ஆறுபடை வீடுகளில் ஆடி மாதம் காவடி…

மனமிறங்கிய முருகப் பெருமான் அருள்புரிய, உறக்கத்திலிருந்து எழுவது போல், இடும்பன் எழுந்தான். இருவரும் முருகப்பெருமானை வணங்கி மகிழ்ந்தார்கள். முருகன், இடும்பனே இந்த இரண்டு மலைகளும் இங்கேயே இருக்கட்டும். இந்த இருமலையின் மேல் யாம் எழுந்தருளி பக்தர்களை காப்போம். இம்மலையின் அடிவாரத்தில் நீ காவலாக இரு. சக்திகிரி, சிவகிரியை நீ சுமந்தது போல், பக்தர்களும் சுமந்து வந்து தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற பெறுவார்கள்.
 | 

ஆறுபடை வீடுகளில் ஆடி மாதம் காவடி…

வேண்டுதலை  நிறைவேற்றிய முருகப்பெருமானுக்கு, நிவர்த்திக் கடனாக பக்தர்கள் செய்யும் பிரார்த்தனைகளில் ஒன்றுதான் காவடி தூக்குவது. பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மயில் காவடி, மச்ச காவடி என காவடிகள் பலவகைகள் உண்டு. 

ஆடி மாதம் முழுவதும் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, பழனி, திருத்தணி, பழமுதிர்ச்சோலை என, ஆறுபடைவீடுகளில் ஆடிக் கிருத்திகையின் போதும், மாதம் முழுவதும் பக்தர்கள் காவடி தூக்குவார்கள். 
கா அடி என்பது காவாகச் சுமக்கப்படும் முருகனின் திருவடி. கா என்பது இரு புறமும் தொங்கும் சுமை. 

காவடி உருவான கதை தெரியுமா?
அகத்திய மாமுனிவர் இமயமலைச் சாரலில் இருந்த இரண்டு மலை சிகரங்களுள் ஒன்றை சிவனாகவும் இன்னொன்றை சக்தியாகவும் வழிபட்டு வந்தார். அவை சிவகிரி என்றும் சக்திகிரி என்றும் அழைக்கப்பட்டது. அந்த இரு மலைகளையும் பொதிகை மலைக்கு கொண்டுவர விரும்பினார். அத்தகைய பலம் தருவதற்கு முருகப்பெருமானை வழிபட்டார். 

முருகன் அருளால் அந்த இரண்டு சிகரங்களையும் தூக்கிக்கொண்டு கேதாரம் வரை வந்தவர் அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்தார். அப்போது இடும்பனும் அவன் மனைவி இடும்பியும் அகத்தியரை வணங்கி அருள்புரிய வேண்டினார்கள். அகத்தியர் இடும்பனை நோக்கி இந்த இரண்டு மலைகளையும் தென் திசை நோக்கி பொதிகை மலையில் கொண்டு வந்து வைத்தால், உமக்கு பேரும் புகழும் கிடைக்கும் என்றார். 

ஆறுபடை வீடுகளில் ஆடி மாதம் காவடி…

தாங்கள் சொல்வதை நிச்சயம் செய்கிறேன் என்ற இடும்பன், இரண்டு மலைகளையும் தூக்க முனைந்தான். ஒரு மலையையும் அசைக்கமுடியவில்லை.வலிமை மிக்க இடும்பனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. எத்தனை மலைகளை தூக்கியிருப்பேன் இந்த மலைகளை அசைக்க கூட முடியவில்லையே என்று. 

இந்த மாமுனிவர் எப்படி தூக்கி வந்தார் என்று ஆச்சரியப்பட்டு, அகத்தியரை வணங்கி, மலையைத் தூக்கும் ஆற்றலைத் தரவேண்டும் என்று வேண்டினான். அவரும், முருகனுடைய மூலமந்திரத்தையும் வழிபடும் முறையையும் கற்றுத் தந்தார். 

முனிவரை வணங்கியபடி முருகப்பெருமானை நினைத்து மூலமந்திரத்தை ஜெபித்தான். அப்போது, அஷ்ட நாகங்கள் (எட்டு நாகங்கள்) கயிறுகளாக அவனிடம் வந்தன. பிரம்மதண்டம், புஜதண்டமாக தோள் மீது சுமக்கின்ற தடியாக வந்தது.  குறுமுனிவரின் தவத்தையும், முருகனின் ஆற்றலையும் கண்டு வியந்தான்.

நாகக் கயிறுகளை உறிகளாக்கி, இரண்டு மலைகளை தூக்கி, உறிகளில் வைத்தான். பிரமதண்டத்தை தோள் மீது வைக்கும் தடியாக்கி, இரண்டு பக்கங்களிலும் பக்கத்துக்கு ஒன்றாக மாட்டி, முருகப்பெருமானின் மூல மந்திரத்தை நினைத்து, முழங்காலை ஊன்றியபடி பிரம்மதண்டத்தைத் தோளில் வைத்து முருக நாமத்தைக் கூறியபடி எழுந்தான். 

ஆறுபடை வீடுகளில் ஆடி மாதம் காவடி…

வழியெங்கும் சுமை தெரியாமல் இருக்க  முருகநாமத்தைப் பாடியபடி வந்தான். வழியில் சற்று இளைப்பாற எண்ணி காவடியை இறக்கி வைத்து ஓய்வெடுத்தான். இளைப்பாறுதல் முடிந்ததும் காவடியைத் தூக்க முயன்றான். முன்பு போல் கனமாக இருந்தது. இடும்பியும் அவனோடு சேர்ந்து தூக்க முயன்றாள். அப்போதும் அசைக்க முடியவில்லை. இவர்களது செய்கையைக் கண்டு வில்வ மர நிழலில் இருந்த சிறுவன் கொக்கரித்து சிரித்தான். 

ஏற்கனவே தூக்க இயலாத கோபத்தில் இருந்த இடும்பன், சிறுவனை சீறிப் பாய்ந்து தாக்க முயல அவனால் முடியவில்லை. மாறாக மயக்க முற்று நிலத்தில் வீழ்ந்தான். இடும்பனின் மனைவிக்கு வந்தது சிறுவனல்ல… வேலன் என்று தெரியவே,  ஐயனே பிழையைப் பொறுத்தருளக்கூடாதா? எனக்கு மாங்கல்யபிச்சை அருள வேண்டும் என்று வேலனிடம் கெஞ்சினாள். 

மனமிறங்கிய முருகப் பெருமான் அருள்புரிய, உறக்கத்திலிருந்து எழுவது போல், இடும்பன் எழுந்தான். இருவரும் முருகப்பெருமானை வணங்கி மகிழ்ந்தார்கள். முருகன், இடும்பனே இந்த இரண்டு மலைகளும் இங்கேயே இருக்கட்டும். இந்த இருமலையின் மேல் யாம் எழுந்தருளி பக்தர்களை காப்போம். இம்மலையின் அடிவாரத்தில் நீ காவலாக இரு. சக்திகிரி, சிவகிரியை நீ சுமந்தது போல், பக்தர்களும் சுமந்து வந்து தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற பெறுவார்கள். 

இத்தகைய பெருமையும், புகழும் உன்னையே சாரும். அதுமட்டுமல்ல மலையை நோக்கி வருபவர்கள் முதலில் உன்னை வணங்கிய பிறகே என்னை வணங்கி வழிபடுவார்கள் என்று கூறினார். அப்படி இடும்பனால் இரண்டு மலைகள் இறக்கி வைக்கப்பட்ட இடம் தான், இப்போது பழனி மலையாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் இடமாக இருக்கிறது. இப்படித்தான் தண்டாயுத பாணிக்கு காவடி எடுக்கும் முறை அறிமுகமானது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP