எமனிடம் கர்ணன் கேட்ட வரம் என்ன தெரியுமா?

‘நீ எதற்காக ,மனித உடலுடன் பூலோகம் சென்றீர்களோ, அதை முழுமையாக முடித்து விட்டு திரும்பியுள்ளார். உன் வார்த்தைகளை காப்பாற்றி விட்டாய். நீ இப்போது ஒரு வரம் கேட்கலாம்’ என, எமன் கூறினான்.
 | 

எமனிடம் கர்ணன் கேட்ட வரம் என்ன தெரியுமா?

 மகாபாரத போரில் கொல்லப்பட்ட பிறகு, உரிய மரியாதைகளோடு கர்ணனை எமன் அழைத்து சென்றார். 
‘பூவுலகில், உனக்கென்று எதையும் வைத்து கொள்ளாமல், கேட்டவர்களுக்கு கேட்டதை கொடுத்தாய்,. அதனால் , சொர்கத்தில் மகிழ்ச்சியாக வாழ்’ என, கர்ணனிடம் எமன் கூறினான், யமன். 

கர்ணனும், சொர்க்கத்தில் வசிக்கிறார். ஓருநாள், கர்ணனுக்கு பசி ஏற்படுகிறது. அங்கிருப்பவர்களிடம், உணவு கிடைக்கும் இடம் பற்றி கேட்கிறார். அவர்கள் அதிர்ச்சியடைகின்றனர். ‘சொர்ககத்தில் வசிப்பவர்களுக்கு பசிக்காது. அதனால், உணவுக்கு இங்கு வேலையில்லை’ என்றனர். 

ஆனால், கர்ணனால் பசிதாங்க முடியவில்லை. உடன் தேவகுரு பிரகஸ்பதியிடம் கேட்கிறான் கர்ணன். அவர், கர்ணனிடம், ‘ உன் ஆள்காட்டி விரலை, வாயில் வைத்து சுவை’ என்கிறார். அவனும், சுவைக்கிறான். பசி அடங்குகிறது. 

இது பற்றி, பிரகஸ்பதியிடம் கேட்டான் கர்ணன்.  "கர்ணா, நீ வள்ளல் தான். யார் எது கேட்டாலும் கொடுத்தாய்; ஆனால், அன்னதானம் மட்டும் செய்யவில்லை. அதனால் தான் உனக்கு இங்கு பசி ஏற்பட்டது. பூவுலகில் நீ இருந்த போது, ஒரு நாள், ஒரு ஏழை, உன்னிடம், சாப்பாடு எங்கு கிடைக்கும் என பசியுடன் கேட்டான். நீ அவனுக்கு உணவு வழங்காமல், உணவு கிடைக்கும் இடத்தை, உன் ஆள் காட்டி விரலால் சுட்டிக் காட்டினாய், அந்த புண்ணியத்தின் பலன் தான், இப்போது, ஆள்காட்டி விரலை நீ சப்பியவுடன், உன் பசி அடங்கியது’ என்றார் பிரகஸ்பதி. 

கர்ணன் கண்ணீர் மல்க எமதர்மனிடம் சென்றான். ‘எமதர்மா! நான், பூவலகுக்கு சென்று அன்னதானம் செய்ய வேண்டும். நான், பூமிக்கு, 15 நாள் செல்ல அனுமதிக்க வேண்டும்’ என, கேட்டான். எமதர்மனும் அனுமதிக்கிறார். 
பூலோகம் வந்து, யாரும் அடையாளம் கண்டு கொள்ளாத இடத்தில், அன்னதானம் செய்தான் கர்ணன். 15 நாள் முடிந்த பின், மீண்டும் எமலோகத்துக்கு கர்ணன் சென்றான்,

‘நீ எதற்காக ,மனித உடலுடன் பூலோகம் சென்றீர்களோ,  அதை முழுமையாக முடித்து விட்டு திரும்பியுள்ளார். உன் வார்த்தைகளை காப்பாற்றி விட்டாய். நீ இப்போது ஒரு வரம் கேட்கலாம்’ என,  எமன் கூறினான்.  

‘எமதர்மனே! மனிதர்கள், தங்கள் முன்னோர்களுக்கு திதி, உணவு அளிக்க மறந்து விடுகிறார்கள். அதனால், நான் பூலோகம் சென்ற இந்த, 15 நாட்களும், முன்னோருக்கு, திதி மற்றும் உணவு அளிக்க, சிறந்த நாட்களாக அறிவிக்க வேணடும். இந்த நாட்களில், யார் அன்னதானம், திதி, செய்கிறார்களோ, அவர்களுக்கு, முன்னோரின் அருளாசி முழுமையாக கிடைக்க அருள்பாலிக்க வேணடும். அதற்காக, இந்த, 15 நாட்களும், பித்ரு லோக்கத்தில் உள்ளவர்களை, தங்கள் வாரிசுகளை பார்த்து வர, பூலோகத்துக்கு அனுப்ப வேண்டும்’ என்றான், கர்ணன்,.
மன மகிழ்ச்சியுடன் சம்மதித்தான், எமதர்மன்.
கர்ணன் கூறிய, 15 நாட்கள், மஹாளய பட்சமாக கருதப்படுகிறது, இந்த நாட்களில் நாம் அளிக்கும் அன்னதானம், மகத்தான பலனை தரும்.  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP