தமிழகத்தில் உள்ள சரஸ்வதி கோவில்கள் (தொடர்ச்சி)

வேதங்களே ஈசனை வணங்கிய தலம். இக்கோவிலின் பிராகாரத்தில் மிகப்பெரிய சரஸ்வதி வீற்றிருக்கிறாள். கரங்களில் வீணையில்லை; மாறாக சுவடிகள் உண்டு. இத்தலத்து நாயகியான உமையம்மையின் குரல், யாழைவிட இனிமையானது என்பதால், தான் வீணையில்லாது அமர்ந்திருக்கிறாள்.
 | 

தமிழகத்தில் உள்ள சரஸ்வதி கோவில்கள் (தொடர்ச்சி)

நாட்டில், சரஸ்வதிக்கு உள்ள முக்கியமான கோவில்களை, இதற்க்கு முந்தய கட்டுரையில் பார்த்தோம்.   இன்று, மேலும் சில, சரஸ்வதி கோவில்களை பார்ப்போம்.

ஞானவாணி (திருக்கண்டியூர்)

இத்தல ஈசனுக்கு பிரம்ம சிரகண்டீசர் என்று பெயர். பிரம்மாவுக்கான தனிக்கோவில் இது என்று சொல்லலாம். ஜீவன் ததும்பி நிற்கும் அற்புதச் சிலை. சரஸ்வதி தேவி தனது கணருடன், நான்கு கரங்களோடு கல்வியும், ஞானமும் சேர்ந்திழைத்துத் தரும் ஞான வாணியாக வீற்றிருக்கிறாள். 

இருவரையும்  தரிசிக்க, தஞ்சாவூர் –-திருவையாறு பாதையில் 8 கி.மீ. தொலைவு செல்ல வேண்டும். இந்தக் கோவிலுக்கு எதிரிலேயே ஹரசாபவிமோசனப் பெருமாள் ஆலயமும் உள்ளது. ஈசன் பிரம்மாவின் தலையைக் கொய்ததால் ஏற்பட்ட தோஷத்தை இப்பெருமாள் தான் நீக்கினார். 

கலைவாணி (வாணியம்பாடி)

இத்தலத்தின் பெயரே வாணி என்றுதான் தொடங்குகிறது. பிரம்மாவின் சாபத்தால், வாணியான சரஸ்வதி பேசும் சக்தியை இழந்தாள்.  அதனால்,  இத்தல அதிதீஸ்வரரையும், பெரியநாயகியையும் பூஜித்து தன்னுடைய இயல்பை பெற்றாள். சிவனும், பார்வதியும் வாணிக்கு அருள் செய்ததோடு அவளைப் பாடும்படியும் கூறினர். 

அப்படி தெய்வ தம்பதியின் அருளாணையை ஏற்று, வாணி அழகாகப் பாடியதால் வாணியம்பாடி என்றானது. ஆலயத்தின் முகப்பிலேயே  சிவன் – -பார்வதியை கலைவாணி வழிபடும், சுதைச் சிற்பம் உள்ளது. தனிச் சந்நதியில், வீணையேந்திய வாணி அருள்கிறாள். வேலூர் –-கிருஷ்ணகிரி பாதையில், இத்தலம் அமைந்துள்ளது.

 வேத சரஸ்வதி (வேதாரண்யம்)

வேதங்களே ஈசனை வணங்கிய தலம். இக்கோவிலின் பிராகாரத்தில் மிகப்பெரிய சரஸ்வதி வீற்றிருக்கிறாள். கரங்களில் வீணையில்லை; மாறாக சுவடிகள் உண்டு. இத்தலத்து நாயகியான உமையம்மையின் குரல், யாழைவிட இனிமையானது என்பதால், தான் வீணையில்லாது அமர்ந்திருக்கிறாள். 

அதனாலேயே இத்தலத்து அம்பாளின் திருப்பெயர் யாழைப் பழித்த மொழியம்மை. நாகப்பட்டினத்திலிருந்து 45 கி.மீ., தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

அட்சர பீடம் (திருவாரூர்)

திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் அட்சரங்களே தனிச் சந்நதியில் கொலுவிருக்கின்றன. இந்த அட்சரங்களை தனி இறைவன் போல வழிபடுகிறார்கள். அட்சர பீடம் என்று அதற்குப் பெயர். 51 அட் சரங்களின் ஒலியில் உலகமே அடக்கம் என்பதை உணர்த்திடும் வகையில் உயிர் எழுத்துகளை ஒரு திருவாசியின் முகப்பிலும் மெய்யெழுத்துகளை பின்புறமும் செதுக்கி ஆவாஹனம் செய்துள்ளனர்.

இது அகஸ்தியரால் ஸ்தாபிக்கப்பட்டதாக கூறுவர். கமலாம்பிகையை சுற்றி வரும்போது தென்புறம் அட்சரபீடத்தையும், வடபுறம் சரஸ்வதி சந்நதியையும் தரிசிக்கலாம்.


அரண்மனை சரஸ்வதி (தஞ்சாவூர்)

தஞ்சாவூர் ராஜவீதி அரண்மனை வளாகத்தில் மராட்டிய மன்னர் காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிறப்பான சரஸ்வதி ஆலயம் உள்ளது. கல்வி வளம் சிறக்க வணங்கவே எழுப்பப்பட்ட ஆலயமாக இது கருதப்படுகிறது.

மேலும், சரஸ்வதி கோவில்கள் பற்றிய விபரங்களை, நாளை பார்க்கலாம்

தொடரும்....

Newstm.in 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP