ஊழல் தானங்கள்

வாங்கிற சம்பளம் பத்து நாளைக்கு கூட பத்துவதில்லை. சிறிது செலவு செய்தால் போதும் எளிதில் தானத்தின் பலனை பெறலாம். சரி என்ன என்ன தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும். சிறிய பட்டியல் இதோ...
 | 

ஊழல் தானங்கள்

வாங்கிற சம்பளம் பத்து நாளைக்கு கூட பத்துவதில்லை. இந்த லட்சணத்தில் எங்க போய் தானம் பண்ணுறது, ஆசை இருக்கு சார்  ஆனா பணம் எங்க இருக்கு என்று ஆண்டு முழுவதும் புலம்புகிறர்களுக்கு தீபாவளி பண்டிகை போனஸ் விடுதலை தரும். அந்த பணத்தில் சிறிது செலவு செய்தால் போதும் எளிதில் தானத்தின் பலனை பெறலாம். சரி என்ன என்ன தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும். சிறிய பட்டியல் இதோ:.

1. மஞ்சள் தானம் - மங்களம் உண்டாகும்
2. பூமி தானம் – வாழும் போதும், வாழ்ந்த பின்னரும் சுகம்
3. வஸ்த்ர தானம் (துணி) – அனைத்து நோய்களும் தீரும்
4. கோ தானம் (பசுமாடு) – முன்னோர் சாபம் தீரும்
5. திலதானம் (எள்ளு) - பாப விமோசனம்
6. குல தானம் (வெல்லம்) – வம்சம் விருத்தியாகும் – கஷ்டம் தீரும்
7. நெய் தானம் – முக்தி கிடைத்தும். தேவர்கள் அருள் உண்டு.
8. வெள்ளி தானம் – முன்னோர் ஆசிகள் உண்டு
9. தேன் தானம் – குரல் வளம் ஏற்படும்
10. சொர்ண தானம் (தங்கம்) - கோடிபுண்ணியம் உண்டாகும்
11. தண்ணீர் தானம் – மனசாந்தி ஏற்படும்.
12. கம்பளி (போர்வை) தானம் – கெட்ட சொப்பனத்தால் ஏற்படும் பயம் தீரும்
13. பழவகைகள் தானம் – குழந்தைகள், பேரன் பேத்திகள் உருவாகும்
14. பால் தானம் – எல்லாவளமும் தரும்
15. சந்தனக்கட்டை தானம் – புகழ் தரும்
16. அன்னதானம் – அனைத்து விதமான செல்வமும் தரும்.

ஊழல் தானங்கள்

இது மட்டும் அல்ல இன்னும் பல உள்ள கல்வி தானம் செலவே இல்லாதது. ஆனால் அதை செய்ய அறிவு வேண்டும். பக்தி மார்க்க கட்டுரையில் தலைப்பு பட்டும் ஊழல் தானம் என்று இருக்கிறதே அது பற்றி இங்கே பார்ப்போம்.
யாகங்களில் சொர்ணபுஷ்பம் சமர்பயாமி என்று அவ்வப்போது வேத விற்பனர்கள் சொல்லுவார். அப்போது தங்க பூவை சமர்பிக்க வேண்டும். ஆனால் பெரிய 1 காயின் தான் சமர்பிக்கப்பிக்கப்படுகிறது. இதுதான் ஊழல் தானம்.
வறுமையுடன் சேர்ந்து வாழ்க்கையே .கொடுமை செய்த மூதாட்டி சோகம் தாங்காமல் காஞ்சி பெரியவரை சென்றுபார்த்தார். பெரியவர் பேச தொடங்கியதும் கண்கள் கங்கையாக மாறியது. ஆறுதல் பார்வையுடன் .பெரியவர் ஜோதிடம் பார்த்தாயா என்றார். பார்த்துட்டேன் பெரியவா இந்த கஷ்டம் போக வேண்டும் என்றால் 1000 பேருக்கு அன்னதானம் செய்ய வேண்டும் என்றார், என் நிலைமைக்கு இந்த பரிகாரம் நினைத்து கூட பார்க்க முடியாது என்று அழுதார். இதுக்கு ஏன் அழுகிறாய் 1000 பேருக்கு அன்னதானம் என்று தானே சொன்னார் பிடி அரிசியை கொண்டு போய் எறும்பு புற்றில் போடு ஆயிரம் எறும்புகள் பசியாறும். உன் கஷ்டமும் போயே போய் விடும் என்றார். பாட்டி சந்தோஷமாக வீட்டிற்கு சென்று அந்தபடியே தானம் செய்தார்.

இப்படி எல்லா தானத்திற்கும் ஏதாவது ஒரு குறுக்கு வழி இருக்கும் அதை கண்டுபிடித்து செயல்படுத்தினால் போதும். பலன் கட்டாயம் கிடைக்கும். ஆனால் அந்த யோசனை இப்படி இருக்க கூடாது.
ஊரில் ஒரு மகா கஞ்சன், பத்துபைசா கூட யாருக்கும் தர்மம் செய்ய மாட்டான். அவன் இறந்து விட்டான். எமன் அவன் ஆள்காட்டி விரலை மட்டும் சொர்க்கத்திற்கு அனுப்பிவிட்டு, மற்ற பாகங்களை நகரத்திற்கு அனுப்ப உத்தரவிட்டான். கேட்ட கஞ்சனுக்கு மிகுந்த ஆச்சரியம். அது என்ன என் விரல் மட்டும் சொர்க்கத்திற்கு என்று கேட்டான். அதற்கு எமன் நீ கடையில் அமர்ந்து இருந்த போது பிச்சைக்காரன் பசிக்குது என்று சோறு போடு என்று கேட்டான். அதற்கு நீ சோறு எல்லாம் இல்லை. அங்க ஒரு சத்திரம் இருக்கு போய் சாப்பிடு என்று உட்கார்ந்த படியே விரலை நீட்டினாய். அதனால் விரல் மட்டும் சொர்க்கம் போகும் என்றார். கஞ்சன் தலையெழுத்தே என்று நரகத்தின் தண்டனை காலத்தை வாழ்ந்து முடித்தான். பின்னர் மறு பிறப்பில் அவனுக்கு மரணத்திற்கு பின்னர் எமன் முடிவு நினைவில் இருந்தது. ஆகா விரல் காட்டினாலே சொர்க்கம் கிடைக்கும் என்றால் அன்னதானம் செய்தால் எவ்வளவு பலன் கிடைக்கும் என்று வழக்கம் போல எண்ணாமல் யாராவது வீட்டு வாசலில் நின்று உணவு கேட்டால் உடல் முழுவதும் குலுங்க குலுங்க ஓடி சென்று சத்திரம் இருக்கும் இடத்தைகாட்டினானாம். இப்படி யோசித்தால் விளங்கியது போலதான்.

- பாரதி பித்தன்

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP