மூல நட்சத்திரம் பற்றி ஜோதிடம் சொல்லும் உண்மைகள்…

மூல நட்சத்திரம் பற்றி ஜோதிடம் சொல்லும் உண்மைகள்…
 | 

மூல நட்சத்திரம் பற்றி ஜோதிடம் சொல்லும் உண்மைகள்…

  
ஒவ்வொருவரும் பிறக்கும் போதே அவர்களது ராசி, நட்சத்திரம், நேரம் ஆகியவை குறிக்கப்பட்டு  எதிர்கால  வாழ்க்கையில்  நடக்கும்  விஷயங்களை முன்கூட்டியே கணிக்கும் வகையில், ஜாதகமாக எழுதி வைப்பார்கள். 

இந்த ஜாதகத்தைக் கணிக்கும் ஜோதிடமானது, நட்சத்திரங்களோடு தொடர்பு கொண் டவை. 27 நட்சத்திரங்களுள், 19 வது வரிசையில்  மூல நட்சத்திரமும் ஒன்று. மூல நட்சத்திரத்தின் அதிபதி கேதுபகவான்.

வாயு பகவானின் மகனான ஜெய் அனுமன் அவதரித்ததும் மூல நட்சத்திரத்தில்தான்.  ஸ்ரீ இராமனின் சிறந்த பக்தனான அனுமனின் ஜென்ம நட்சத்திரம்  பெண்களுக்கு ஆகாது என்று அனைவரும் கருதுகிறார்கள். ஆனால் இது உண்மைக்கு புறம்பானது… 

இங்கு ஆண் மூலம் என்பது ஆனி மூலமாகும். அதாவது ஆனி மாதத்தில் மூல நட்சத்திரத்தில் பிறந்து, சந்திரனை குருபார்வை செய்தால் நற்பலன்கள்  தேடி வரும்.. செய்யும் தொழிலிலும், குடும்பத்திலும் இவர்களது ஆட்சி மேலோங்கி யிருக்கும்.  இவர்கள் இருக்கும் இடத்தை ஆளும் திறனைக் கொண்டிருப்பார்கள்  அதுதான் ஆனி மூலம் அரசாளும் என்பது. 

நிர்மூலம் என்பது பின் மூலம் நிர்மூலம்... சந்திரனை பாவகிரகங்கள் பார்வை செய்வதால் உண்டாவதைச் சொல்வது. மூலம் நட்சத்திரத்தின் 4 ஆம் பாதத்தில் பிறப்பவர்களைத்தான் பின்மூலம் என்கிறோம்.  நேர்மையோடு தன் வழியில் செல்லும் இவர்களிடம் வீண் வம்புக்கு செல்வதோ, இவர்களுக்குத் தொல்லைத் தருவதோ எதிரிகளுக்குத்தான் ஆபத்து.  

எதிரிகளை வீழ்த்தும் வல்லமை இவர்களுக்கு இயல்பிலேயே அமைந்திருக்கும். காரணம் அவர்களது நவாம்சத்தில் சந்திரன் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பார். இதுதான் தவறாக மருவி பெண்கள்  மூல நட்சத்திரத்தைக் கொண்டு பிறந்தால் புகுந்த வீட்டில் மாமனாருக்கு ஆகாது என்று தவறாக புரிந்து பரப்பிவிட்டார்கள்.

மூலநட்சத்திரத்தில் பிறந்த ஆண் பெண் இருபாலருக்கும், மேற்கண்ட சிறப்புகள் பொருந்தும் என்பதால், பெண்களை மட்டும் பிரித்து பார்த்து பலன் சொல்வது ஜோதிடத்துக்கு எதிரானது.  முறையானதும் கிடையாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். 

பொதுவாக மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,  ஆன்மிகத்திலும் இல்லறத்திலும்  ஒழுங்கைக் கடைப்பிடிப்பார்கள்.  பிரச்னைகளைக் கண்டு பயந்து ஒளியாமல் கம்பீரமாக அதை எதிர் கொள்வார்கள். குருபகவானின்  ராசியைக் கொண்டு கேதுபகவானை அதிபதியாக கொண்டிருப்பதால் ஆன்மிக காரியங்களில் அதிக நாட்டம் செலுத்துவார்கள்.  

இவர்களுக்கு இளம் வயதிலேயே சுக்கிரதிசை வருவதால்,  பெரும்பாலும் கலைத்துறையில் நாட்டம் கொண்டிருப்பார்கள். வாழ்வில் அனைத்து வசதிகளையும் கொண்டு சிறப்பாக வாழ்வார்கள்.
மூல  நட்சத்திரம் உள்ள பெண்களைத் திருமணம் செய்தால் வளமாக வாழ்வீர்கள் என்பதுதான் ஜோதிடம் சொல்லும் உண்மை பலன்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP