ஜாதக தோஷங்களை தெரிந்து கொள்வது எப்படி?

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஏதேனும் சிரமங்களை, சிக்கல்களை எதிர்கொள்ளும் போது உடனே நமக்கு வேண்டியவர்கள் சொல்லும் வார்த்தை ஜாதகக் கோளாறு, கிரக தோஷங்கள் என்பதே. அதை தெரிந்துகொள்வோம்.
 | 

ஜாதக தோஷங்களை தெரிந்து கொள்வது எப்படி?

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஏதேனும் சிரமங்களை, சிக்கல்களை எதிர்கொள்ளும் போது உடனே நமக்கு வேண்டியவர்கள் சொல்லும் வார்த்தை ஜாதகக் கோளாறு, கிரக தோஷங்கள் என்பதே. அதிலும் குறிப்பாக திருமணத் தடைகள், குடும்பத்தில் அமைதி இல்லாத தன்மை, வீட்டில் கணவர் மனைவிக்குள் பெரும் போராட்டங்கள் இவை அத்தனைக்கும் முக்கிய காரணங்களாக அமைகிறது பொருந்தாத ஜாதக அமைப்புகள்.

பலர் திருமணம்  செய்யும்போது  பாதிக்கப்படும் தோஷங்கள் ராகு/கேது தோஷம், மாங்கல்ய தோஷம், சூரிய தோஷம், களத்திர தோஷம் ஆகியவையே. இந்த தோஷங்கள் குறித்து அலசி ஆய்கிறது இந்தப் பதிவு.

செவ்வாய்  தோஷம்

ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம். செவ்வாய்க்கு பல்வேறு காரணங்களால் தோஷ நிவர்த்தி உண்டாகும். அவ்வாறு தோஷ நிவர்த்தி பெற்றாலும்கூட அதேபோல் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்கும் ஜாதகத்தை மட்டுமே திருமணம்  செய்யும் போது கவனித்து சேர்க்க வேண்டும்.

ராகு–  கேது தோஷம்

லக்னம், 2, 7, 8 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருப்பதால் சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷ அமைப்பு உள்ள ஜாதகங்களை அதே சம தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்ப்பதே தோஷ நிவர்த்திக்கு பரிகாரமாகும். உதாரணமாக லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அதேபோல் லக்னத்தில் ராகு அல்லது கேது உள்ள ஜாதகத்தை சேர்ப்பதே பொருத்தமாகும்.

மாங்கல்ய  தோஷம்

இந்த தோஷம் பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும், அதாவது லக்னத்துக்கு 8ம் இடத்தில் சூரியன், ராகு, கேது, சனி போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷமாகும். இதில் 8ம் இடத்தை சுப கிரகங்கள் மற்றும் குரு பார்த்தால் தோஷ நிவர்த்தி. 8-ம் அதிபதி பலம் பெற்றாலும் தோஷ நிவர்த்தி.

சூரிய தோ ஷம் 

ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 7, 8 ஆகிய இடங்களில் சூரியன் இருந்தால் சூரிய தோஷமாகும். இந்த அமைப்பு உள்ள ஜாதகங்களை அதேபோன்று அமைப்புடைய ஜாதகத்துடன் சேர்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது.

 களத்திர தோஷம்

களத்திர ஸ்தானம் என்னும் 7-ம் இடத்தில் களத்திர காரகன் சுக்கிரன் இருப்பது களத்திர தோஷமாகும். இந்த அமைப்பால் பல சாதகமான பலன்கள் இருந்தாலும் திருமண சுணக்கம் ஏற்படும். அதேபோல தோஷமுள்ள ஜாதகம் பார்த்து இணைக்க வேண்டும்.
திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்பார்கள் நமது முன்னோர் . திருமண பொருத்தம் பார்க்கும் போது மேற்கண்ட குறிப்புகளை கவனித்து கொண்டு செயல்பட வேண்டியது மிக முக்கியம்.

வாழ்க வ ளமுடன்!

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP