இறந்து போன முன்னோர்கள் நாளை முதல் நம் வீட்டுக்கு வரப்போறாங்க!

தங்கள் பாவ, புண்ணிய கணக்கு தீரும் வரை எம புரியில் வாசம் செய்யும் நம் முன்னோர்களின் ஆத்மா, கடுமையான பசியில் உழலுமாம். ஆண்டுக்கு ஒரு முறை அவர்களுக்கு உணவருந்த வாய்ப்பளிக்கும் எம தர்மன், இந்த 15 நாட்களில் தங்கள் சொந்தங்களை சந்தித்து அவர்கள் படைக்கும் உணவை சாப்பிட்டு வர அனுமதிப்பாராம். அப்படி வரும் நம் முன்னோர்கள், நம் வீட்டு வாசலில் காத்திருப்பார்களாம்.
 | 

இறந்து போன முன்னோர்கள் நாளை முதல் நம் வீட்டுக்கு வரப்போறாங்க!

இன்று 13.09.2019 பௌர்ணமி; நிறைந்த நாள். ஆவணி மாத பௌர்ணமிக்கு அடுத்த நாளில் இருந்து, புரட்டாசி மாத அமாவாசை வரையிலான காலம், மஹாளய பட்சம் என அளிக்கப்படுகிறது. வட மாநிலங்களில் இந்த பருவத்தை பித்ரு பட்சம் என்கின்றனர். 

அதாவது பித்ருக்கள் எனப்படும் நம் முன்னோர்கள் பூமிக்கு வரும் காலம் என்பதால் இதை பித்ரு பட்சம் என்கின்றனர். பொதுவாக, இறந்து போன நம் உறவினர்களுக்கு, அவர்கள் இறந்த திதி அன்று ஆண்டுதோறும் திவசம் செய்வது வழக்கம். 

அது தவிர, ஒவ்வொரு அமாவாசை அன்றும் எள் தண்ணீர் ஊற்றி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அப்படி செய்வதால், இறந்து போனவர்களின் ஆத்ம மாரு பிறப்பு எடுக்கும் வரை சாந்தி அடையும் என்பது ஐதீகம். 

இறந்து போன முன்னோர்கள் நாளை முதல் நம் வீட்டுக்கு வரப்போறாங்க!

எனினும், பலர் இதை செய்வதில்லை. ஆண்டுக்கு ஒரு முறை திவசம் செய்வதோடு சரி. அப்படி மாதம்தோறும் அமாவாசை தர்ப்பணம் கொடுக்காதவர்கள், மஹாளய பட்சத்தில் வரும், தங்கள் முன்னோர்கள் இறந்த திதி வரும் நாளில் எள் தர்ப்பணம் கொடுத்தால், அது ஓராண்டுக்கு தர்ப்பணம் செய்த பலன் தம். 

அதே போல், திதி தெரியாதவர்கள், புரட்டாசி அமாவாசை அதாவது மஹாளய அமாவாசை நாளில் தர்ப்பணம் கொடுத்தால், அந்த ஆண்டு முழுவதும் முன்னோருக்கு உணவு படைத்த பலன் கிடைக்கும். 

இறந்து போன முன்னோர்கள் நாளை முதல் நம் வீட்டுக்கு வரப்போறாங்க!

தங்கள் பாவ, புண்ணிய கணக்கு தீரும் வரை எம புரியில் வாசம் செய்யும் நம் முன்னோர்களின் ஆத்மா, கடுமையான பசியில் உழலுமாம். ஆண்டுக்கு ஒரு முறை அவர்களுக்கு உணவருந்த வாய்ப்பளிக்கும் எம தர்மன், இந்த 15 நாட்களில் தங்கள் சொந்தங்களை சந்தித்து அவர்கள் படைக்கும் உணவை சாப்பிட்டு வர அனுமதிப்பாராம். 

அப்படி வரும் நம் முன்னோர்கள், நம் வீட்டு வாசலில் காத்திருப்பார்களாம். இந்த 15 நாட்களும், நம் முன்னோர்களை நினைத்து, சுப காரியங்களில் ஈடுபடாமல், அவர்கள் இறந்த திதியிலோ அல்லது அமாவாசை நாளிலோ அவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைந்து, நம்மை வாழ்த்தும் என கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. 

இறந்து போன முன்னோர்கள் நாளை முதல் நம் வீட்டுக்கு வரப்போறாங்க!

முன்னோர்களை நினைத்து செய்யப்படும் தானங்கள், அவர்களையே சென்றடைவதாக ஐதீகம். இந்த நாட்களில், வஸ்திரம் எனப்படும் ஆடை தானம், அண்ணா தானம், குடை தானம், பாதுகா  எனப்படும் செருப்பு தானம், தானியங்கள் தானம் உள்ளிட்டவற்றை செய்யலாம். இது, பித்து சாபத்தை போக்கி, நம் சந்ததியை செழிப்புடன் வாழ வைக்கும். 

இந்த 15 நாட்களும் முடிந்த வரை அசைவம் சாப்பிடாமலும், பிரம்மச்சரியம் கடைப்பிடித்தும் வாழ்ந்தால் இன்னும் சிறைப்பு.
 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP