத்திற்கான எளிய பரிகாரங்கள்

நம்முடைய முன்னோர்கள் காலத்தே பயிர் செய் என்பதில் அதிக நம்பிக்கை உடையவர்கள். ஏற்ற வயதில், திருமணம், தக்க வயதில் மக்கட் பேறு என அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை மருந்து மாயம் இல்லாத ஆரோக்கிய வாழ்வு. ஆனால் இன்றோ, காலம் கடந்து திருமணம்,அதனால் குழந்தை பேரின்மை. இதனால் எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற மனப்போக்கிலே இருக்கும் மக்கள். இது ஒரு புறம் இருக்க ஜோதிட ரீதியாக,புத்திர தோஷம் எதனால் ஏற்படுகிறது என்பதனை பற்றி தெரிந்துக் கொண்டு,அதற்குரிய பரிகாரத்தைச் செய்யலாம்.  

ஜோதிட ரீதியாக குரு பகவானிற்கு  புத்திரபாக்கியம் தருவதில் முக்கிய பங்குண்டு. குரு, புத்திரகாரகன் என்பதால்,புத்திரயோகத்தைத் தரக்கூடிய அதிகாரம் பெற்றவர்.எனவே குருவாலும், சந்திரனாலும் புத்திரதோஷம் உண்டானால், குருவிற்கு உரிய தலத்திற்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும். இதற்குரிய தலங்கலான திருவெண்காடு, திருக்கருகாவூர் சென்று, உரிய வழிபாடு, பூஜைகள் செய்தால் சந்தான பாக்கியம் கிட்டும். குரு பகவானுக்கு வியாழன்று அர்ச்சனை செய்வது சிறப்பு.வியாழக்கிழமை, திருச்செந்தூரில் அன்னதானம் செய்தால் புத்திர தோஷத்திற்கு மிகவும் நல்லது.

ராகு, கேதுவால் புத்திரதோஷம் ஏற்பட்டிருந்தால், வெள்ளியில் சிறிய நாகம் செய்து, மாரியம்மன் மற்றும் அம்மன், கோவில்களில் உள்ள உண்டியல்களில் போட்டால், தோஷம் நீங்கும்.

புதன், சுக்கிரனால் புத்திர தோஷம் ஏற்பட்டிருந்தால் சிவபெருமானை வழிபடலாம்.

செவ்வாய், சனியால் ஏற்படும் புத்திரதோஷத்திற்கு முருகனுக்கும், சிவனுக்கும் அபிஷேகங்கள் செய்யலாம். 

எந்தக் கிரகத்தினால், தோஷம் ஏற்பட்டதோ, அந்தக் கிரகத்தின் தசை அல்லது புத்திக்கு உரிய காலத்தில், அந்தக் கிரகத்திற்கு உரிய அதிதேவதைக்கு அர்ச்சனை செய்ய தோஷம் நிவர்த்தி ஆகும் என்பது நம்பிக்கை. குலதெய்வம் கோயிலில் அவரவரின் ஜன்ம நட்சத்திரத்தன்று அன்னதானம் செய்தாலும்  புத்திரத்தடை நீங்கும்.

எந்த தோஷம் இருந்தாலும், பிரதோஷத்தில் நீங்கி விடும் என்பது ஆண்டாண்டு காலமாக நிலவி வரும் நம்பிக்கை என்பதால்,பிரதோஷ நாளில் அபிஷேக வழிபாடு செய்து புத்திர பாக்கியம் பெறலாம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP