கைலாயம் சென்ற பலன் கிடைக்க இதை செய்யுங்க!

திருவாதிரை நாளில், அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து நீராடி, சிவநாமம் ஜெபித்து, திருநீறு பூச வேண்டும். சிவாலயம் சென்று நடராஜரையும், சிவகாமி அம்மனையும் தரிசிக்க வேண்டும். காலையில் நடக்கும் தாண்டவ தீபாராதனையைக் காண வேண்டும்.
 | 

கைலாயம் சென்ற பலன் கிடைக்க இதை செய்யுங்க!

திருவாதிரை  நடராஜ பெருமானின் நடசத்திரம். இந்த நாளில் விரதம் இருப்பது மிகவும் சிறப்பு. அதிலும், மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரம், நடராஜருக்கு மிகவும் உகந்தது. 

திருவாதிரை நாளில், அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து நீராடி, சிவநாமம் ஜெபித்து, திருநீறு பூச வேண்டும். சிவாலயம் சென்று நடராஜரையும், சிவகாமி அம்மனையும் தரிசிக்க வேண்டும். காலையில் நடக்கும் தாண்டவ தீபாராதனையைக் காண வேண்டும். 

சுவாமிக்கு களி படைத்து, குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். அன்று பகலில் சாப்பிடக்கூடாது. சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும். இரவில் எளிய உணவு சாப்பிட்டு விரதம் முடிக்கலாம். 
இந்த விரதத்தை ஒவ்வொரு மாதமும், திருவாதிரை நட்சத்திரத்தன்று தொடர வேண்டும். ஒரு ஆண்டு திருவாதிரை விரதமிருந்தால், கைலாயம்  சென்ற பலன் கிடைக்கும். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP