ஆடலரசனின் தாண்டவங்கள்

நடன கலையில் தேர்ச்சிப் பெற்ற சிவபெருமானை ஆடலரசன் என்கிறோம். சிவபெருமானால் ஆடப்பட்ட நடனங்கள் சிவதாண்டவங்கள் என்று அழைக்கப்படுகின்றன. நாட்டிய லட்சணத்தில்,சிவபெருமான் தண்டு முனிவருக்கும், பரத முனிவருக்கும் தாண்டவங்களை உருவாக்கி கற்பித்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 | 

ஆடலரசனின் தாண்டவங்கள்

நடன கலையில் தேர்ச்சிப் பெற்ற சிவபெருமானை ஆடலரசன் என்கிறோம். சிவபெருமானால் ஆடப்பட்ட  நடனங்கள் சிவதாண்டவங்கள் என்று அழைக்கப்படுகின்றன. நாட்டிய லட்சணத்தில்,சிவபெருமான் தண்டு முனிவருக்கும், பரத முனிவருக்கும் தாண்டவங்களை உருவாக்கி கற்பித்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் சுந்தரரும் ஈசனை ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவனே என்று போற்றியுள்ளார்.  காளிகா தாண்டவம், சந்தியா தாண்டவம், கௌரி தாண்டவம், சம்கார தாண்டவம், திரிபுர தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், ஆனந்த தாண்டவம் ஆகிய ஏழு தாண்டவங்களும் சப்த சிவதாண்டவங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இனி சிவபெருமானிள் 12 தாண்டவங்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

1. ஆனந்தத்தாண்டவம் : இறைவன் ஆனந்தமாக இருக்கும் போது புரியும் ஏகாந்த நடனம் இது.வலது காலை ஊன்றி, இடது காலைத் தூக்கி ஆடுவது, இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கி ஆடுவது மாறுகால் தாண்டவமாகும். 

2. சிருங்கார தாண்டவம் : பரமனும், பார்வதியும் புரியும் நடன விளையாடல் சிருங்கார தாண்டவம் எனப்படும். சிவனும், பார்வதியும் சேர்ந்து ஆடி, நவரசங்களையும் காட்டுவதே இந்த தாண்டவத்தின் சிறப்பு.

3. திரிபுர தாண்டவம் : மூவுலகையும் இயக்கும் நர்த்தனத்தை  திரிபுர தாண்டவம் என்கிறோம். சிவபெருமான் ஆடிய எண்ணற்ற தாண்டவங்களுள் இதுவும் ஒன்று .இதனை மனிதனின் ஆணவம்,கர்மம்,மாயை ஆகிய மூன்று குணங்களான திரிபுரங்கள் அழிய ஆடியது. சிவ பெருமான் தனது நெற்றிக்கண்ணால் திரிபுரங்களை எரித்தமையால் திரிபுர தாண்டவம் என்கின்றனர். இந்த ஆடல் நின்றால் எல்லாம் அடங்கி விடும்.  குள்ளமுனியான அகத்தியருக்கு சிவபெருமான் ஆடிய தாண்டவம் இது. 

4.சந்தியா தாண்டவம் : மாலை வேலையில் சிவபெருமான் இந்த தாண்டவத்தினை ஆடியதால் சந்தியா தாண்டவம் என்ற பெயர் பெற்றது.  பாற்கடலிருந்து வெளிவந்த விஷத்தை குடித்து உரைந்து நின்ற சிவனை,தேவர்களும், மூவரும் வணங்கி நிற்க, அப்போது சிவன் ஆடிய நடனம் சந்தியா தாண்டவம் எனப்படுகிறது. இந்த நடனத்தின் நேரத்தைதான் பிரதோசம் என்று வழிபடுகிறோம்.

5. முனி தாண்டவம் : முனிவர்களின் வேண்டுதலுக்காக ஆடியது. சிதம்பரத்தில் பதஞ்சலி முனிவர் தாளம் போட ஈசன் ஆடிய தாண்டவம். 

6. உத்ர தாண்டவம் : சினம் தெறிக்க,அசுரர்களை வதைத்தபோது ஆடிய தாண்டவம். ருத்ர தாண்டவம் வேகமான நடன  அசைவுகளும், சிவனின் சக்தியை வெளிப்படுத்தும் விதமாக  அமைந்துள்ளது. 

7. ஊர்த்துவ தாண்டவம் : காளியின் கோபத்தை அடக்குவதற்காக இடது காலை தலைக்கு மேலே தூக்கி ஒரே கோட்டில் அமைவது போல் ஆடிய நர்த்தனம்.

8. சம்ஹார தாண்டவம் : திருக்கடவூரில் மார்க்கண்டேயரைக் காப்பாற்ற சம்ஹார மூர்த்தியாக தோன்றி ஆடியது. எமதர்மனை அழிக்க சிவபெருமான் ஆடிய தாண்டவம் சம்ஹார தாண்டவமாகும். 

9. பிரளய தாண்டவம் : ஊழிக் காலத்தில் உலகம் அழியும் போது ஆடும் தாண்டவம். உலகில் அதர்மம் அதிகமாக தலையெடுத்தப் பின், அந்த பிரளயக் காலத்தில் தேவர்கள், அரக்கர்கள், இந்திரன், திருமால் என அனைவரையும் ஒடுக்கி அழித்து அவர்களுடைய மண்டையோடுகளை மாலையாக அணிந்து சிவபெருமான் ஆடும் தாண்டவம் பிரளயத் தாண்டவமாகும்.

10. பூத தாண்டவம் : சிவபெருமான் யானைத் தோல் போத்தி, ஆயுதங்களை ஏந்தி உடலை முறுக்கி வளைத்து ஆடும் ஆட்டம்.

11. சுத்த தாண்டவம் : முனிவர்கள், யோகிகளின் வேண்டுகோளை ஏற்றி சதா சர்வகாலமும் நிகழ்த்தும் தெய்வீகத் தாண்டவம். தண்டகாரண்யத்தில் வாழ்ந்த முனிவர்கள், அசுரர்களினால் அல்லல் அடைந்து சிவனை வேண்ட, பரமசிவன் தீய சக்திகளை அழித்து ஆடிய தாண்டவம் சுத்த தாண்டவம் எனப்படும்.

12. புஜங்க தாண்டவம் : பாற்கடல் கடையப்பட்ட போது ஆலகாலத்தின் கொடுமையிலிருந்து தேவர்களைக் காப்பாற்ற அதை அருந்திவிட்டு ஆடிய தாண்டவம் புஜங்க தாண்டவமாகும்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP