நவராத்திரி பூஜை பற்றிய விரிவான தகவல்கள்!

இரண்டாம் நாள், அம்பிகையின் வடிவம், ராஜராஜேஸ்வரி. இவள் தான் மகிஷாசுரனை வதம் செய்ய புறப்பட்டவள். 3 வயது பெண் குழந்தையை, கவுமாரி வடிவமாக பூஜை செய்து வழிபட வேண்டும். இதனால், நோய் தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.
 | 

நவராத்திரி பூஜை பற்றிய விரிவான தகவல்கள்!

நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும், பூஜையில், பெண் குழந்தைகளை, தேவியாக பாவித்து பூஜை செய்து வழிபடுவது மிகவும் சிறப்பு. 

முதல் நாளில், அம்பிக்கைக்கு, மகேஸ்வரி என பெயர், இவர், மது, கைடபர் என்ற அசுரர்களை அழித்து, இந்த நாளில், இரண்டு வயது பெண் குழந்தையை பூஜை செய்து வழிபட வேண்டும்.

இரண்டாம் நாள், அம்பிகையின் வடிவம், ராஜராஜேஸ்வரி. இவள் தான் மகிஷாசுரனை வதம் செய்ய புறப்பட்டவள். 3 வயது பெண் குழந்தையை, கவுமாரி  வடிவமாக பூஜை செய்து வழிபட வேண்டும். இதனால், நோய் தொல்லைகளில் இருந்து விடுபடலாம். 

மூன்றாம் நாள் : அம்பிகையை வாராஹியாக வழிபட வேண்டும். 4 வய சிறுமியை கல்யாணி வடிவமாக பூஜை செய்து வழிபட வேண்டும். இதனால், வீட்டில், நவதானியம் பெருகும்.

நான்காம் நாள் :  மஹாலட்சுமி வடிவமாக அம்பிகையை வழிபபட வேண்டும். ஐந்து வயது சிறுமிக்கு ரோகினி போல் வேடமிட்டு வழிபட வேண்டும். இதனால், கடன் தொல்லை தீரும்.

ஐந்தாம் நாள் : சும்ப நிசும்பர்களிடம் துாது சென்ற, மோகினியின் வடிவமாக அம்பிகையை வழிபட வேண்டும். 6 வயது சிறுமியை வைஷ்ணவியாக பூஜிக்க வேண்டும். இதனால், நினைத்த செல்வம் கிடைக்கும். 

ஆறாம் நாள்: சர்பராஜ ஆசனத்தில் அமர்ந்திருக்கும் சண்டிகா தேவியாக வழிபட வேண்டும். 7 வயது சிறுமியை இந்திராணியாக கருதி வழிபட வேண்டும். இதனால், கவலைகள் நீங்கும்.

ஏழாம் நாள்: பொற் பீடத்தில் ஒரு பாதம் தாமரை மலரில் இருக்க, வீணை வாசிக்கும் தோற்றமுடைய சாம்பவித் துர்க்கை வடிவமாக வழிபட வேண்டும்,.  8 வயது சிறுமியை பிராக்மி மகா சரஸ்வதி,  கருதி பூஜிக்க வேண்டும்.  இதனால்,வேண்டும் வரம் கிடைக்கும். வேண்டும் வரம் அனைத்தும் கிடைக்கும்

 எட்டாவது நாள் :   ரக்த பீஜனை சம்காரம் செய்த நரசிம்ம தாரினி வடிவமாக வழிபட வேண்டும். 9 வயது சிறுமியை மகா கவுரியாக பூஜிக்க வேண்டும்.  இதனால்,  இஷ்ட சித்தி உண்டாகும்.

ஒன்பதாம் நாள் : (கையில் வில, பாணம், அங்குசம், சூலத்துடன் தோற்றமளிக்கும் பரமேஸ்வரி, சுபத்ரா தேவியை வழிபட வேண்டும். 10 வயது சிறுமியை சாமுண்டியாக வழிபட வேண்டும். இதனால், ஆரோக்கியம் பெருகும். சந்ததிகள் சவுக்கியமாக இருப்பார்கள். 

பத்தாவது நாள்: துர்க்கையை வழிபட வேண்டும். எல்லா காரியங்களும் வெற்றி மீது வெற்றி பெறும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP