பிறவியில் உயர்வு, தாழ்வு இல்லை!

உருவத்தில் வேற்றுமை பாராட்டி, உயர்வு தாழ்வு எனப் பாகுபாடு பார்த்து, அமிர்தம் குடிக்கும் பாக்யத்தை நீங்கள் இழந்து விட்டீர்கள். பிறவியில் உயர்வு, தாழ்வுகள் இல்லை. அனைத்து உயிர்களிடத்திலும் நான் இருக்கிறேன். அதை அறிந்தும்,நீங்கள், வேற்றுமை பார்த்ததால், நல்ல பாக்கியத்தை இழந்துவீட்டிர்கள்.
 | 

பிறவியில் உயர்வு, தாழ்வு இல்லை!

உதங்கர்  என்ற முனிவர் இருந்தார். கிருஷ்ணனின் பரம பக்தர். மஹாபாரத யுத்தத்தின்போது, குருஷேத்திரத்தில், கிருஷ்ண பரமாத்மா, விஸ்வரூபம் எடுத்த் காட்சியைக் காணக் கொடுத்து வைக்கவில்லையே என வருத்தப்பட்டார். 

அதையறிந்த பரமாத்மா, அவருக்கு விஸ்வரூப தரிசனம் தந்தருளினான் , ஆனந்த பரவசத்தில் மூழ்கினார் உதங்கர். ‘வேறு என்ன வேண்டும்’ என, கேட்டான் கிருஷ்ணன். 

'இதைவிட வேறென்ன வேண்டும்’ என்றார் உதங்கர். கிருஷ்ணன் மீண்டும் வற்புறுத்தவே, 'எனக்கு எப்போது தாகம் எடுத்தாலும், நான் வேண்டும்போது, தண்ணீர் கிடைக்க வேண்டும்'' என்றார் உதங்கள். 

’நிச்சயம்! ஏதோ ஒரு வடிவில், நானே உங்களுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுப்பேன்’ என்றான் கிருஷ்ணன். 
நாட்கள் கடந்தன. ஒருநாள், பாலைவனத்தில் நடந்து சென்றுக்கொண்டிருந்தார் உதங்கர். அப்போது அவருக்கு,கடும் தாகம் எடுத்தது. 'கண்ணா, தாகம்’ என்று கண்களை ​மூடித் துதித்தார்.

அடுத்த நிமிடமே, அவர் எதிரில்  நான்கு நாய்களுடன், புலையன் ஒருவன் வந்தான். கையில் தோல் பை வைதிருந்தான். அவனை பார்க்கவே, உதங்களுக்கு அருவெறுப்பாக இருந்தது. தோல் பையில் வைத்திருந்த தண்ணீரை ,ஒரு குவளையில் எடுத்தான். 

‘சுவாமி! தண்ணீர் குடியுங்கள்’ என்றான்  புலையன். பார்க்கவே பிடிக்காத அந்த புலையனிடமிருந்து தண்ணீர் குடிப்பதை விட, தாகத்தில் தவிப்பதே மேல் என, உதங்கள் நினைத்தார், தண்ணீர் வேண்டாம் என கூறிவிட்டார். அந்த புலையனும் சென்று விட்டான்.

‘நான் கேட்ட போது தண்ணீர் தருவேன் என கூறினாயா கிருஷ்ணா; ஏன் தரவில்லை என, மனதுக்குள் கேட்டுக் கொண்டார் உதங்கர்.

அடுத்த நிமிடம், கிருஷ்ணன் அவர் முன் தோன்றினான்.  ‘தண்ணீர் குடித்தீர்களா‘ என, கேட்டான் கிருஷ்ணன். 
‘ எங்கு தந்தாய்? புலையன் தான் அழுக்கு குவளையில் தண்ணீர் கொண்டு வந்தான்’ என்றார் உதங்கர். 
'தாகம் எடுக்கும்போது தண்ணீர் வேண்டும் என்றீர்கள். அதற்கு ஏற்பாடு செய்தேன்.நீங்கள் தண்ணீர் வேண்டாம் என, கூறிவிட்டீர்கள்’ என்றான் கிருஷ்ணன். 

'கிருஷ்ணா! அந்த தண்ணீரை, ஒரு புலையன் கையிலா கொடுத்தனுப்புவாய். வேறு
 யாரும் கிடைக்கவில்லையாஉனக்கு என்றார் உதங்கர்.  
‘நீங்கள் நன்கு படித்தவர்கள்,. உடலுக்கும், ஆத்மாவுக்கும் உங்களுக்கு வேறுபாடு தெரியும் என நினைத்தேன்.
என் மீது நீங்கள் வைத்துள்ள பக்திக்காக, உங்களுக்கு அமிர்தம் கொடுக்க விரும்பினேன். தண்ணீருக்கு பதிலாக, அமிர்தத்தை, புலையன் வேடத்தில் கொண்டு வந்தது நான் தான். 

ஆனால், உருவத்தில் வேற்றுமை பாராட்டி, உயர்வு தாழ்வு எனப் பாகுபாடு பார்த்து, அமிர்தம் குடிக்கும் பாக்யத்தை நீங்கள் இழந்து விட்டீர்கள்.  பிறவியில் உயர்வு, தாழ்வுகள் இல்லை. அனைத்து உயிர்களிடத்திலும் நான் இருக்கிறேன். அதை அறிந்தும்,நீங்கள், வேற்றுமை பார்த்ததால், நல்ல பாக்கியத்தை இழந்துவீட்டிர்கள்’ என்றான் கிருஷ்ணன். உதங்கர் தலைகுனிந்தார்.

உண்மைதான்! நம்மில் பலரும், ஜாதி வேறுபாடுகள் பார்த்து, உயர்ந்தவன், தாழ்ந்தவன் என கூறி, சிலரை அவமானப்படுத்துகிறோம். அதனால், நஷ்டம் நமக்கு தான். அவர்களுக்கு இல்லை.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP