இந்த விரதம்  இருந்தால்  துன்பங்கள் நீங்கும்!

விநாயகருக்கு பூஜை செய்து வழிபட சிறப்பான நாளாக சங்கடஹர சதூர்த்தி பார்க்கப்படுகின்றது.சங்கடம் என்றால் துன்பம், ஹர என்றால் அறுப்பவன், சதுர்த்தி என்றால் அமாவாசை, பவுர்ணமிக்கு பின்னர் வரும் நான்காவது நாள் என்று பொருள்.
 | 

ஒரு மாதத்தில் அமாவாசைக்கு பின்னர் வரும் சதுர்த்தி, பவுர்ணமிக்கு பின்னர் ஒரு சதுர்த்தி என இரண்டு சதுர்த்திகள் வந்தாலும், தேய்பிறை சதுர்த்தி தான் சங்கடஹர சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. 

சங்கடஹர சதுர்த்தி தினம், விரதம் இருந்து விநாயகரை வழிபட்டால், துன்பங்கள் நீங்கும்.  பொதுவாக விரதம் இருக்கும் நாளில் செய்வது போல, காலை எழுந்ததும், வீட்டை சுத்தம் செய்து குளித்துவிட்டு, பூஜை அறையை சுத்தம் செய்து விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.

அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று விநாயகரை வணங்கி 11 முறை வலம்வர வேண்டும். விநாயகருக்கு அருகம்புல் அல்லது எருக்கம் கொண்டு அர்ச்சனை செய்யலாம்.அருகம்புல் கொண்டு அர்ச்சனை செய்வது மிகவும் சிறப்பு. மாலையில், விநாயகர் கோவிலுக்கு சென்று மீண்டும் வழிபட்டு, சந்திரனை தரிசித்து வீடு திரும்பி விரதத்தை முடிக்க வேண்டும். 

சொல்ல வேண்டிய மந்திரம்
‘ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்திஹி ப்ரசோதயாத்’

இதை தவிர, அவ்வையார் அருளிய விநாயகர் அகவலை பாராயணம் செய்வது மிகவும் பலன் தரும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP