மயானக்கொள்ளை திருவிழாவின் மகிமை தெரியுமா உங்களுக்கு?

மாசி மாதம் அமாவாசை நாளில், அங்காள பரமேஸ்வரி அருள் புரியும் தலங்களில் மயானக்கொள்ளை விழா பக்தர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். சிவ பெருமான் பிரம்மாவின் தலையைக் கொய்த பிறகு, தனக்கு பீடித்த பிரம்ம ஹத்தி தோஷத்திலிருந்த விடுபட்ட நிகழ்வே, மயானக்கொள்ளை என்றழைக்கப்படுகிறது.
 | 

மயானக்கொள்ளை திருவிழாவின் மகிமை தெரியுமா உங்களுக்கு?

மாசி மாதம் அமாவாசை  நாளில், அங்காள பரமேஸ்வரி அருள் புரியும் தலங்களில் மயானக்கொள்ளை விழா பக்தர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். சிவ பெருமான் பிரம்மாவின் தலையைக் கொய்த பிறகு, தனக்கு பீடித்த பிரம்ம ஹத்தி தோஷத்திலிருந்த விடுபட்ட நிகழ்வே, மயானக்கொள்ளை என்றழைக்கப்படுகிறது. 

பிரம்மாவுக்கு,  பரமேஸ்வரனைப் போன்று, ஐந்து தலைகள்  இருந்தன. சிவனைப் போன்று நமக்கும், ஐந்து தலைகள் இருக்கும் போது, நாம் எதற்கு அவரை  வணங்க வேண்டும் என்னும் கர்வம் கொண்டு திரிந்தார் பிரம்மன்.  சினம் கொண்ட சிவன், பிரம்மாவின் ஒரு தலையை கொய்து விட்டார்.  

சிவனின் கரங்களில் இருந்த பிரம்மாவின் தலை, சிவனின் கைகளோடு ஒட்டிக்கொண்டது. சிவனுக்கு பிரம்ம ஹத்தி தோஷம் பிடித்துகொண்டது.  எத்தனை முறை தலையை வீசி எறிந்தாலும், மீண்டும் மீண்டும் சிவனின் கைகளில் ஒட்டிக்கொண்டது பிரம்மனின் தலை. 

என்ன செய்வது என்று அறியாமல் திகைத்தார் சிவபெருமான். சிவனின் பிரச்னையைக் கண்ட பார்வதி தேவி, சிவனிடம்  தலையை கீழே போடாமல் கைகளிலேயே வைத்திருங்கள் என்று ஆலோசனை செய்தாள்.  பிரம்மாவின் தலை கபாலமாக மாறி, சிவனின் கைகளோடு ஒட்டிக்கொண்டது.   

கைகளில் உள்ள கபாலத்தை ஏந்தியதால், உலகுக்கே படியளக்கும்  ஈசனால் உணவை உட்கொள்ள முடியாமல் அவதிப்பட்டார். இந்நிலையில், பிரம்மனின் தலையை கொய்ததால் வேதனையிலிருந்த சரஸ்வதி, ஈசனுக்கு ஆலோசனை சொன்ன பார்வதிதேவியை கொடிய உருவத்துடன் பூலோகத்தில் திரிவாய் என்று சாபனை இட்டாள். 

மயானக்கொள்ளை திருவிழாவின் மகிமை தெரியுமா உங்களுக்கு?

பூவுலகில்  அலைந்த பார்வதி, இறுதியாக மேல்மலையனூர் வந்து அங்காள பரமேஸ்வரியாக மாறினாள்.
பார்வதிதேவியைத் தேடி,  ஈசன் மலையனூர் வந்தார்.  அவரை வரவேற்கும் விதமாக, அங்காள பரமேஸ்வரியான பார்வதி தேவி  சுவையான உணவை, ஈசனின் கரங்களிலுள்ள கபாலத்தில் இட்டாள். 

ஆனால், அவள் உணவை ஒவ்வொரு முறை இடும்போதும்,  கபாலமே உணவை விழுங்கியது. பார்வதி தேவியால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அப்போது அங்கு வந்த மஹாலஷ்மி, பார்வதிக்கு ஒரு ஆலோசனை கூறினாள். 

இம்முறை  பார்வதி தேவி  இரண்டு கவளத்தை கபாலத்தில் இட்டாள். கபாலம் உணவை விழுங்கியது. அடுத்த கவளத்தை கபாலத்தில் இடும்போது, தவறுவது போல்  கீழே விட்டாள். உணவை விழுங்கும் அவசரத்தில், கபாலம் கீழே சென்றது. 

அதுதான் சமயம் என்று, அத்தருணத்தில் அங்காள பரமேஸ்வரி விஸ்வரூபமெடுத்து, பிரம்மனின் கபாலம் மீண்டும்  சிவனின் கைகளில் அடையாதபடி,  தன் காலால் மிதித்து பூமியில்  வேகமாக அழுத்தினாள். ஈசனை பற்றிய பிரம்மஹத்தி தோஷமும், அப்போது நீங்கியது. அன்றைய  நாளே, மயானக் கொள்ளை திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. 

அன்று முதல், அங்காள பரமேஸ்வரி ஆலயம் இருக்கும் இடமெல்லாம்,  மாசி அமாவாசையன்று மயானக் கொள்ளை  விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது

  newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP