தாம்பூலம் வழங்குவதில் இவ்வளவு பலன்களா?

நவராத்திரியில், கொலுவுக்கு அடுத்தபடியாக முக்கிய இடம் பெறுவது, பெண்களுக்கு வழங்கும் தாம்பூலம் தான். தாம்பூலம் என்பது வெற்றிலை, பாக்குக்கு வழங்கப்படும் பொதுப்பெயர். வீட்டிற்கு பெண்கள், பெண் குழந்தைகள் வந்தால், கட்டாயம் தாம்பூலம் தர வேண்டும். குறைந்த பட்சம் மஞ்சள் , குங்குமமாவது தர வேண்டும்.
 | 

தாம்பூலம் வழங்குவதில் இவ்வளவு பலன்களா?

நவராத்திரியில், கொலுவுக்கு அடுத்தபடியாக முக்கிய இடம் பெறுவது, பெண்களுக்கு வழங்கும்  தாம்பூலம் தான். தாம்பூலம் என்பது வெற்றிலை, பாக்குக்கு வழங்கப்படும் பொதுப்பெயர். வீட்டிற்கு பெண்கள், பெண் குழந்தைகள் வந்தால், கட்டாயம் தாம்பூலம் தர வேண்டும். குறைந்த பட்சம் மஞ்சள் , குங்குமமாவது தர வேண்டும். 

வெற்றிலையில் முப்பெருந்தேவியரும் வசிப்பதால் , வெற்றிலை சத்தியத்தின் சொரூபமாக பார்க்க படுகிறது, எல்லா தெய்வ பூஜைகளிலும்,  தாம்பூலத்திற்கு முக்கிய இடம் உண்டு. நிவேதனத்திற்கு வெற்றிலை, பாக்கு மிகவும் அவசியம். அம்பாளை மகிழ்விக்கும் செயல்களில் ஒன்று தாம்பூலம் தருதல். 

அதுவும் நவராத்திரி நாட்களில், பெண்களுக்கு, பெண் குழந்தைகளுக்கு தாம்பூலம் வழங்குவது, அம்பிகைக்கு வழங்கப்படுவது போல் ஐதீகம். 

சுமங்கலி பெண்கள் , கன்யா குழந்தைகள், வீட்டுக்கு வரும் போது, கீழ்க்கண்ட பொருட்களை சேர்த்து கொடுக்க வேண்டும். 

நவராத்திரியில் தாம்பூலத்தை எப்படிகொடுக்க வேண்டும்?

பலகையில் உட்காரவைத்து, காலில் நலுங்கு இட்டு, சந்தனம் குங்குமம் பூசிய பின், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், சீப்பு, முகம் பார்க்கும் கண்ணாடி, வளையல், மஞ்சள் கயிறு, தேங்காய், பழம், பூ, மருதாணி, கண்மை, தட்சணை, புடவை /பாவாடை சட்டை அல்லது ரவிக்கைத்துணி ஆகியவற்றை தாம்பாளத்தில் வைத்து கொடுக்க  வேண்டும். 

பெரியவர்களாக இருந்தால், கண்டிப்பாக நமஸ்காரம் செய்ய வேண்டும். அனைத்து பொருட்களையும் கொடுக்க முடியவில்லை என்றால், தாம்பூலம், தட்சணை, மஞ்சள், குங்குமமாவது கொடுக்க வேண்டும்.

இதில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பலன்கள் உண்டு.

நலுங்கு இடுதல்: - வியாதிகள் நீங்கும்.

வெற்றிலை பாக்கு: - மஹாலட்சுமி அருள் கிடைக்கும்,.

மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு: - தீர்க்க சுமங்கலியாக வாழலாம்.

சீப்பு: - கணவனின் ஆயுள்  அதிகரிக்கும்.

வளையல்: - மனம் அமைதி பெறும்.

கண்ணாடி: - கணவனின் ஆரோக்கியம் காக்கப்படும்.

தேங்காய்: - பாவம் நீங்கும், (மட்டைத் தேங்காய் அளிப்பதே சிறந்தது. )

பழம் - அன்னதானப் பலன் கிடைக்கும்,.

பூ:- மங்கலம் பெருகும்.

மருதாணி: - நோய்கள் வராதிருக்கும்.

கண் மை: - திருஷ்டி தோஷங்கள் நீங்கும்.

தட்சணை: - செல்வம் பெருகும் 

ரவிக்கைத்துணி அல்லது புடவை: வியாதிகள் நீங்கும்.  

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP