வீட்டில் கண் திருஷ்டி நீங்க, தினமும் இதை செய்யுங்கள்

தூபம் என்றால் என்ன?. தூபம் போடுவதால் என்ன நன்மை. எந்தப் பொருட்களைக் கொண்டு தூபம் போட்டால் என்ன பலன். இறை வழிபாட்டின் போது தூபம் முக்கியத்துவம் பெறுகிறதே ஏன் ?.இத்தனை கேள்விகளுக்கும் ஒரே பதிலாக இந்த பதிவினைப் பார்ப்போம்.
 | 

வீட்டில் கண் திருஷ்டி நீங்க, தினமும் இதை செய்யுங்கள்

யாரையாவது புகழும் போது,நன்றாக தூபம் போடுகிறான் என்று சொல்வது வழக்கம். தூபம் போடுவதால் நாம் நினைத்த காரியம் கை கூடுமா ?

தூபம் என்றால் என்ன?. தூபம் போடுவதால் என்ன நன்மை. எந்தப் பொருட்களைக் கொண்டு தூபம் போட்டால் என்ன பலன். இறை வழிபாட்டின் போது தூபம் முக்கியத்துவம் பெறுகிறதே ஏன் ?.இத்தனை கேள்விகளுக்கும் ஒரே பதிலாக இந்த பதிவினைப் பார்ப்போம்.பொதுவாக தினமும் வீடு, வியாபாரம் செய்யும் கடை, தொழிற்சாலை போன்ற இடங்களில் ஐஸ்வர்யம் பெருக, இறைவனை நினைத்து தூபமிடுவது வழக்கம். பெரும்பாலும் சாம்பிராணியை தான் நாம்  புகைபோடுவதற்கு பயன்படுத்துவோம். சாம்பிராணியில் இருந்து வரும்  நறுமணமாவது மனிதனை திடப்படுத்தும் திறன் கொண்டது.

கோவில்களில் இறைவனை போற்றி,சாந்தப்படுத்துவதற்காக காண்பிக்கப்படும் தூபமானது,அவ்விடத்தில் அமைதியும் நற்சூழலும் ஏற்படுத்தி, அங்கு நேர்மறை அலைகளை உருவாக்கும்.சாம்பிராணியைப் போல பல தூப முறைகள் உண்டு.

சந்தனத்தில் தூபமிட தெய்வ கடாட்சம் உண்டாம்.

சாம்பிராணியில் தூபமிட வியாபாரத்தில் ஏற்படும் கண் திருஷ்டி மற்றும் பொறாமை நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.

ஜவ்வாது தூபமிட திடீர் அதிர்ஷ்டம் கிட்டும்.

அகிலியில் தூபமிட வீட்டில் மழலை செல்வத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு  குழந்தை பாக்கியம் உண்டாகும்.

துகிலி கொண்டு தூபமிட குழந்தைகளுக்கு நீண்ட ஆயுள்,அழகு, ஆரோக்கியத்தினை உண்டாகும்.

தசாங்கம் தூபமிட இல்லத்தில் தரித்திரம் நீங்கி அஷ்ட ஐஸ்வர்யம் கிட்டும்.

துளசியால் தூபமிட காரியத்தடை, திருமணத் தடை நீங்கும்.

தூதுவளை தூபமிட வீட்டில் எந்நாளும் தெய்வங்கள் அருள் புரியும்.

வலம்புரிக்காய் கொண்டு தூபமிட பன்னிரண்டு வகையான பூத கணங்களும் நீங்கும்.

வெள்ளைகுங்கிலியம் தூபமிட துஷ்ட ஆவிகளின் தொல்லை இருந்த இடம் தெரியாது நீங்கிவிடும்.

வெண்கடுகினால்  தூபமிட பகை விலகும்.

நாய்கடுகு தூபமிட துரோகிககள் நம்மை கண்டு ஓடுவர்.

கோஷ்ட தூபம் நவக்கிரக கோளாறுகள் நீக்கும்.

மருதாணிவிதை தூபமிட சூனிய கோளாறுகள் நீங்கும்.

கரிசலாங்கன்னி தூபமிட மகான்கள்அருள்கிட்டும்.

வேப்பம்பட்டை தூபமிட நம் மீது ஏவப்பட்ட ஏவல் பீடை நீங்கும்.

நன்னாரிவேர் தூபமிட இராஜவசியம் உண்டாக்கும்.

வெட்டிவேர் தூபமிட சகல காரியங்களும் சித்தியாகும் .

வேப்ப இலைதூள் தூபமிட சகலவித நோய் நிவாரணமாகும்.

மருதாணி இலைதூள் தூபமிட வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

அருகம்புல் தூள் தூபமிட சகல தோஷமும் நிவாரணமாகும்.

இத்தனைப் பொருட்களுக்கு எங்கே போவது என்ற கவலை வேண்டாம். மேலே சொன்ன அனைத்து பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அவரவருடைய பிரச்சனைக்கு ஏற்ப தூபங்களை தேர்வு செய்து தினமும் இறைவனை மனதார வேண்டி இல்லங்களிலும் நம்முடைய வியாபார தலங்களிலும் தூபம் இட்டு சகல நன்மைகளையும் பெறுவோம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP