ஏன் தெரியுமா ? - ஆண்கள் அரைஞாண் கயிறு கட்டாயம் அணிய வேண்டுமா?

நமது முன்னோர்கள் முக்கியத்துவம் கொடுத்து பின்பற்றிய பழக்கவழக்கங்கள் பல, இப்போது கால மாற்றத்தின் காரணமாகவும் நாகரீகம் என்ற போர்வையிலும் குறைந்து விட்டது.அதில் ஒன்று ஆண் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அரைஞாண் கயிறுகட்டிக் கொள்ளும் பழக்கம். பிறந்த குழந்தை பெண்ணோ,ஆணோ பிறந்த சில நாட்களில் அரைஞாண் கயிறு கட்டும் வழக்கம், மூத்த தலைமுறை மக்கள் இருக்கும் வீட்டில் இன்றும் தொடர்கிறது.
 | 

ஏன் தெரியுமா ?  - ஆண்கள் அரைஞாண் கயிறு கட்டாயம் அணிய வேண்டுமா?

நமது முன்னோர்கள் முக்கியத்துவம் கொடுத்து பின்பற்றிய  பழக்கவழக்கங்கள் பல, இப்போது கால மாற்றத்தின் காரணமாகவும் நாகரீகம் என்ற போர்வையிலும் குறைந்து விட்டது.அதில் ஒன்று ஆண் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அரைஞாண் கயிறுகட்டிக் கொள்ளும் பழக்கம். பிறந்த குழந்தை பெண்ணோ,ஆணோ பிறந்த சில நாட்களில் அரைஞாண் கயிறு கட்டும் வழக்கம், மூத்த தலைமுறை மக்கள் இருக்கும் வீட்டில் இன்றும் தொடர்கிறது.நம் முன்னோர்கள் நம்மைப் போல் பெயருக்குப் பின்னால் பல பட்டங்கள் போட்டுக் கொள்ளும் அளவிற்குப்  படிக்க வில்லை என்றாலும் நம்மை விட அதி புத்திசாலிகள்.

கைக்குழந்தைகளின் ஆரோக்கியத்தை உடல் நலனை அளக்க உதவும் கருவியாக  அரைஞாண் கொடிகளை பயன்படுத்தியுள்ளது நமது முன்னோர்களின் சாதுர்யத்தை காட்டுகிறது. குழந்தை பிறந்த சில நாட்களில் அதன் எடையை அளவிட நம் முன்னோர்கள் இந்த அரைஞாண் கயிறு அணியும் வழக்கத்தை பின்பற்றியுள்ளார்கள். குழந்தை பிறந்தவுடன் நீக்கப்படும் தொப்புள்கொடியை வெள்ளியிலோ தங்கத்திலோ சின்னதாக  தாயத்து செய்து,குழந்தையோட அரைஞாண் கயிற்றில் கோர்த்து அதன் இடுப்பில் கட்டுவார்கள். இப்படி கட்டிவிடுவதன் மூலம்,குழந்தையை காத்து, கருப்பு, திருஷ்டி போன்ற தீய சக்திகள்குழந்தைகளிடம் நெருங்காது என்று நம்பப்படுகிறது

ஆண்கள் அரைஞாண் கயிறு கட்டுவதற்கும் காரணம் இருக்கிறது.  உடல் எடை அதிகரிப்பதால் ஆண்களுக்கு பெண்களை விட குடல் இறக்க நோய் அதிகமாக ஏற்படக் கூடும் என்பதால், ஆண்கள் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டது.இப்படி பிறந்ததில் இருந்து நமது இடையோடு பிணைந்திருக்கும் அரைஞாண் கயிற்றை, நமது இந்து சமயத்தில் ஒருவர் இறக்கும் போது அகற்றுகிறார்கள். அரைஞாண் கயிறானது நமது உடலை இரண்டாகப் பகுத்துக் காட்டி, உடை போல் செயல்படுவதால் அரைஞாண் மட்டும் அணிந்திருந்தாலும் அவர் அம்மணமாக இருப்பதாக கருதப்படுவதில்லை. ஆனால் அரைஞாண் அணியாமலும், உடையும் இல்லாமலும் இருப்பவர்களை முழு முண்டமாக குறிப்பிடப்படுகிறார்கள்.

இதற்கு சான்றாக மஹாபாரத கதையிலும் ஒரு சம்பவத்தை காணலாம். மகாபாரதத்தில் திருதராட்டிரன் பிறவியிலேயே கண் பார்வை இல்லாமல் போனதால் காந்தாரியும் தனது கண்களை கட்டிக் கொண்டு வாழ்ந்தார். பதிபக்தியின் காரணமாக பல சக்திகள் கொண்டிருந்தாள்  காந்தாரி. குருட்சேத்திரப் போரில் துரியோதனன் வீழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக காந்தாரி தன் பார்வை சக்தியால் அவனது பலத்தை அதிகரிக்க ஆடையின்றி வருமாறு கூறினார்.இதைத் தடுக்க, துரியோதனன் செல்லும் வழியில் கிருஷ்ணன் இடை புகுந்து அம்மாவாக இருப்பினும், ஓர் ஆண்மகன் இப்படி முழு நிர்வாணமாக செல்வதா? என கூறி இடுப்பில் ஒரு கயிற்றைக் கட்டி அனுப்பினார். காந்தாரி தன் பார்வையைத் துரியோதனன் தலையிலிருந்து கீழாக இறங்கி வர இடையில் அரைஞாண் கயிற்றால் தடைபட்டது.இதனால் குருட்சேத்திரப் போரில் துரியோதனனை பீமன் கதாயுதத்தால் தலை,மார்பு ஏனைய உறுப்புகளில் தாக்கியும் வீழ்த்த இயலாமல், பின் துரியோதனன் தொடை பிளந்து கொல்லப்பட்டான்.

நாம் பின்பற்றும் எந்த ஒரு வழக்கமும் ஒரு காரண காரியத்தோடு உருவாக்கப்பட்டது என்பதைப் புரிந்துக் கொண்டால் அதன் பலனை முழுமையாக அடைய முடியும்.ஆன்மிகத்துடன் அறிவியலை கலந்து, ஒவ்வொரு பழக்க வழக்கத்தின் பின்புலத்தில் பல நுட்பமான சூட்சுமங்களை கொண்டது நமது இந்து மதம். பொருள் உணர்ந்து இந்து மதம் வழிகாட்டும் வழக்கங்களை கடைப்பிடிப்போம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP