எளிமையான நவக்கிரக பரிகாரங்கள்

நவகோள்களில் எந்த ஒரு கிரகத்தினால் பாதிப்பு ஏற்பட்டாலும்,அதற்குரிய எளிமையான பரிகாரங்களை செய்துக் கொண்டாலே நிம்மதியான வாழ்க்கையை பெறலாம்.
 | 

எளிமையான நவக்கிரக பரிகாரங்கள்

நவகோள்களில் எந்த ஒரு கிரகத்தினால் பாதிப்பு ஏற்பட்டாலும்,அதற்குரிய எளிமையான பரிகாரங்களை செய்துக் கொண்டாலே நிம்மதியான வாழ்க்கையை பெறலாம். 

சூரியன்:

நம் கண் முன்னால் உலவும் தெய்வங்களாக சூரியனையும் சந்திரனையும் சொல்வதுண்டு. நாம் நமது முன்னோர்களுக்கு செய்யும் திதியின் பலனை,நமது மூதாதையர்களிடம் கொண்டு சேர்ப்பவர் சூரியன். தினந்தோறும் அதிகாலையில் உடலை சுத்தி செய்தவுடன்,கிழக்கு திசையை நோக்கி சூரிய பகவானை வணங்குவ மிகவும் நல்லது. மேலும் ஏதேனும் புண்ணிய நதிகளில் நீராடியவுடன், முழங்கால் அளவு தண்ணீரில் நின்று கொண்டு சூரியனை நோக்கி இரண்டு கைகளிலும் நீர் விடுவது சூரியனுக்கு மிகவும் உகந்ததாக சொல்லப்படுகிறது. 

சந்  திரன் :

மனக்காரகனான சந்திரனின் பலம் என்றைக்கெல்லாம் அதிகரிக்கிறதோ, அன்று மனித மூளையின் செயல்பாட்டு திறனும் அதிகரிக்கிறது. சந்திரனின் வளர்பிறை காலங்களில் மனிதனின் அறிவாற்றல் அதிகரிக்கிறது. தேய்பிறையில் அறிவாற்றல் குறைகிறது. இதன் காரணமாக தான்,நல்ல காரியங்களை வளர்பிறையில் துவங்குகிறார்கள். 

திங்கட்கிழமையில் விரதமிருந்து கோவிலுக்குச் சென்று மாலையில் தீபம் ஏற்றி வழிபடுவது சந்திர தோஷத்தை நீக்கும் பரிகாரம் ஆகும்.

செவ் வாய் :

பகைவரைக் கண்டு அஞ்சாத உள்ளத்தை தரும் சிறப்பைப் பெற்றவர் செவ்வாய் பகவான்.  செவ்வாய் தோஷம் இருப்பதால் திருமணம் போன்ற சுப காரியங்கள் தள்ளிப் போகும் என்பார்கள். 

செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து அருகில் உள்ள கோவில்களில் தீபமேற்றுவது செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைக்கும்.துர்கைக்கு எலுமிச்சை தீபமும் ஏற்றலாம்.

புத ன் :

ஒருவருக்கு வாக்கு வன்மை, பேச்சினாலே பிறரை வசீகரிக்கும் திறன், பண்பு, கணிதம், ஜோதிடம், சிற்பம், பன்மொழிப் புலமை தருவது, எழுத்தாற்றல், கவிபாடும் திறன் ஆகியவற்றைத் தருபவர் புதன். நமது ஜாதகத்தில் புதன் தோஷமாக இருந்தால், கல்வித்தடை ஏற்படும். 

புதன் கிழமைதோறும் விரதமிருந்து ஏதேனும் கோவிலில் தீபமேற்றி வழிபடுவதுடன், படிக்க வசதியில்லாத ஏழைக் குழந்தைகளுக்கு உடைகள், புத்தகம், நோட்டுகள், பேனா, பென்சில் போன்றவற்றை வழங்குவதும் புதனால் ஏற்படும் தோஷத்தை  நீங்கும். 

வியா ழன் :

திருமணம், குழந்தைப் பேறு இரண்டும் நம் வாழ்வின் மிக முக்கியமான திருப்பங்கள் ஆகும். அவற்றை நமக்குத் தருபவர் வியாழன். வியாழக்கிழமைகளில் விரதமிருந்து மாலை நேரத்தில் ஏதேனும் ஒரு கோவிலில் தீபமேற்றி வழிபடுவதுடன், பெரியவர்கள், துறவிகள், மகான்கள், சாதுக்கள் ஆகியோரை வணங்கி அவர்களின் ஆசியைப் பெறுவதாலும் வியாழனால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி அனைத்து விதமான நலன்களையும் பெறலாம்.

சுக்கி ரன் :

கலையுணர்ச்சி, அழகுணர்ச்சி, காதல், போகம் போன்றவற்றிற்கு அதிபதியாக விளங்குபவர் சுக்கிரன். வாழ்க்கையில் நமக்கு கிடைக்கும் சுகங்களை,சுக்கிரனின் அருள் இருந்தால் தான் மன திருப்தியோடு அனுபவிக்க வேண்டும். 

திருமால் சந்நிதியில் விளக்கேற்றி வழிபடுவதுடன் வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு உடை, ஏழைகளுக்கு அன்னதானம் போன்றவற்றைச் செய்வதால் சுக்கிரன் தோஷம் நீங்கி சுகம் பெறலாம்.

சனீ ஸ்வரன்  :

நவக்கிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற இவரே,  நீண்ட ஆயுளுடன், எண்ணிலா நல்ல செல்வத்தை வாரி வழங்குபவர். 

சனிக்கிழமைகளில் விரதமிருந்து மாலையில் ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபடுவதுடன் எள் கலந்த சாதம் படைத்து நைவேத்தியம் செய்வது, ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது, தினந்தோறும் காக்கைக்கு உணவு வைப்பது என  சனீஸ்வரனுக்குப் உகந்த விஷயங்களை செய்தால்,அவரால் ஏற்படக்கூடிய தோஷங்கள் அனைத்தையும் நீக்கும்.

ராகு  :

ஜாதகத்தில் புத்திர தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், சயன தோஷம், காலசர்ப்ப தோஷம் ஆகியவை ராகுவினால் ஏற்படக்கூடிய தோஷங்களாகும்.அவர்கள் ராகுவிற்குரிய பரிகாரங்களைச் செய்து கொள்வது நன்மை பயக்கும். அருகில் உள்ள கோவில்களில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கில் நெய் சேர்த்து வருவது ராகுவிற்குரிய தோஷப் பரிகாரமாக விளங்கும்.

கே து  :

உலக பந்தங்களில் சிக்காமல், ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்கள் கேதுவின் அருள் பெற்றவர்களே. சரும நோய்கள், பில்லி சூனிய துன்பங்கள் போன்ற தொல்லைகள் கேது தோஷத்தினால் ஏற்படக்கூடியது. 

தினம்தோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி கேதுவை வழிபடுவதுடன், முடிந்தவர்கள்,காஞ்சிபுரத்திற்கு அருகேயுள்ள சித்ரகுப்தர் கோவிலுக்குச் சென்று வழிபடுவதும் கேது தோஷங்களை நீக்கி நிம்மதியான வாழ்வைத் தரும். 

- newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP