இன்று கண்டிப்பாக பாடம் படிங்க!

மாணவர்கள், இன்றைய தினம், கண்டிப்பாக படிக்க வேண்டும். பார்வதி, லட்சுமி, சரஸ்வதியை மனதில், பாடங்களை இன்று படித்தால், அடுத்த தேர்வில் நிச்சயம் அதிக மதிப்பெண் கிடைக்கும் என்பது நிச்சயம்.
 | 

இன்று கண்டிப்பாக பாடம் படிங்க!

விஜயதசமி அன்று துவங்கப்படும் எந்தக் காரியமும் மிக வெற்றிகரமாக அமையும். அன்றுதான் குழந்தைகளுக்கு,  வித்யா உபதேசம் எனும் கல்வி  கற்கத் தொடங்கும் அற்புதமான நாளாக கொண்டாடுவார்கள். 

சிறு குழந்தைகளுக்கு விஜயதசமி நன்னாளில், ஆரம்பக் கல்வியை தொடங்கினால், அவர்கள் மென்மேலும், கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம். 

பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடன பயிற்சி, பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். 

அன்றைய தினம் குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்லில் ‘அ' என்று எழுத கற்றுக் கொடுப்பது 'வித்யாரம்பம்' எனப்படுகிறது. சரஸ்வதி பூஜை அன்று அடுக்கி வைத்த புத்தகங்களை மீண்டும் விஜயதசமி அன்று பூஜித்து நிவேதனத்துடன்,, ஆரத்தி காட்டி அன்று சிலவரிகளாவது  படித்தால், கல்வி மேலும் அபிவிருத்தி அடையும் என்பது நம்பிக்கை.

மாணவர்கள், இன்றைய தினம், கண்டிப்பாக படிக்க வேண்டும். பார்வதி, லட்சுமி, சரஸ்வதியை மனதில், பாடங்களை இன்று படித்தால், அடுத்த தேர்வில் நிச்சயம் அதிக மதிப்பெண் கிடைக்கும் என்பது நிச்சயம்.
 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP