சகல ஐஸ்வர்யங்கள் அருளும் கஜலட்சுமி விரதம்

வீட்டில், 10 அவதார படங்களையும் வைத்து, பூஜை செய்து வழிபடுவது சிறப்பு. மாலையில் பெருமாள் கோவிலுக்கு சென்று, விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது பெரும் பலனை தரும். தசாவதார வழிபாடு, நவக்கிரகங்களால் ஏற்பட்ட தோஷங்களை நீக்கும்.
 | 

சகல ஐஸ்வர்யங்கள் அருளும் கஜலட்சுமி விரதம்

லட்சுமிக்கு உரிய எட்டு வடிவங்களில் ஒன்று, கஜலட்சுமி. யானையின் பிளிறலில் லட்சுமி வாசம் செய்வதாக, ஸ்ரீசூக்தம் கூறுகிறது. இவளுக்கு ராஜலட்சுமி என்ற பெயரும் உண்டு. 

மனித வாழ்வு வளம்பெற தேவையான செல்வம், புகழ், ஆளுமை ஆகிய மூன்றையும், தருபவள் இவள் தான். குறிப்பாக, மன்னர்களிடத்தில், அதாவது ஆளுமை திறன் உள்ளவர்களிடத்தில், வாசம் செய்பவள் ராஜலட்சுமி.
ஆவணி மாதம் வளர்பிறை தசமியன்று, விரதமிருந்து, கஜலட்சுமிக்கு பூஜை செய்தால், செல்வம், புகழ், ஆளுமை மூன்றையும் தருவாள். 

இன்றைய தினம், மகாலட்சுமி அஷ்டகம்,  லட்சுமி அஷ்டோத்திரம், ஸ்ரீ சூக்தம் பாராயணம் செய்வது சிறப்பு.
தசாவதார விரதம்

ஆவணி மாத வளர்பிறை தசதியன்று, திருமாலின் 10 அவதாரங்களையும் மனதால் நினைத்து வழிபட்டால், நினைத்த காரியம் நிறைவேறும். ஆவணி தசமி திதி, மஹாவிஷ்ணுவின் வழிபாட்டுக்குரிய நாள்,.

கும்பகோணம், ஸ்ரீரங்கம் உட்பட சில இடங்களில், தசாவதார கோவில்கள் உள்ளன. இங்கு, தசாவதாரங்களையும், ஒரே  இடத்தில் தரிசிக்கலாம். 

வீட்டில், 10 அவதார படங்களையும் வைத்து, பூஜை செய்து வழிபடுவது சிறப்பு. மாலையில் பெருமாள் கோவிலுக்கு சென்று, விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது பெரும் பலனை தரும். தசாவதார வழிபாடு, நவக்கிரகங்களால் ஏற்பட்ட தோஷங்களை நீக்கும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP