மூலவர் சன்னதியை ஏன் மறைக்கக் கூடாது தெரியுமா?

கோவில்களுக்கு நாம் செல்லும் போது,சில நடைமுறை வழக்கத்தை அவசியம் பின்பற்ற வேண்டும். அதில் ஒன்று, கர்ப்பகிரகத்தினுள் இருக்கும் மூலவருக்கும் எதிரில் நந்தி இருக்கும் இடத்திற்கும் இடையில் நின்று வணங்கக்கூடாது.
 | 

மூலவர் சன்னதியை ஏன் மறைக்கக் கூடாது தெரியுமா?

கோவில்களுக்கு நாம் செல்லும் போது, சில நடைமுறை வழக்கத்தை அவசியம் பின்பற்ற வேண்டும். அதில் ஒன்று, கர்ப்பகிரகத்தினுள் இருக்கும் மூலவருக்கும் எதிரில் நந்தி இருக்கும் இடத்திற்கும் இடையில் நின்று வணங்கக்கூடாது. கூட்டம் எவ்வளவு அதிகமாக இருந்தாலும். “வழியை விட்டு நில்லுங்கள், சன்னதியை மறைக்காதீர்கள்” என்று அர்ச்சகர்கள் குரல் கொடுத்தபடி இருப்பார். நாம் இறைவனை கண்ணார தரிசித்துக் கொண்டிருக்கும் போது இடையில் இவர்கள் ஏன் இப்படி சொல்கிறார்கள் என்று நமக்கு அதற்கான அர்த்தம் அப்பொழுது புரிவதில்லை. 

கோவில்களில் ஆகம விதிகள் தவறாமல் பின்பற்றப்படுகிறது. ஆலய ஆகம விதிப்படி கர்ப்ப கிரகத்தினுள் கொலு வீற்றிருக்கும் மூலவருக்கும் எதிரில் நந்தி இருக்கும் இடத்திற்கும் இடையில் நின்று வணங்கக்கூடாது என்று சொல்லப்படுகிறது. காரணம் ஆலய சாஸ்திரப்படி மூலவருக்கு முன்னால் உள்ள நந்தியின் மூக்கிலிருந்து விடும் மூச்சுக் காற்றினால்தான், கர்ப்பகிரகத்தில் உள்ள மூலவருக்கு உயர்நிலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மூலவரின் வயிற்றுப்பகுதியில் உள்ள தொப்புள் பாகத்தை உயர்நிலையாகக் கொண்டு, அந்த இட மட்டத்தின் நேராக நந்தியின் மூக்கு அமையுமாறு கோயில்களில் நந்தி அமைக்கப்படுகிறது. இறைவனை தரிசிக்கும் ஆவலில் நாம் சன்னதியை மறைத்துக் கொண்டு நிற்கும் போது, இம்மூச்சுக்காற்று தடைபடும் என்பதால் தான் குறுக்கே போவது கூடாது என்கின்றனர். சன்னதியைவிட்டு அகன்று நின்று வழிபட வேண்டும் என்று சொல்வதும் இதன் காரணமாக தான். 

ஆலயங்களில் ஆகம விதிகளை தெரிந்துக் கொண்டு, அதனைப் பின்பற்றி நடக்கும் போது, நமது வேண்டுதல்கள் பூரணத்துவம் அடையும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP