ஹரியும் சிவனும் ஒண்ணு

திருமாலின் இருதய மத்தியில் சிவன் நீங்காமல் இருக்கிறார் என்று சொல்லப்பட்டுள்ளது. விஷ்ணு சகஸ்ரநாமத்தில் கயிலாயத்தில் சிவப்பெருமான் எப்போதும் ராமநாமாவை சொல்லிக்கொண்டே இருக்கிறார் என்று சொல்கிறது. திருமால் பத்து அவதாரங்களை எடுத்தார். அவை ஒவ்வொன்றிலும் சிவப்பெருமானைப் பூஜித்ததற்கு சான்றுகள் உள்ளன.
 | 

ஹரியும் சிவனும் ஒண்ணு

ஹரியும் சிவனும் ஒண்ணு.. அறியாதவர் வாயிலே மண்ணு என்று சொல்ல கேட்டிருக்கிறோம்.  மகாபாரதத்தில்  யுதிஷ்டிரர், பீஷ்மரிடம் சிவனின் புகழைப் பற்றி கேட்ட போது எல்லா பிரபஞ்சங்களிலும் சிவனைப் பற்றி முழுமையாக அறிந்த ஒரே நபர் கிருஷ்ணரே என்று கூறுகிறார்.

நம் கண்களில் நீர் மேல் நெருப்பாக இறைவன் வீற்றிருக்கிறான். நீர் அம்சம் விஷ்ணு, நெருப்பு அம்சம் சிவன். நம் கண்களிலே சிவனும் விஷ்ணுவும் சேர்ந்தே இருக்கிறார்கள். சிவனுக்கு வில்வம் சூடு. விஷ்ணுவுக்கு குளிர்ச்சி துளசி. நம் உடம்பில் பாதிக்கும் மேல், நீர் அம்சம்.  உடலை இயக்கும் சக்தியாகிய உயிரோ நெருப்பம்சம். சிவ விஷ்ணு ஐக்கியமே மனிதப்பிறவி.  அதனால் தான் பல்வேறு புராண சம்பவங்கள்  ஹரியும் சிவனும்  ஒன்று என்பதை உணர்த்துகின்றன. தைத்திர்ய ஆரண்யம் என்னும் நூலில் திருமாலின் இருதய மத்தியில் சிவன் நீங்காமல் இருக்கிறார் என்று சொல்லப்பட்டுள்ளது.  விஷ்ணு சகஸ்ரநாமத்தில்  கயிலாயத்தில் சிவப்பெருமான் எப்போதும்  ராமநாமாவை  சொல்லிக்கொண்டே இருக்கிறார் என்று சொல்கிறது. திருமால் பத்து அவதாரங்களை எடுத்தார். அவை ஒவ்வொன்றிலும் சிவப்பெருமானைப் பூஜித்ததற்கு  சான்றுகள் உள்ளன. 

மச்சாவதாரத்தில் பிரம்மனிடமிருந்து சோமுகாசுரன்  வேதங்களைத்  திருடிச்சென்று, கடலுக்கடியில் ஒளிந்துகொண்டான். அப்போது  திருமால் பெரிய சுறா மீனாக வடிவெடுத்து கடலிலேயே அவனை வதம் செய்து வேதங்களை மீட்டார். அந்த மகிழ்ச்சியில் கடலுக்கடியில் சென்று கடலை கலக்கினார். அப்போது உலகத்தில் உள்ள உயிரினங்கள்   துன்பத்தைக் கண்டன.  உடனே  சிவன்பெரிய கொக்கு வடிவமெடுத்து  பெருமாளுக்கு தவறை உணர்த்தினார். அதனாலேயே மச்சாவதார உருவெடுத்து பல காலம் சிவபூஜை செய்ததாக வரலாறு கூறுகிறது. 

திருப்பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்தபோது, கடலுக்கடியில்  மத்தாக இருந்த மந்திரமலை  மூழ்காமல் இருக்க  ஆமை (கூர்மம்) அவதாரம் எடுத்து தன் முதுகில் தாங்கினார் திருமால்.  மலையைத் தாங்கும் வல்லமையைக் கொடுக்க வேண்டும் என்று சிவனிடன் வேண்டினார்.   காஞ்சிபுரத்திலுள்ள திருக்கச்சூர் சிவன் கோயிலில்  இதற்காகவே ஆமைமடு என்ற தீர்த்தம் உண்டாக்கி பூஜித்ததாக இக்கோயில்  தல வரலாறு  கூறுகிறது.

ஹரியும் சிவனும் ஒண்ணு

தேவர்களைத் துன்புறுத்திய  இரண்யாட்சன் என்ற அசுரனை வராக அவதாரமெடுத்து பூமியை தோண்டி  அவனை அழித்தார் . திருமாலின் கோபத்தை சிவபெருமான் சாந்தப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

தன் பக்தன் பிரகலாதனை  துன்புறுத்தும் இரண்யனை கொல்ல  நரசிம்ம அவதாரம் எடுத்த  பெருமாள் உக்கிரத்துடன் இருந்தார்.  திருமாலை சாந்தப்படுத்த அதைவிட உக்கிரமாக சிவபெருமான் சரபேஸ்வரராக வெளிப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

மன்னன்  மகாபலியின் ஆணவத்தை அடக்க  வேண்டி  குள்ள அந்தணன் (வாமனன்) வடிவில் தோன்றினார்  திருமால் . அவனை காலால் அழுத்தி பாதாள லோகம் அனுப்பிய திருமால் தனது  பாவம் தீர  சிவனை வேண்டினார்.

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற தத்துவத்தை உணர்த்த பரசுராம அவதாரம்.ஜமதக்னி என்ற முனிவரின் மகனாய் பிறந்து, தன் தாயின் தலையையே கொய்து, அவளுக்கு மீண்டும் உயிர் வரம் கேட்டார்.  திருமால் பரசுராமராய்  சிவத்தலங்களை பூஜித்தார்.

ஹரியும் சிவனும் ஒண்ணு

ஒருவனுக்கு ஒருத்தி , பெற்றவர் சொல் கேட்டு நடக்க, அநியாயத்தை வேரறுக்க, சிவ பக்தனாயினும் பிறன்மனை நோக்கிய இராவணவனனை அழிக்கவும் திருமால் எடுத்த அவதாரம் தான் ராமாவதாரம். ராம நாமத்தை சிவனே உச்சரிக்கிறார் என்பதும் வரலாறு. 

திருமால் கிருஷ்ணாவதாரம் எடுக்கும் முன்பு, அவரது சயனமான ஆதிசேஷன் பலராமனாக உருவெடுத்தார். திருமால் அதனைக் கவுரவிக்க தன் அண்ணனாக உருவெடுக்கச் செய்தார் என்பது பலராம அவதாரத்தின் வரலாறு.

பாகவதம் குருக்ஷேத்ரயுத்தத்திற்கு காரண பூதராய் அழித்தல் தொழிலை திருமால் செய்ததாக தெரிவிக்கிறது. கண்ணன் தனது சிவயோக மகிமையால் சிவபெருமானாகவே இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதுவே கிருஷ்ண அவதாரம். 

அஷ்டாட்சரமும், பஞ்சாட்சரமும் ஒரே இடத்தில் தான் ஐக்கியமாகியுள்ளது. இவற்றை உணர்ந்து கொண்டால் மோட்சமும் கிட்டும். ஆன்மிக ஞானமும் கிட்டும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP