18 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கன்னிமார் கோவில் திருவிழா!

திருச்சியில் வீரபத்திர சுவாமி, சென்னப்பன், கன்னிமார் கோவிலில் 18 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்று வரும் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் தங்கள் நேர்த்திகடனை செலுத்தினர்.
 | 

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பழையகோட்டை கிராமத்தில் உள்ள குரும்பபட்டியில் குரும்ப கவுண்டர் இன மக்களின் குல தெய்வமான வீரபத்திர சுவாமி, சென்னப்பன், கன்னிமார் கோவிலில்  18 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தொடங்கியது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த திருவிழா கடந்த 18 ஆண்டுகளாக நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு நடைபெறுகிறது. 

18 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கன்னிமார் கோவில் திருவிழா!

இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் இன்று காலை சிறப்பு வழிபாடுகளுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தாரை தப்பட்டை முழங்க சுவாமியை பல்லக்கில் வைத்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆற்றிற்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றதைத் தொடர்ந்து பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

18 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கன்னிமார் கோவில் திருவிழா!

அப்போது பூசாரி பக்தி பரவசத்துடன் இருந்த பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்தார். தொடர்ந்து சாமியை மீண்டும் பல்லக்கில் வைத்து கோவிலுக்கு எடுத்து வந்தனர்.  இதைத் தொடர்ந்து கோவிலிலும் பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், பக்தர்கள் பொங்கல் வைத்து, கிடா வெட்டி தங்கள் நேர்த்தி கடன்களை செலுத்தினர்.  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP