குழந்தைகளுக்கு பேச்சாற்றல் கொடுக்கும் சரஸ்வதி இவள்!

கிராமங்களில், குழந்தைகள் பேச ஆரம்பியத்தவுடன், பேச்சியம்மன் கோவிலுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்று, குழந்தைகளின் நாக்கில், திருநீறு, குங்குமம் பூசப்பட்ட குச்சியால், ஒம் என எழுதுவர். அதோடு, அம்மனுக்கு, சர்க்கரை பொங்கல் படைத்து வழிபடுவர்.
 | 

குழந்தைகளுக்கு பேச்சாற்றல் கொடுக்கும் சரஸ்வதி இவள்!

தமிழக கிராமங்களில், பல்வேறு பெயர்களில் அம்பிகை வழிப்படப்படுகிறாள். இதில் பேச்சியம்மனும் ஒன்று. இந்த பேச்சியம்மன் யார்? கல்விக்கு அதிபதியான சரஸ்வதிதான். பேச்சு திறன் வளர்ப்பவள் பேச்சியம்மன், பேச்சாயி என அழைக்கப்பட்டு வழிப்படப்படுகிறாள்.

இந்த பேச்சியம்மன் தான், பெரியாச்சி, பேராச்சி, பேராயி, பெரியாயி, பெரியாண்டி என பல பெயர்களின் வழிப்படப்படுகிறாள். குழந்தைகளுக்கு சரியாக பேச்சு வராவிட்டால், இந்த அம்மனுக்கு வேண்டிக் கொண்டால், அந்த குறை தீரும். 

கிராமங்களில், குழந்தைகள் பேச ஆரம்பியத்தவுடன், பேச்சியம்மன் கோவிலுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்று, குழந்தைகளின் நாக்கில், திருநீறு, குங்குமம் பூசப்பட்ட குச்சியால், ஒம் என எழுதுவர். அதோடு, அம்மனுக்கு, சர்க்கரை பொங்கல் படைத்து வழிபடுவர்.  

இதனால், குழந்தைகளுக்கு திக்கு வாய் இல்லாமல், சரளமாக பேசும் என்பது ஐதீகம்.மதுரையிலுள்ள பேச்சியம்மன் கோயில் மிகவும் பிரபலமானது.சிறு சிறு கிராமங்களில் தனிச் சந்நதியோடும் இந்த பேச்சியம்மன் திகழ்கிறாள். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP