இவரை வழிபட்டால் நோய்கள் மாயமாகும்!

திருமால் தன்வந்திரியாக அவதரித்த நாள், தீபாவளிக்கு முன் வரும், திரயோதசி நாளாகும். இந்த தினத்தை தன்வந்திரி ஜெயந்தியாக "தன்திரேயாஸ்' என்று வட மாநில மக்கள் அனுஷ்டிக்கின்றனர். திருமாலின் 24 அவதாரங்களில், 17-ஆவது அவதாரமாக தன்வந்திரி அவதாரம் விளங்குகிறது.
 | 

இவரை வழிபட்டால் நோய்கள் மாயமாகும்!

திருமால் எடுத்த 24 அவதாரங்களில் மிக முக்கியமான பத்து அவதாரங்களை தசாவதாரங்கள் என்று போற்றுகிறோம். இவற்றைத் தவிர, தத்தாத்ரேயர், வியாசர், கபிலர், தன்வந்திரி போன்ற வேறு பல அவதாரங்களையும், திருமால் எடுத்து மக்களுக்கு நல்லுபதேசங்களைச் செய்துள்ளார். 

ஸ்ரீதன்வந்திரி அவதாரம் பற்றி ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீ விஷ்ணுபுராணம் மற்றும் பிரம்மாண்ட புராணத்தில் குறிப்புகள் உள்ளன.

ஒருமுறை துர்வாச முனிவரின் சாபத்திற்கு ஆளான தேவேந்திரன், தனது செல்வங்களை இழந்தான். மீண்டும் அவற்றைப் பெற, திருமாலின் அறிவுரைக்கேற்ப அசுரர்களைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு பாற்கடலைக் கடைந்தனர். அதிலிருந்து கொடூரமான ஆலகால விஷம் தோன்றியது. 

அதை சிவபெருமான் தன் கழுத்தில்  இருத்திக் கொண்டு நீல கண்டனானார். தொடர்ந்து காமதேனு, கற்பகவிருட்சம், ஐராவதம் என்ற யானை போன்ற பல்வேறு புனிதமான பொருட்கள் வந்தன. 

பாற்கடலிலிருந்து கடைசியில் திருமாலே, தன்வந்திரியாக அம்ருத கலசத்தை ஏந்தி வெளிப்பட்டார். தேவேந்திரன்,அமிர்தத்தையும் தான் இழந்த பிற பொருட் களையும் பெற்று தேவலோகம் சென்றான்.

திருமால் தன்வந்திரியாக அவதரித்த நாள், தீபாவளிக்கு முன் வரும்,  திரயோதசி நாளாகும். இந்த தினத்தை தன்வந்திரி ஜெயந்தியாக "தன்திரேயாஸ்' என்று வட மாநில மக்கள் அனுஷ்டிக்கின்றனர். திருமாலின் 24 அவதாரங்களில், 17-ஆவது அவதாரமாக தன்வந்திரி அவதாரம் விளங்குகிறது.

இவரே ஆயுர்வேத மருத்துவ முறையினை மக்களுக்கு அளித்ததாக ஐதீகம். இறைவன் மருந்தாகவும், மருத்துவராகவும் இருந்து மக்களைக் காப்பாற்றுகிறான் .

ஸ்ரீ தன்வந்திரி விஷ்ணுவின் அம்சமாக, பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரத்துடனும். முன்னிரு கரங்களில் அமிர்த கலசத்தை ஏந்திய வாறும் காட்டப்படுவது வழக்கம். அல்லது முன் இடக்கையில் அமிர்த கலசமும், வலக்கை யில் அட்டைப் பூச்சியை ஏந்தியும், தன்வந்திரி காட்சி அளிப்பதும் உண்டு. 

அக்கால மருத்துவ முறையில், நோயாளியின் உடலிலிருந்து கெட்ட ரத்தத்தை உறிஞ்சி எடுத்து நோயை குணமாக்க அட்டைப் பூச்சிகள் பயன்பட்டன. இப்போதும் இந்த முறையின் பயனை தற்கால மருத்துவம் ஏற்றுக்கொண்டுள்ளது.

ஐப்பசி மாதம், கிருஷ்ணபட்ச திரயோதசி, ஹஸ்த நட்சத்திரம் தன்வந்திரியின் அவதார தினமாகக் கொண்டாடப்படுகிறது. தன்வந்திரி ஜெயந்தியன்று கோதுமை அல்வா முக்கிய நிவேதனமாக படைக்கப்படுவது வழக்கம். 

நோய்கள் வராமலிருக்கவும், நல்ல உடல் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிடைக்கவும் தன்வந்திரி வழிபாடு தற்போது பிரபலமாகி வருகிறது. தன்வந்திரி பகவான் படத்தை வீட்டில் வைத்து தினமும் கீழுள்ள சுலோகத்தைக் கூறி வழிபடலாம். இதை, 16 முறை கூறினால். நல்ல பலன்கள் கிட்டும்.

"ஓம் நமோ பகவதே மஹாசுதர்ஸன வாசுதேவாய தன்வந்த்ரயே
அம்ருதகலச ஹஸ்தாய சர்வ பய விநாசாய சர்வ ரோக நிவாரணாய
த்ரைலோக்ய பதயே த்ரைலோக்ய நிதயே ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்வரூப
ஸ்ரீ தன்வந்த்ரி ஸ்வரூப ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஔஷத சக்ர நாராயணாய நமஸ்தே"

பொருள்: ஸ்ரீ மஹாசுதர்சனராகவும், வாசுதேவராகவும் விளங்குபவரும்; அமிர்த கலசத்தைக் கரங்களில் ஏந்தி, அனைத்து பயங் களைப் போக்குபவரும்; எல்லா நோய்களுக்கும் நிவாரணம் அளிப்பவரும்; மூன்று உலகங் களுக்குத் தலைவராக விளங்குபவரும்; அனைத் துச் செல்வங்களுக்கும் அதிபதியாக விளங்கு பவருமான ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்வரூபியான ஸ்ரீ ஔஷத (மருந்து) சக்ர நாராயணரான ஸ்ரீ தன்வந்திரிப் பெருமானை வணங்குகிறேன்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP