ஏன் தெரியுமா?- சுப நிகழ்ச்சிகளில் வாழைமரம் ஏன் ?

திருமண வீடு , புதுமனை புகு விழா, கடைத்திறப்பு இப்படி எந்த மங்களகரமான நிகழ்ச்சிகள் என்றாலும் அந்த இடத்தில் நம்மை முதலில் வரவேற்பது வாசலில் கட்டியிருக்கும் வாழை மரங்களே.
 | 

ஏன் தெரியுமா?- சுப நிகழ்ச்சிகளில்  வாழைமரம் ஏன் ?

திருமண வீடு , புதுமனை புகு விழா, கடைத்திறப்பு இப்படி எந்த மங்களகரமான நிகழ்ச்சிகள் என்றாலும் அந்த இடத்தில் நம்மை முதலில் வரவேற்பது வாசலில் கட்டியிருக்கும் வாழை மரங்களே.மணமக்கள் வாழையடி வாழையாக வம்சங்கள் தழைக்க வேண்டும் அதற்காகத் தான் வாசலில் வாழைமரங்கள் கட்டப்படுகிறது என்ற ஒரு காரணத்தை  பரம்பரை பரம்பரையாக நாம்  சொல்லி வருகிறோம். ஆன்மீக ரீதியாக பார்க்கும் போது இது முற்றிலும் சரி. ஆனால் இதற்குப் பின்னால் அறிவியல் காரணமும் உண்டு.

தாவரங்கள் காற்றில் இருக்கும் கார்பன்டை ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு, ஆக்சிஜனைப் பரவச் செய்யும் என்பது அனைவரும்  அறிந்த உண்மை. சுபநிகழ்வு என்றால் அதற்கு அறிந்தவர்,அறியாதவர் என ஏராளமான விருந்தினர்கள் வருவார்கள். அவர்கள் விடும் மூச்சுக் காற்றிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடு காற்றில் கலக்கும். அத்துடன் கூடி நிற்பவர்களின் உடல் உஷ்ணம், வியர்வை நாற்றமும் சேர்ந்து கொள்ளும். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு குறைவாக இருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்.

சுப நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் கட்டப்பட்டிருக்கும் மாவிலைத் தோரணங்களும், வாழை மரங்களும் காற்றில் பரவியிருக்கும் கிருமிகளை அழிப்பதோடு, உஷ்ணத்தையும் உறிஞ்சும். மற்ற தாவர இனத்தை விட, வாழை மரத்தின் அத்தனை பாகங்களும் பயன்படுகின்றன.
இருந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம் என்றில்லாமல் வாழை மரம் போல்,இருக்கும் வரையும்,இறுதியிலும் பிறருக்கு பயனுள்ள வாழ்வை வாழ்வோம்.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP