அமாவாசை தர்ப்பணம் செய்வது எப்படி?

ஆண்டுக்கு ஒருமுறை வரும் மஹாளய அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அவர்களின் ஆத்மா சாந்தி அடைத்து நம்மையும், நம் சந்ததியினரையும் வாழ்த்தும் என்பது ஐதீகம்.
 | 

அமாவாசை தர்ப்பணம் செய்வது எப்படி?

ஆண்டுக்கு ஒருமுறை வரும் மஹாளய அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அவர்களின் ஆத்மா சாந்தி அடைத்து நம்மையும், நம் சந்ததியினரையும் வாழ்த்தும் என்பது ஐதீகம். 

காலை முடிந்தால் கடலில் அல்லது புனித தீர்த்தங்களில் நீராடலாம். இல்லையென்றால் வீட்டில் குளித்துவிட்டு, நம் முன்னோர்களை தியானித்து, கையில் தர்ப்பை புல் அணிந்து, கிழக்கு முகமாக அமர்ந்து, ஒரு சொம்பு தண்ணீரில், சிறிதளவு எள் சேர்த்து, உங்கள் முன்னோர்களின் பெயர் சொல்லி அதை ஓடும் நீரிலோ, கிணற்றிலோ அல்லது வீட்டில் ஓர் பாத்திரத்திலோ தர்பணமாக கொடுக்கவும். பின், அந்த நீரை குளத்திலோ, கிணற்றிலோ ஊற்றிவிடவும். எக்காரன் கொண்டும் அந்த எள் முளைத்துவிடக்கூடாது. இது மிக மிக எளிய முறை. 

இதற்கு  அடுத்த முறையாக, அமாவாஸ்யை தர்பண மந்திரங்களை அதற்குரிய புஸ்தகங்களை படித்து அதன் படி செய்தல். இதற்கும் மேல் வசதி உடையோர், கோவில், மடங்கள் அல்லது வீட்டிலேயே வேத விற்பன்னர்களை அழைத்து அவர்கள் மந்திரம் சொல்ல அதை திரும்ப சொல்லி தர்ப்பணம் கொடுக்கலாம். 

எந்த முறையில் செய்தாலும், தங்களால் இயன்ற அன்னதானம் செய்வது சிறப்பு. இதன் மூலம் முன்னோர்கள் ஆத்மா த்ரிப்தி அடைந்து, நம் சந்ததியினரையே வாழ்த்தும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP