குழந்தைகளுக்கு காது குத்துவது ஏன் தெரியுமா? 

காது குத்தி தோடு அணிவதன் மூலம், பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி குறையும் என்று கூறப்படுகிறது. அதோடு காது குத்துவதன் மூலம், செரிமான மண்டலம் சரிவர இயங்குகிறது என்றும் கூறப்படுகிறது.
 | 

குழந்தைகளுக்கு காது குத்துவது ஏன் தெரியுமா? 

குழந்தைகளுக்கு காது குத்துவது, ஹிந்துக்களின்  வழக்கம். ஆண் குழந்தை, பெண் குழந்தை என இருவருக்குமே, காது குத்தப்படுகிறது. இந்த சடங்கிற்கு பின், ஒரு அற்புதமான அறிவியல் ஒளிந்துள்ளது. நம் உடல்,  எலும்பும், தோலும் மட்டுமே நிறைந்தது கிடையாது. 

நமது உடலை ஒரு சக்தி மண்டலம் இயக்குகிறது. அந்த சக்தி மண்டலத்தை சீராக வைத்துக்கொள்ள, நாம் சிலவற்றை செய்ய வேண்டும்.  அதில் ஒன்று தான் காது குத்துதல் என்னும் சடங்கு.
 
குழந்தைகளுக்கு சிறு வயதிலே காது குத்துவதன் மூலம், அவர்களது மூளை வளர்ச்சி மற்றும்  ஞாபக சக்தி அதிகரிக்கிறது.  காது குத்தவதன் மூலம், ஞாபக சக்தி அதிகரிக்கும் என்பதை விஞ்ஞானிகளே ஒப்புக் கொண்டுள்ளனர். 

காது குத்தி தோடு அணிவதன் மூலம், பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி குறையும் என்று கூறப்படுகிறது. அதோடு காது குத்துவதன் மூலம், செரிமான மண்டலம் சரிவர இயங்குகிறது என்றும் கூறப்படுகிறது. 

‘அக்குபஞ்சர்’ என்ற வைத்திய சிகிச்சை முறை உள்ளது. அதில் ,.உடலில் ஓட்டை போட்டுதான் சிகிச்சையளிப்பார்கள். இதை நன்கு அறிந்திருந்த நம் முன்னோர், காது குத்துவதை ஒரு சடங்காக செய்ய சொல்லியுள்ளனர்.
 
Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP