பக்தர்களுக்காக சமைக்கப்படும் உணவு,அள்ள அள்ள குறையாத அற்புதம் நிகழும் திருத்தலம்

ஆலயத்தின் கொடி காற்றடிக்கும் திசையில் எதிர்திசையில் பறக்கின்றது. காற்று வீசும் திசையும் எதிராக இருக்கும். காலை முதல் மாலை வரை நிலத்திலிருந்து கடலை நோக்கியும், இரவு நேரங்களில் கடலிலிருந்து நிலத்தை நோக்கியும் இருக்கும்.
 | 

பக்தர்களுக்காக சமைக்கப்படும் உணவு,அள்ள அள்ள குறையாத அற்புதம்  நிகழும் திருத்தலம்

பத்ரிநாத், துவாரகை, இராமேற்வரம் போன்று பூரி ஜெகந்நாதர் கோயில் நான்காவது புண்ணியத்தலமாக போற்றப்படுகிறது. ஒரிசா மாநிலம் பூரி கடற்கரைப் பகுதியில் அமைந்த வைணவத் திருத்தலம் இது. கடற்கரைப்  கோயில் என்பதால் கடலில் நீராடியே பிறகே பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல வேண்டும். கோயிலுக்குள் நுழைவதற்கு முன்பு  கடற்கரையில் உள்ள மார்க்கண்டேஸ்வரரைத் தரிசித்து  அங்குள்ள தீர்த்ததில் நீராடிய பிறகே ஜெகந்நாதரைத் தரிசிக்கிறார்கள். கோயிலுக்குள் நுழைவதற்கு நான்கு வாசல்கள் உண்டு. சிம்ஹதுவார், ஹஸ்துவார், ஹாஸ்திதுவார், வியாக்ரதுவார் என்று அழைக்கிறார்கள். கோயிலின் நுழைவு வாயில் வித்தியாசமான முறையில்  பிரமிடு போன்ற அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. மூலவர்களும் மற்ற ஆலயங்களில் போல்  கருங்கல்லில் இல்லாமல் மரச்சிற்பங்களினால் உருவாக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சிதருகிறார். இங்கு மூலவர் ஜெகந்நாதர் ஒருபுறம் சகோதரி சுபத்ராதேவியையும், இன்னொரு புறம் சகோதரர் பலராமனுடனும் எழுந்தருளி அருள்புரிகிறார்.

பூரியை ஆண்டுவந்த இந்திரதையுமா என்னும் அரசன் சிறந்த பக்தன். ஒருமுறை பெருமாள் அவன் கனவில் வந்து கடற்கரையில் மிதந்துவரும் பொருளைக் கொண்டு தனக்கு சிலை வடித்து கோயில் எழுப்புமாறு கூறி மறைந்தார்.  கடலில் ஏதேனும் பொருள்கள் மிதந்துவந்தால் அதை எடுத்து வரும்படி காவலாளிகளைப் பணித்தான் இந்திரதையுமா. நான்கைந்து நாட்களுக்குப் பிறகு கடலில் மிதந்துவந்த பெரிய கட்டையை காவலாளிகள் எடுத்துவந்தனர். அரசர்  அக்கட்டைக்கு உரிய பூஜைகள் செய்து தச்சர்களை அழைத்து இக்கட்டையில் பெருமாள் சிலை செய்ய வேண்டும் என்று பணித்தான். தச்சரின் தலைவர் கட்டையில் உளியை வைத்ததும் மரக்கட்டை இரண்டாக உடைந்துவிட்டது.

அபசகுணமாயிற்றே என்று வருந்தினார் அரசர்.அப்போது பெருமாளே அங்கு வயதான தச்சர்  வடிவெடுத்து அரசன் முன் தோன்றினார். அரசே நான் நீங்கள் விரும்பியபடி பெருமாள் சிலையை வடித்து தருகிறேன். நான் சிலை வடிக்கும் வரை யாரும் என் அறையைத் திறக்க கூடாது என்று நிபந்தனையிட்டார். அரசரும் நிபந்தனையை ஒப்புக்கொள்ள தொடர்ந்து 15 நாட்கள் உளிச்சத்தம் கேட்டது. வேலை நடக்கிறது என்ற நிம்மதியில் அரசரும் அறைப்பக்கம் போகவில்லை. அடுத்துவந்த 3 நாட்களும் சத்தமின்றி போகவே அரசர் ஆர்வத்தில் அறையைத் திறந்து பார்த்தார். தச்சர் கோபமடைந்து  பெருமாளாக தோன்றி பொறுமையிழந்த அரசே மனிதனுக்கு பொறுமை வேண்டும். உன்னால் 3 நாட்கள் கூட பொறுமை காக்க முடியவில்லையா. நீ வடிக்கும் சிலை அரைகுறையாகவே இருக்கும்.அதையே பிரதிஷ்டை செய்து வழிபடு.பக்தர்களும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் வழிபட்டு திரும்புவார்கள் என்றார். அந்த அறையில் அரைகுறை நிலையிலிருந்த ஜெகந்நாதர், சுபத்திரா, பலராமன் சிலைகளை இந்திர தையுமா பிரதிஷ்டை செய்து வணங்கினார். இவர் காலத்துக்கு பிறகு கோயில் பாழடைந்துவிட்டது. அதன்பிறகு பல கோயில்கள் அங்கு கட்டப்பட்டாலும் அனைத்தும் கடலில் மூழ்கிவிட்டன.

பக்தர்களுக்காக சமைக்கப்படும் உணவு,அள்ள அள்ள குறையாத அற்புதம்  நிகழும் திருத்தலம்

இப்போது இருக்கும் கோயில் கி.பி.1135 ல் அப்போதைய அரசர் அனந்தவர்மன் வாளியால் தொடங்கப்பட்டு 1200 ல் இவரது  பேரன் அனங்காபி  மாதேவ் என்பவரால் கட்டி முடிக்கப்பட்டது. பஞ்சரத கோயிலைப் போல் அமைக்கப்பட்டுள்ள இக்கோயில் துவாரகை போல கடற்கரையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு நடக்கும் தேர்விழா உலகப் பிரசித்தி பெற்றவை. ஒவ்வொரு ஆண்டும் மரத்தாலான புது புது தேர்களை  உருவாக்குகிறார்கள். 12 வருடங்களுக்கு ஒருமுறை மூலவர்களும் மரத்தால் வடிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்படுகிறார்கள்.இந்த ஆலயத்தின் கொடி காற்றடிக்கும் திசையில் எதிர்திசையில் பறக்கின்றது. காற்று வீசும் திசையும் எதிராக இருக்கும். காலை முதல் மாலை வரை நிலத்திலிருந்து கடலை நோக்கியும், இரவு நேரங்களில் கடலிலிருந்து நிலத்தை நோக்கியும் இருக்கும். பூரியில் எந்தப் பக்கமிருந்து பார்த்தாலும் கோயிலின் உச்சியில் உள்ள சுதர்சன சக்கரம் நம்மை பார்ப்பது போலவே இருக்கும்.  அதேப் போல் கோபுரங்களின் நிழலும் கண்களில் படாது.

பக்தர்களுக்காக சமைக்கப்படும் உணவு ஒரே அளவாக இருந்தாலும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமானாலும் பிரசாதமானது அட்சயப் பாத்திரமாய் அள்ளக் அள்ளக் குறையாமல் வருவது அதிசயத்திலும் அதிசயமாய் பரவசமடையச் செய்கிறது.  அடுப்பில் ஒரே பாத்திரம் வைத்து சமைக்காமல் ஒன்றின் மீது ஒன்றாய் அடுக்கடுக்காய் 7  பாத்திரங்களையும் வைத்து சமைப்பதும் இந்த ஆலயத்தின் சிறப்பு. கடற்கரையில் அமைந்திருக்கும் கோயிலின் நுழைவாயில்களில் உள்புறம் காலடி வைத்தால் கடல் அலையின் சத்தம் எதுவுமே கேட்காது. ஆனால் வெளிப்புறமாக காலடி எடுத்து வைக்கும் போது கடலிலிருந்து வெளிவரும் அத்தனை சத்தங்களையும் நம்மால் உணர முடியும். எவன் ஒருவன் பொறுமையை பொறுமையாக கடைப்பிடிக்கிறானோ அவன் இறைவனது திருவடியை அடையலாம் என்பதை இறைவனே உணர்த்திய தலம் பூரி ஜெகந்நாதர் ஆலயம்.

வாய்ப்பு கிடைக்கும் போது தரிசியுங்கள். பொறுமையை உங்கள் வசமாக்குவார் பூரி ஜெகந்நாதர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP