பேசும் போது கவனம்... நம்மை இயக்கும் நற்தேவதைகளும், துர்தேவதைகளும்...

நாம் நல்லது சொன்னால் நல்லதே நடக்கும். பொதுவாகவே ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நேர்மறையான எண்ணங்களும் எதிர்மறையான எண்ணங்களும் கடலும் அலையும் போல ஒன்றை ஒன்று தொட்டுக்கொண்டு நம்மை படாதபாடு படுத்தும்.
 | 

பேசும் போது கவனம்... நம்மை இயக்கும் நற்தேவதைகளும், துர்தேவதைகளும்...

நல்லவற்றைச் சொல்ல வேண்டும். நல்லவனவற்றை மட்டுமே பேச வேண்டும் என்று நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். காரணம் நமக்கு தெரியாமல் நம்மைச் சுற்றி தேவதைகள், தேவதூதர்கள் இருப்பார்களாம். நாம் சொல்வதற்கெல்லாம் ‘ததாஸ்து’அப்படியே ஆகட்டும் என்று வரம் கொடுப்பார்களாம்.

நாம் நல்லது சொன்னால் நல்லதே நடக்கும். பொதுவாகவே ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நேர்மறையான எண்ணங்களும் எதிர்மறையான எண்ணங்களும் கடலும் அலையும் போல ஒன்றை ஒன்று தொட்டுக்கொண்டு நம்மை படாதபாடு படுத்தும். இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தேவதைகளும், எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று துர்தேவதைகளும் நம்மை மாறி மாறி வழிநடத்துவதால் தான் சமயத்தில் சிக்கல் உண்டாக்கி கடவுளை நாடுகிறோம். எண்ணங்கள் தான் தேவதைகள்...  அச்சம் கொண்ட கற்பனைகள் தான் துர்தேவதைகள்.. எண்ணங்கள் நேர்மையாக வலிமையாக  இருக்கும் போது தேவதைகள் நமக்கு உதவி செய்யும். இமயமலை போன்ற பிரச்னைகள் வந்தாலும் எண்ணத்தில் இது ஒன்றுமேயில்லை என்ற உணர்வு தலைதூக்கும் போது நம்மைச் சுற்றியுள்ள தேவதைகளின் வழிகாட்டுதலில் நன்றாகவே செயல்படமுடியும். மனதில் அச்சம் கொண்ட கற்பனைகள்  ஓங்கும் போது துர்தேவதைகளின் உதவியில் சாலை ஓரம் இருக்கும் சிறு பள்ளங்களில் கூட சிக்குண்டு போவோம்.

நமது ஆழ்மனத்தில் எண்ணங்களும் வார்த்தைகளும் நல்லனவற்றை மட்டுமே பேசவும் நினைக்கவும் பழக்க வேண்டும். உறவினர்களோ.. நண்பர்களோ...  எப்படியிருக்கிறீர்கள் என்று கேட்டால்  எத்தகைய பிரச்னைகளில் சிக்கி தவித்தாலும் நன்றாக இருக்கிறேன் என்ற  பதிலில் சுற்றியிருக்கும் தேவதைகள் அப்படியே ஆகட்டும் என்ற வரத்தை அருளும். என்ன வாழ்க்கையோ? எப்படி போனாலும் பிரச்னையாக இருக்கிறது என்று சலிக்கும் போது  துர்தேவதைகள் துக்கத்தை அதிகரிக்கும் வகையில் நெருங்கி அமர்கின்றன. நமது முன்னோர்கள் நல்ல நாட்களிலும்,மாலை விளக்கு வைக்கும் நேரங்களிலும் மஹாலஷ்மியை மனதில் நினைத்து கவலைகளை ஒதுக்கி வைப்பர். அப்போது இல்லை என்ற வார்த்தைகளை மறந்தும் கூட உச்சரிக்க மாட்டார்கள். வியாபாரிகள் கூட தங்களிடம் இல்லாத பொருளை வாடிக்கையாளர் கேட்டால் அதற்கு பதிலாக இவை இருக்கிறது என்று சொல்வார்கள். 

எனக்குத் தெரிந்த அண்ணாச்சி ஒருவர் பலசரக்கு கடையை வைத்திருந்தார்.  ஒரு நாள்  விளக்கேற்ற  ஊதுபத்தி வேண்டும் என்று வாங்க சென்றிருந்தேன்.என்ன வேண்டும் என்று விசாரித்த அவர் கற்பூரம் ஏற்றினால் மிகவும் நல்லது என்றார். அவருக்கு புரியவில்லை போலும் என்று திரும்பி இல்லை அண்ணாச்சி எனக்கு ஊதுபத்தி வேண்டும் என்றேன். நீ இதை எடுத்து போய் வீட்டில் கொடு என்றார்.  கடையில் அதிக கூட்டம் வேறு என்பதால் மறுபேச்சின்றி வீட்டிற்குச் சென்றேன். வீட்டில் வசவுதான் என்றபடி கடையில் நடந்ததைச் சொன்னேன்.வீட்டில் அனைவரும் சிரித்தார்கள்.பிறகு விளக்கமும் அளித்தார்கள்.  வியாபாரத்தில்  இல்லை  என்று சொன்னால் அந்தப் பொருள் மட்டுமல்ல வியாபாரமும் இல்லை என்னும் அளவுக்கு மோசமான சூழ்நிலையை உண்டாக்கிவிடுமாம்.  அதனால் தான் வியாபாரிகள் பொருள் இல்லையென்று சொல்லாமல் வேறு பொருளை இப்போது எடுத்து செல்லுங்கள். நாளை வந்து எடுத்து கொள்ளுங்கள் என்று சொல்வார்கள். 

பேசும் போது கவனம்... நம்மை இயக்கும் நற்தேவதைகளும், துர்தேவதைகளும்...

நாம் பேசும்போது வெளிப்படும் நல்ல வார்த்தைகளை நம்மைச் சுற்றியிருக்கும் நற்தேவதைகள் வாழ்த்தி ததாப்சு அதாவது அப்படியே ஆகட்டும் என்று ஆசிர்வாதம் செய்வார்கள். எதிர்மறையான வார்த்தைகளைக் கேட்ட அடுத்த நொடி அருகில் இருக்கும் துர்தேவதைகள் அப்படியே ஆகட்டும் என்று உடனடியாக சபித்தும் விடுவார்கள். அதனால்தான் நல்லனவற்றை நாடுங்கள் என்று முன்னோர்கள் கூறினார்கள். நல்ல சொற்கள் கனி போல் இருக்கும் போது கசப்பான விஷக்கனிகள் போல் தீயவற்றை ஏன் பயன்படுத்த வேண்டும். 

இனி யாருடன் என்ன பேசினாலும் பேசுவதற்கு முன் நல்லது,விஷயத்தைச் சொல்லுங்கள் என்று ஆரம்பியுங்கள். செளபாக்யமாக இருக்கிறேன் என்று பதிலளியுங்கள். கடவுளின் அருளால் குறையொன்றும் இல்லை என்று பதில் கூறுங்கள். பூஜை புனஸ்காரங்களால் மட்டுமல்ல நமது எண்ணங்களும் தூய்மையை நாடும்போது நல்ல மாற்றங்கள் நிச்சயம் உண்டாகும்.உங்கள் வாழ்வில் நல்லதை மட்டுமே காண்பீர்கள்

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP