குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு வேலை இழக்கும் அபாயம்??

இந்நிலையில், தனுசுக்கு வரும் குரு, தன் இன்னொரு சொந்த வீடான மீனத்திற்கு 10ல் அமர்கிறார். ஜோதிட ரீதியில், 10ம் இடம் என்பது தொழில் ஸ்தானத்தை குறிக்கிறது. ஒரு ஜாதகரின் 10ம் இடத்தை வைத்தே அவர் இந்த வேலைக்கு அல்லது தொழிலுக்கு ஏற்றவர் என்பதை முடிவு செய்துவிடலாம். பொதுவாக, 10ல் குரு பதவியை பறிப்பார் என்பது ஜோதிட மொழி. அதே போல், இந்த கால கட்டத்தில் பல்வேறு சங்கடங்களை சந்திக்க நேரிடும்
 | 

குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு வேலை இழக்கும் அபாயம்??

இந்த ஆண்டு குரு பெயர்ச்சி அக்டோபர் 28ல் நிகழ உள்ளது. விருச்சிக ராசியிலிருந்து, தனுசு ராசிக்கு நகரும் குருவின் பெயர்ச்சியால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் என்பதை தொடர்ந்து பார்த்து வருகிறோம். 

குருவின், 5,7,9ம் இட பார்வைகளால், மேஷம், மிதுனம் மற்றும் சிம்ம ராசிக்காரர்கள் அதீத பலன் அடையப்போகிறார்கள் என்று இதற்க்கு முந்தைய பகுதியில் பார்த்தோம். செவ்வாயின் வீடான விருச்சகத்திலிருந்து, சொந்த வீடான தனுசு ராசிக்கு இடம் பெயரும் குருவால், சில ராசிகளுக்கு சோதனையும் நிகழும் என்பது ஜோதிடத்தில் முன்னோர் வாக்கு. 

அதாவது பொதுவாக குரு தான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு அள்ளிக்கொடுப்பதில் வல்லவர். அதன்படிதான் மேற்கண்ட மூன்று ராசிகளுக்கும் பலன் சொல்லப்பட்டது. 

குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு வேலை இழக்கும் அபாயம்??

இந்நிலையில், தனுசுக்கு வரும் குரு, தன் இன்னொரு சொந்த வீடான மீனத்திற்கு 10ல் அமர்கிறார். ஜோதிட ரீதியில், 10ம் இடம் என்பது தொழில் ஸ்தானத்தை குறிக்கிறது. ஒரு ஜாதகரின் 10ம் இடத்தை வைத்தே அவர் இந்த வேலைக்கு அல்லது தொழிலுக்கு ஏற்றவர் என்பதை முடிவு செய்துவிடலாம். 

அப்படி பார்க்கும்போது, கோச்சார ரீதியில், மீனா ராசிக்கு 10ம் இடத்தில் குரு அமரப்போகிறார். பொதுவாக, 10ல் குரு பதவியை பறிப்பார் என்பது ஜோதிட மொழி. அதே போல், இந்த கால கட்டத்தில் பல்வேறு சங்கடங்களை சந்திக்க நேரிடும். 

எனினும், இது பொதுவாக மற்ற ராசிக்காரர்களுக்கு பொருந்தலாம். மீன ராசியும், குருவின் ஆதிக்கம் பெற்றதே. அவர் அமர உள்ள தனுசு ராசியும் குருவினுடையதே. எனவே, 10ல் குரு வருவதால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. 

ஆனால் இந்த ராசிக்காரர்கள், இந்த ஓராண்டில், புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. கூட்டு தொழில், கூட்டாளிகளை நம்பி முதலீடு செய்தல், நண்பருக்கு உதவுகிறேன் என ஜாமின் கையெழுத்து போடுதல் போன்றவை கூடாது. 

தனுசு ராசியில் ஏற்கனவே கேதுவும்,சனியும் உள்ளனர். அவர்களுடன் தற்போது குருவும் இணைகிறார். போதாததற்கு, மிதுனத்திலிருந்து, ராகு ஏழாம் பார்வையாக பார்க்கிறார். 

குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு வேலை இழக்கும் அபாயம்??

எனவே, மீன ராசிகாரர்கள், காதல் விவகாரத்தில் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. ஆண்கள், பெண்களிடமும், பெண்கள், ஆண்களிடமும் பார்த்து பழகுவது நல்லது. இந்த காலா கட்டத்தில் பல தவறுகள் நடக்க புத்தி தடுமாறும். மிக எச்சரிக்கையாக இருந்தால் அவமானத்திலிருந்து தப்பலாம். நல்லவர் யார், கேட்டவர் யார் என்பதை உங்களுக்கு எடுத்துக்காட்டுவதோடு, உங்கள் கூடவே சுற்றி சமயம் பார்த்து கவிழ்த்து விடும் துரோகி யார் என்பதையும், இந்த 10ம் இட குரு உங்களுக்கு புரிய வைப்பார்.

வேலை, தொழில் ஆகிய இரண்டிலும், இருக்கும் இடத்தில் பல குடைச்சல்கள் வரலாம். பொறுத்து போவது நல்லது. முன் கோபம், அவசரம் கூடாது. கல்வியில் அதிக அக்கறை செலுத்தி படித்தால் மட்டுமே சாதிக்கலாம். வியாழக்கிழமை தோறும், சிவன் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தியை தரிசித்து வழிபட்டு வந்தால், துர்பலன்களில் இருந்து தப்பலாம். 

பிற ராசிகளுக்கு 10ல் குரு அமர்ந்தால் ஏற்படும் சங்கடங்களை விட தனுசு, மீன ராசிக்காரர்களுக்கு சற்று குறைவான தான்  குடைச்சல் கொடுப்பார் குருநாதர். எனவே, நடப்பது அனைத்தும் இறைவன் செயல் என்பதை மனதில் வைத்து, எதற்கும் கலங்காமல், உணர்ச்சிவசப்படாமல் இருந்தால், குரு அடுத்த ஆண்டு அள்ளிக்கொடுப்பார். அதுவரை அமைதியாக காத்திருங்கள். 

இவை அனைத்தும் பொதுவான பலன்களே. அவரவர் ஜாதக கட்டத்தில் குரு மற்றும் பிற கிரகங்கள் அமைத்திருப்பது பொருத்து அவர்களுக்கான பலன்கள் மாறுபடலாம். 
 

குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை!

குரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு?

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP