சிரசு வடிவில் அருள்பாலிக்கும் படவேடு ரேணுகாம்பாள்

தமிழகத்தில் அமைந்துள்ள சக்தி பீடங்களில் முக்கியமானது படவேட்டம்மன் திருக்கோயில். தன்னை நாடி வரும் பக்தர்களின் கோரிக்கைகளை தாயன்புடன் செவி சாய்த்து அதை நிறைவேற்றித் தரும் கருணைத் தாயே படவேட்டம்மன்.
 | 

சிரசு வடிவில் அருள்பாலிக்கும் படவேடு ரேணுகாம்பாள்

தமிழகத்தில் அமைந்துள்ள சக்தி  பீடங்களில் முக்கியமானது படவேட்டம்மன் திருக்கோயில். தன்னை நாடி வரும் பக்தர்களின் கோரிக்கைகளை தாயன்புடன் செவி சாய்த்து அதை நிறைவேற்றித் தரும் கருணைத் தாயே படவேட்டம்மன்.பெண் தெய்வத் திருத்தலங்களில் முக்கியமான இத்திருக்கோயிலில் அம்மன் (சிரசு மட்டும்) சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய  மும்மூர்த்திகளையும் உடன் கொண்டு பேருருவாக காட்சியளிக்கிறார். எனவே இத்திருத்தலத்தில் வீற்றிருக்கும் படவேட்டு அம்பிகையை வழிபட முப்பத்து முக்கோடி தேவர்களையும் வழிபாடு செய்த  பலன் கிடைக்கும்.

ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த பாணலிங்கமும், சிலா சிரசும், சுதையினாலான அம்மன் முழு திருவுருவமும் கருவறையில் அமைந்துள்ளது. மற்ற அம்மன் கோயில்களில் குங்குமம்தான் பிரசாதமாக வழங்கப்படும். இங்கு சற்று தொலைவில் உள்ள ஜமதக்னி முனிவர் வாழ்ந்ததாக கருதப்படும் ஆசிரமத்தில் யாகம் செய்த இடத்தில் இருந்து வெட்டி எடுக்கப்படும் மண் பிரசாதமாக வழங்கப்படுகிறது. வழக்கமாக  அம்மன் கோயில் சுற்றுசுவர்களில் காணப்படும் சிம்ம வாகனத்திற்கு பதிலாக, இந்த திருக்கோயில் சுவற்றில் பசுவே காணப்படுகிறது. அதேபோல் அம்மன் கோயிலில் கருவறை முன் உள்ள பலி பீடம் எதிரே யாழிக்கு பதில் இங்கு எருது உள்ளது.கேட்ட வரம் தரும் ரேணுகாம்பாள் கோயில் திருவண்ணாமலை   மாவட்டம் போளூர் அடுத்த படவேட்டில் அமைந்துள்ளது சுமார் 2000  ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக கூறப்படும் இக்கோயிலில் மூலவராக நமக்கெல்லாம் அருள் பாலித்து வருகிறாள் அன்னை ரேணுகாம்பாள்.

படவேடு ரேணுகாம்பாள் திருக்கோயில் ஸ்தல வரலாறு:

ரைவத மகாராஜனின் மகளாக பிறந்த ரேணுகாதேவி,ஜமதக்னி முனிவரை மணம் செய்துக் கொள்கிறாள். பரசுராமரை பெற்றெடுக்கிறாள். பதிவிரதை என்பதால், தினமும் கணவரின் பூஜைக்கு  கமண்டல நதியில் இருந்து சுடப்படாத மண்பானையில் தண்ணீர்  எடுத்து வருவது வழக்கம். அதேபோல் ஒருநாள் தண்ணீர் எடுத்துவரும்போது வான வீதியில் சென்ற  கந்தர்வன் நிழலை நீரில் கண்டு அவன் அழகில் மயங்கி ஆச்சர்யம் அடைந்தாள். இதனால் மண் குடம் உடைந்து விடுகிறது. இதை  ஜமதக்னி முனிவர் ஞானக்கண்ணால் கண்டு கோபம் கொண்டார். உடனே மகன் பரசுராமனை அழைத்து தாயின் தலையை வெட்டி கொண்டு வரும்படி  உத்தரவிடுகிறார்.

சிரசு வடிவில் அருள்பாலிக்கும் படவேடு ரேணுகாம்பாள்

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற கொள்கையை உடைய  பரசுராமரும் தாயின் தலையை துண்டித்தார். அப்போது அதை தடுக்க முயன்ற சலவைப்பெண்ணின் தலையையும் துண்டித்தார்.  பின்னர் தாயின் தலையை துண்டித்துவிட்டதாக தந்தையிடம் வந்து கூறினார். இதில் மகிழ்ந்துபோன ஜமதக்னி முனிவர், பரசுராமனிடம்,“உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்” என கூறினார். உடனே பரசுராமன் ‘தாயை உயிர்பித்து தாருங்கள்‘ என வரம் கேட்டார்.ஜமதக்னி முனிவர் கமண்டல நீரை மந்திரம் ஓதி அதை பரசுராமரிடம் கொடுத்து, தலையையும், உடலையும் ஒன்றாக வைத்து இந்த நீரை தெளித்தால் உன் தாய் உயிர் பெறுவாள் என கூறினார். அதை பெற்றுக்கொண்ட பரசுராமர் மகிழ்ச்சியில் வெட்டப்பட்டு கிடக்கும் தாயின் தலையை, அருகே உள்ள சலவை  பெண்ணின் உடலோடும், சலவை பெண்ணின் தலையோடு தாயின் உடலையும்  வைத்து இணைத்து உயிர்பித்தார். சலவைப்பெண்ணின் உடலோடு இணைக்கப்பட்ட ரேணுகாதேவியின் தலையே படவேடு கோயிலில் ரேணுகாம்பாளாக அருள்பாலிக்கிறார் என்பது புராணம்.  

அன்னை ரேணுகாம்பாள் திருக்கோயில் மகிமை

திருமணம், குழந்தை வரம் வேண்டியும் பக்தர்கள் வேண்டிக்கொண்டால் விரைவில் திருமணம், குழந்தை பேறு கிடைக்கும். எந்த வகை நோயாக இருந்தாலும் இங்கு வந்து வழிபட்டால் உடனே குணமாகிறது எனப் பரவசப்படுகின்றனர் பக்தர்கள்.மேலும்அம்மை நோய் கண்டவர்கள் கோயிலுக்கு வந்து விரதமிருந்து அம்மனுக்கு சேவை செய்து வேண்டிக்கொண்டால் 3 அல்லது 5 நாட்களில் அம்மை இறங்கிவிடும் எனவும் சொல்கிறார்கள் பக்தர்கள்.

அன்னைக்கு நன்றிக்கடன்

பிரார்த்தனைகள் நிறைவேறிய மகிழ்ச்சியில் அன்னைக்கு நன்றிக்கடனாக பக்தர்கள்  எடைக்கு எடை நாணயம் செலுத்துகின்றனர். நெய் தீபம் ஏற்றுதல், சிலைக்கு கண்ணடக்கம், உருவ பொம்மைகள், புடவை போன்றவை நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர். வேப்பிலை ஆடை, அங்கபிரதட்சணம், தலைமுடி காணிக்கை, காது குத்துதல், தொட்டில் கட்டுதல், ஆடு, மாடு, கோழி போன்றவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர். கோடி தீபம் ஏற்றுதல் இத்திருதலத்தின் சிறப்பு அம்சமாகும்.

படவேடு சென்று அன்னை ரேணுகாம்பாளை தரிசிக்க நம்மை பீடித்திருக்கும் பில்லி, சூனியம், நோய் நொடிகள் உள்ளிட்ட அனைத்து  பிணிகளும் நீங்கிடும். வளமான வசந்தம் வீசும் வாழ்க்கைக்கு தனது அருளை அள்ளித் தருகிறாள் அன்னை படவேடு ரேணுகாம்பாள்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP