துலா ஸ்நானம் செய்யுங்க; பாவங்களை போக்குங்க!

துலாகாவேரி ஸ்நானம் செய்தே. ஹரிச்சந்திர மஹாராஜா, ரிஷிகளை தன்னிலை மறந்த நிலையில் அவமதித்ததால், தனக்கேற்பட்ட பாவத்தைப் போக்கிக் கொண்டார்.
 | 

துலா ஸ்நானம் செய்யுங்க; பாவங்களை போக்குங்க!

வருஷம் முழுக்க பக்தர்கள் முழுகியதால் தனக்கு சேர்ந்த  பாவங்களை, ஐப்பசி மாதத்தில் ஸ்நானம் செய்துதான், கங்கை நதி போக்கிக் கொள்கிறது.

ஆயிரம் நாக்குகள்  கொண்ட ஆதிசேஷனாலும், துலா காவேரியின் மகிமையை எடுத்துக் கூறிவிட முடியாது என்பது அகஸ்தியர் வாக்கு.

ஐப்பசி மாதம், காவேரியின் ஒவ்வொரு நீர்த்திவலையும், ஆற்று மணலும் கூட தெய்வீக நிலையை அடைகிறது.

துலா காவேரி ஸ்நானம் செய்தே, அர்ஜுனன் கிருஷ்ணனின் தங்கை சுபத்ராவை திருமணம் செய்தான்.   தன்னை பீடித்த பாவங்களைக் கரைத்தார். சகல பாக்கியங்களையும் பெற்றார்.

சந்தனு மகாராஜா, துலா காவேரி ஸ்நானம் செய்ததால் தான், அவருக்கு மகனாக பிதாமகர் பீஷ்மர் பிறந்தார். 
துலா காவேரியில் ஸ்நானம் செய்தே, ஸ்ரீராமர், இலங்கைப் போரில் தனக்கு ஏற்பட்ட பாவங்களை போக்கிக் கொண்டார்.

துலாகாவேரி ஸ்நானம் செய்தே.  ஹரிச்சந்திர மஹாராஜா, ரிஷிகளை தன்னிலை மறந்த நிலையில் அவமதித்ததால், தனக்கேற்பட்ட பாவத்தைப் போக்கிக் கொண்டார்.

துலாகாவேரி ஸ்நானம் செய்வோர், தங்கள் குடும்பத்தையும் சேர்த்து, மூன்று கோடி மக்களை கரையேற்றுவார்கள். 

ஐப்பசி மாதத்தில், காவேரியில் மகாலட்சுமி வாசம் செய்வதால், பிரம்மமுகூர்த்தத்தில் ஸ்நானம் செய்வது விஷ்ணு அருளையும், லட்சுமி கடாட்சத்தையும் அருளும். 

மும்மூர்த்திகளும் வாசம் செய்வதால், சூரிய உதயத்திற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்,   சகல ரிஷிகளும், துலாகாவேரி ஸ்நானம் செய்கிறார்கள். 

துலா காவேரி ஸ்நானம் செய்து, காவேரிக் கரையில் செய்யப்படும் எந்த தர்மத்துக்கும் கோடி மடங்கு பெரிய பலன் உண்டு. பித்ரு தர்ப்பணம், கோ-பூஜை, அரச மர பூஜை, அன்னதானம் உள்ளிட்ட தானங்கள் போன்றவை செய்யவேண்டும்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP