உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)

நம்முடைய ஜாதகக் கட்டத்தில் ‘ல’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இடம்தான் லக்னம். ஜாதகத்தின் முக்கிய உயிர் நாடியே லக்னம்தான். ராசியை வைத்து பலன்களை சொல்லுவதை விட லக்னத்தை வைத்துத்தான் முழுமையான பலன்களை கூற முடியும்.
 | 

உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்-  உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)

நாம் பார்த்து பழகிக் கொண்டிருக்கும் நண்பர்கள் உறவினர்கள் சிலரின் வாழ்க்கை தரம் வசதி வாய்ப்புகள் திடீர் என உயரும்போது சட்டென்று நாம் சொல்லும் வார்த்தை அதிர்ஷ்டம் யோகம் என்பதே. அப்படி ஒரு அதிர்ஷ்டம் யோகம் நமக்கும் கிடைக்கும். அதற்கான வழிகளை வழிபாட்டு முறையை இந்தப் பதிவில் பார்ப்போம்.ஜாதகம் தொடர்பாக பேசும்போது ராசிபலன்கள் பார்க்கும் போது நம்மில் பெரும்பாலான மக்களுக்கு தெரிந்தது  நட்சத்திரங்களும் ராசிகளுமே. பலருக்கு நட்சத்திரம் கூட தெரிவதில்லை . நம் வாழ்க்கை பாதையை தீர்மானிப்பதில் லக்னங்கள் முக்கிய இடம் வகிக்கிறது. இதைப் படிக்கும் வாசகர்கள் தங்களது லக்னத்தை அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று.

நீங்கள் எந்த ராசியின் வழியாக, அதன் அதிபதியான எந்த கிரகத்தின் மூலம் வாழ்க்கையை சந்திக்கிறீர்கள் என்பதைத்தான் லக்னம்  என்கிறார்கள். ராசி என்பது, சந்திரன் எந்த கிரக வீட்டில் இருந்தபோது  நீங்கள் பிறந்தீர்கள் என்று சொல்வது. லக்னம் என்பது நீங்கள் எந்த  மையத்திலிருந்து வந்திருக்கிறீர்கள் என்றும், உங்கள் வாழ்க்கையை  எந்த மையம் நகர்த்துகிறது என்றும் தீர்மானிக்கிறது.

லக்னம் அறிவோம் 

நம்முடைய  ஜாதகக் கட்டத்தில் ‘ல’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இடம்தான் லக்னம். ஜாதகத்தின் முக்கிய உயிர் நாடியே லக்னம்தான். ராசியை வைத்து பலன்களை சொல்லுவதை விட  லக்னத்தை வைத்துத்தான் முழுமையான பலன்களை கூற  முடியுமநம்முடைய வாழ்க்கையை வசந்தமாக மாற்றும் யோகம் நமக்கு கிடைத்திட லக்னக்காரர்கள் தங்களது லக்னத்துக்கு உரியக் கோயில்கள் சென்று வழிபாடு செய்ய நிச்சயமாக பரிபூரண நன்மைகள் கிடைக்கும்.

துலா லக்னம்

தினம் சொல்லவேண்டிய மந்திரம்

வங்கத்தால் மாமணி வந்துந்து முந்நீர்

மல்லையாய் மதிள் கச்சியூராய், பேராய்

கொங்கத்தார் வளங்கொன்றை யலங்கல் மார்வன்

குலவரையான் மடப்பாவை யிடப்பால் கொண்டான்

பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய்

பணி வரையினுச் சியாய் பவள வண்ணா

எங்குற்றா யெம்பெருமான் உன்னை நாடி

யேழையே னிங்ஙணமே யுழிதருகேனே -திருமங்கையாழ்வார் பாசுரம்.

புதனை பலப்படுத்தும் அம்சமாகவே உள்ள பெருமாளை  தொடர்ந்து வணங்கிட துலா லக்னத்தினர் மேன்மையடைவர். காஞ்சிபுரத்திலுள்ள நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான பச்சை வண்ணப் பெருமாளை  வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தரிசனம் செய்திட பச்சை வண்ணப் பெருமாளின் அருளால் புதன் யோகம் நிறைந்த வாழ்க்கையை தருவார்

விருச்சிக லக்னம்

தினம் சொல்லவேண்டிய மந்திரம்

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆருயிர்கட்கு எல்லாம் நான் அன்பு செயல் வேண்டும் எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே எந்தைநினது அருட்புகழை இயம்பியிடல் வேண்டும் செப்பாத மேல்நிலைமேல் சுத்த சிவமார்க்கம் திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும் தப்போது நான் என் செயினும் நீ பொறுத்தல் வேண்டும் தலைவ நின்னைப் பிரியாத நிலையையும் வேண்டுவனே - திருவருட்பா 

விருட்சிக லக்னக்காரர்களின் வாழ்க்கை  யோகமாக மாற  தில்லை ஸ்தானம் என்றழைக்கப்படும் திருநெய்த்தானம் தலத்திற்குச் செல்ல வேண்டும்.இத்திருத்தலத்தில்  அருளும்  நெய்யாடியப்பரையும்,  பாலாம்பிகையையும் தரிசித்து வாருங்கள்.தஞ்சாவூர், திருவையாறுக்கு அருகில் அமைந்துள்ளது இந்தத் திருத்தலம் .

தனுசு லக்னம்

தினம் சொல்லவேண்டிய மந்திரம்

சீரு லாவிய வோதிம மான மாநடை மாமயில்

சேய சாயல்க லாமதி முகமானார்

தேனு லாவிய மாமொழி மேரு நேரிள மாமுலை

சேலு லாவிய கூர்விழி குமிழ்நாசி

தாரு லாவிய நீள்குழல் வேய ளாவிய தோளியர்

சார்பி லேதிரி வேனைநி னருளாலே

சாம வேதியர் வானவ ரோதி நாண்மலர் தூவிய

தாளில் வீழ வினாமிக அருள்வாயே

தனுசு லக்னக்காரர்கள் செல்ல வேண்டிய  தலம்  வில்வாரணி முருகன் கோயிலாகும். சகல நட்சத்திரங்களுக்கும்  அருள்பாலிக்கிறார் என்பது புராண ஐதீகம். நட்சத்திரங்கள் பூஜிக்கும்  நாயகனாக இந்த  முருகன் விளங்குகிறார். கருவறையில் நாகாபரணத்துடன் முருகப் பெருமானும், சுயம்பு வடிவமான சிவபெருமானும் ஒரு சேர  காட்சி தருகின்றனர். திருவண்ணாமலை வேலூர் சாலையில் கலசப்பாக்கத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும், போளூரிலிருந்து 12 கி.மீ.  தொலைவிலும் இந்தத் திருத்தலம். 

மகர லக்னம்

தினம் சொல்லவேண்டிய மந்திரம்

ஏற்றினை யிமயத்து ளெம் மீசனை

இம்மையை மறுமைக்கு மருந்தினை

ஆற்றலை அண்டத் தற்புறத் துய்த்திடும்

ஐயனைக் கையிலாழி யொன்றேந்திய

கூற்றினை குருமாமணிக் குன்றினை

நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை

காற்றினைப் புணலைச் சென்று நாடிக்

கண்ணமங்கயுள் கண்டு கொண்டேன் -திருமங்கையாழ்வார்

மகர லக்னத்தினருக்கான  திருத்தலம் சென்னைக்கு அருகில் அமைந்துள்ள திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் திருக்கோயில். தாயாரின் பூரண அனுக்கிரகமும், பெருமாளின் பொங்கும் அருளும் நிறைந்த தலம் இது. இத்தலத்தில் கருணையே சொரூபமாக  தாயார், ‘என்னைப்  பெற்ற தாயே’ என்கிற திருநாமத்தோடு அருள்கிறாள். சுதாவல்லி என்கிற திருநாமமும் உண்டு. பெருமாள், பக்தவச்சலன். இந்தத் திருத்தலம் சென்னையில் இருந்து திருவள்ளூருக்கு  செல்லும் வழியில் அமைந்துள்ளது.

கும்ப லக்னம்

தினம் சொல்லவேண்டிய மந்திரம்

மின்னனைய நுண்ணிடையா ருருபசியும் மேனகையும்

அன்னவர்தம் பாடலொடு மாடலவை யாதரியேன்

தென்னவென வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள்

அன்னனைய பொற்குவடா மருந்தவத்தனாவேனே

வானாளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம்

கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்

தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடமலைமேல்

கானாறாய்ப் பாயும் கருத்துடையே னாவேனே - குலசேகராழ்வார்  பாசுரம்

கும்ப லக்னக்காரர்களை  சுக்கிரன், புதன், சனி போன்ற கிரகங்கள் வழி நடத்துவதால்  பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவது அவசியமாகிறது திருப்பதி பெருமாளான வெங்கடாஜலபதியை வருடத்திற்கு ஒருமுறையேனும் தரிசிக்க நல்ல திருப்பங்கள் ஏற்படும் 

மீன லக்னம்

தினம் சொல்லவேண்டிய மந்திரம்

அரிதாகிய மெய்ப்பொருளுக்கு அடியேன்

உரிதா உபதேசம் உணர்த்தியஆ

விரிதாரண விக்ரமவேள் இமையோர்

புரிதாரக நாக புரந்தரனே.

மின்னே நிகர்வாழ்வை விரும்பியயான்

என்னே விதியின் பயன் இங்கு இதுவோ

பொன்னே மணியே பொருளே அருளே

ம.ன்னே மயில் ஏறிய வானவனே.

எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ

சிந்தாகும் ஆனவை தீர்த்தெனைஆள்

கந்தா கதிர் வேலவனே உமையாள்

மைந்தா குமரா மறைநாயகனே. - கந்தர் அனுபூதி

மீன லக்னக்கார்கள்   செல்ல வேண்டிய திருத்தலம் குறுக்குத்துறை முருகன் கோயிலாகும். இக்கோயில் தாமிரபரணி ஆற்றங்கரையில்   அமைந்துள்ளது. திருநெல்வேலி சந்திப்பு  ரயில் நிலையத்தில் இருந்தும், டவுன் ரயில் நிலையத்தில் இருந்தும் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.  

சுபமே விளைக !

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP