குரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு? 

அடுத்த ஓர் ஆண்டு காலத்திற்கு 12 ராசிகளுக்கான பலன்களை வழங்கப்போகிறார். தனுசு ராசியில், மூலம் நட்சத்திரம் 1ம் பாதத்தில் நுழையும் குருவின் நகர்வால், எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன நன்மை கிடைக்கும் என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.
 | 

குரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு? 

நவ கிரகங்களில் முக்கியமானது, மேன்மை தரக்கூடியதுமானது குரு வியாழன் எனப்படும் குரு பகவான். ஒருவரது வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட அவரது ஜாதகத்தில் குரு அமைப்பு மிக முக்கியம். ஆண்டுக்கு ஒரு முறை ஒவ்வொரு ராசிக்கு இடம் பெயரும் குரு பகவான், தான் வீற்றிருக்கும் ராசியிலிருந்து பார்க்கும் ராசிக்கும் அதிக அருளை வாரி வழங்குகிறார். 

பொதுவாக குரு பார்க்க கோடி நன்மை என்பது பெரியோர் வாக்கு.  ஒருவரது தொழில், ஞானம், திருமணம், குழந்தை பேறு, உள்ளிட்ட பல அம்சங்களுக்கு குரு கடாக்ஷம் மிக முக்கியம். இத்தனை சிறப்பு மிக்க குரு பகவான், கடந்த ஆண்டாக, விருச்சிக ராசியில் அமர்ந்து, நமக்கெல்லாம் அருள் புரிந்து வருகிறார். 

வரும் அக்டோபர் மாதம்  28ம் தேதி இரவு, விருச்சிக ராசியிலிருந்து, தனுசு ராசியில் நுழைகிறார். இப்படி, இன்னொரு ராசிக்கு குரு இடம்பெயர்வதையே குரு பெயர்ச்சி என்கிறோம். 

இதுவரை செவ்வாய் ஆதிக்கத்திற்கு உட்பட்ட விருச்சிக ராசியில் இருந்து வரும் குரு பகவான், இனி தன சொந்த வீடான தனுசில் இருந்து ஆட்சி செய்யப்போகிறார். குருவின் இந்த நகர்வு, மிகவும் விசேஷமானது. 

அவரது சொந்த வீட்டில் இருந்து அடுத்த ஓர் ஆண்டு காலத்திற்கு 12 ராசிகளுக்கான பலன்களை வழங்கப்போகிறார். தனுசு ராசியில், மூலம் நட்சத்திரம் 1ம் பாதத்தில் நுழையும் குருவின் நகர்வால், எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன நன்மை கிடைக்கும் என்பதை தொடர்ந்து பார்க்கலாம். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP