மைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி

1573-ம் ஆண்டு மைசூரை நான்காம் சாமராஜ உடையார் ஆண்டு வந்தார். மன்னர் தனது குல தெய்வமான சாமுண்டீஸ்வரியின் ஆலயத்தை தரிசித்து விட்டு திரும்பும்போது மழையும் இடியும் சூழ்ந்து கொண்டது. அப்போது மன்னரையும் அவரது ஆட்களையும் அன்னை சாமுண்டீஸ்வரி காப்பாற்றினாள்.
 | 

மைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி

1573-ம்  ஆண்டு மைசூரை நான்காம் சாமராஜ உடையார் ஆண்டு வந்தார். மன்னர் தனது  குல தெய்வமான சாமுண்டீஸ்வரியின் ஆலயத்தை தரிசித்து விட்டு திரும்பும்போது மழையும் இடியும் சூழ்ந்து கொண்டது. அப்போது மன்னரையும் அவரது ஆட்களையும் அன்னை சாமுண்டீஸ்வரி காப்பாற்றினாள். இதற்கு  நன்றி தெரிவிக்க்கும் வகையில் மைசூரின் எந்த பக்கம் இருந்து பார்த்தாலும் தெரியும் விதமாக சாமுண்டீஸ்வரி ஆலயத்தை விரிவாக  எழுப்பினார். மைசூர் நகரிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் சாமுண்டி மலையில் சாமுண்டீஸ்வரி ஆலயம் அமைந்த பின்னனி இதுவே. 3486 அடி உயரத்தில் கொலு வீற்றிருக்கும் இந்த சாமுண்டீஸ்வரி கோயிலை 1872-ம் ஆண்டு கிருஷ்ணராஜா உடையார் புனரமைத்து விரிவாக்கினார். 

மைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி

சாமுண்டீஸ்வரி தேவி ஆடிமாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை மஹிசூரில்  தோன்றினாள். கத்தி, சக்கரம், திரிசூலம், வாள், வேல், வில் என அனைத்து ஆயுதங்களையும் தாங்கி 16 கரங்களுடன் பயங்கரியாக மாறி மகிஷனை போருக்கு அழைத்து வதம் செய்தாள். மகிஷாசூரனை  16 கரங்களுடன் போரிட்டு அன்னை வதம் செய்த வெற்றித்திருவிழாவே தசராவாக கொண்டாடப்படுகிறது.

பெருங்கோபத்தில் மகிஷாசூரனை அன்னை வதம் செய்தார். இதனால் மகிழ்ச்சியடைந்த  தேவர்கள்  , தங்களைக் காப்பாற்றிய அன்னையை புகழ் மாலைகளால் நன்றியுடன் சாந்தப்படுத்தினர். இப்படி  சாந்தமான அன்னையின் அருட்கோலத்தை மார்க்கண்டேய மகரிஷி 8 கரங்களுடன் வடிவமைத்து சாமுண்டீஸ்வரி மலைப்பகுதியில் அமைத்தார்.இன்றைக்கும் அன்னை அமர்ந்த கோலத்தில் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு பெருங்கருணையுடன் அருளாசிகளை அள்ளித்தருகிறாள்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP