விறன்மிண்ட நாயனார் - 1

திருச்செங்குன்றூர் நீர் வளமும், நிலவளமும் என எல்லா செல்வங்களையும் கொண்டிருக்கும் நாடு, இதை சேரநாடு என்றும் அழைப்பார்கள். இங்கு உழவுத்தொழிலில் வேளாளர் குடி வல்லமை பெற்றிருந்தது. அந்த வேளாள மரபில் இறைவனின் திருவருளால் தோன்றினார் விறன்மிண்ட நாயனார்.
 | 

விறன்மிண்ட நாயனார் - 1

திருச்செங்குன்றூர் நீர் வளமும், நிலவளமும் என எல்லா செல்வங்களையும் கொண்டிருக்கும் நாடு, இதை சேரநாடு என்றும் அழைப்பார்கள். இங்கு உழவுத்தொழிலில் வேளாளர்  குடி வல்லமை பெற்றிருந்தது. அந்த வேளாள மரபில் இறைவனின் திருவருளால் தோன்றினார் விறன்மிண்ட நாயனார்.

சிறுவயது முதலே எம்பெருமானின் மீது பக்தியும் பேரன்பும் கொண்டிருந்தார். அதைப்போன்றே சிவனடியார்கள் இடத்தும் பெருமதிப்பும், பக்தியும் வைத்திருந்தார். எம்பெருமானின் திருவடிகளைப் போற்றிவாழும் அடியார்களை யாரேனும் குறைவாக பேசினால் அக்கணமே அவர்களைத் தண்டிப்பார். அதுவரை சாதுவாக காட்சியளிக்கும் விறன்மிண்ட நாயனார் வீரனாக மாறிவிடுவார்.

அறநெறி தவறாமல் வாழ்ந்துவந்த விறன்மிண்ட நாயனார் எம்பெருமானின் ஆலயங்களுக்குச் சென்று இறைவழிபாடு செய்து மகிழ்வார். எம்பெருமானையும் அவரது அடியார்களையும் வணங்குவதையே பெரும் பேறாக எண்ணி அவ்வாறே யாத்திரை மேற்கொண்டு வந்தார். தேவாசிரிய மண்டபத்தில் கூடியிருந்த அடியார்களை வணங்கி அவர்களுடன் ஒருவராய் திகழ்ந்தார். 

ஒருமுறை சுந்தரமூர்த்தி நாயனார் புற்றிடங்கொண்ட நாதரை வணங்கி வழிபட வந்தார். அவர் அடியார்களை மனத்தால் வணங்கி வேறு புறமாக ஒதுங்கியபடி உள்ளே நுழைந்தார். இதை தவறாக நினைத்த விறன்மிண்டர் நாயனார்  இறைவனை வழிபடுவது எளிது. ஆனால் அவர்தம் அடியாரை வழிபடுவது அரிது. அடியார்களை வணங்குவதற்கு பக்தியும் தகுதியும் இருக்கவேண்டும். ஆனால் அது தமக்கு இல்லையே  என்ற மனத்துடன் அடியார்களை மனத்தால் வணங்கி வேறுபுறம் சென்றார் சுந்தரர்.

இதை அறியாத விறன்மிண்டர் சுந்தரராரை தவறாக நினைத்து  நீர் வணங்கத்தக்க அடியார்கள் இங்கு இருக்கும் போது அங்கு செல்கிறீரே என்ன பயன்? வன்றொண்டான் அவ்வடியார்களுக்கு புறம்பானவன். அவனை வலிய ஆட்கொண்ட வீதிவிடங்கப் பெருமானும் இவ்வடியாருக்கு புறம்பானவனே என்று கடுமையாக சாடினார். இதைக் கேட்ட சுந்தரர் விறன்மிண்ட நாயனார் அடியார்கள் மீது கொண்டுள்ள பக்தியை நினைத்து பெருமிதம் கொண்டார்.

எம்பெருமான் முன் வீழ்ந்து வணங்கி நின்ற சுந்தரரார் அடியார்க்கும் அடியாராகும் பேரின்ப நிலையை அருள வேண்டும் என்று வேண்டி நின்றார். அப்போது தில்லை வாழ் அந்தணர்  தம் அடியார்க்கும் அடியேன் என்று அடி எடுத்து கொடுக்க விண்ணும் மண்ணும் உய்ய திருத்தொண்டத்தொகை என்னும் திருப்பதிகத்தினைப் பாடி  தொழுதார் சுந்தரமூர்த்தி நாயனார்.

சுந்தரர் அடியார்கள் மீது கொண்டுள்ள பக்தியை நினைத்து நெகிழ்ந்துபோனார் விறன்மிண்ட நாயனார். சைவ சமய நெறியைக் காத்து திருத்தொண்டு புரிந்து வாழ்ந்துவந்த விறன்மிண்டருக்கு சுந்தரரார் பாடிய திருத்தொகையைக் கேட்டு எல்லையில்லா இன்பம் உண்டானது.

வேறு ஒரு கதையும் உண்டு. சுந்தரர் மீது கோபம் கொண்ட விறன்மிண்டர் சுந்தரராரையும், திருவாரூரையும் வெறுத்தார். திருவாரூருக்கு மட்டும் செல்லப்போவதில்லை என்று உறுதிபூண்டார். வீட்டுக்கு வரும் அடியார்களை உபசரிப்பதற்கு முன் அவர்களது ஊரைப் பற்றி விசாரிப்பார். அவர்கள் திருவாரூர் என்று சொன்னால் அவர்களது காலை வெட்டிவிடுவார். இதனால் விறன்மிண்டர் மனைவி அடியார்களிடம் திருவாரூர் பேரை மட்டும் சொல்லவேண்டாம் என்று முன்கூட்டியே தெரிவித்துவிடுவார்.

ஒருமுறை எம்பெருமான் சிவனடியார் வேடம் பூண்டு, விறன்மிண்ட நாயனார் இல்லத்துக்கு வந்து குரல்கொடுத்தார். அவரது மனைவி ஓடி வந்து சிவனடியாரைக் கண்டதும் முகம் மலர வரவேற்றாள். சுவாமி தங்களிடம் ஒரு விண்ணப்பம் என்றாள். என்ன மகளே என்று அடியார் வேடத்தில் வந்த எம்பெருமான் கேட்க தாங்கள் எந்த ஊரிலிருந்து வந்திருக்கிறீர்கள் என்று கேட்டால் திருவாரூர் என்று சொல்லாதீர்கள் என்றாள்.

ஆனால் அடியார் எனக்கு பொய் பேச தெரியாது என்று மறுத்தார். எனினும் ஒரு உதவி செய் அவர் உணவருந்தும்போது அவர் வைத்திருக்கும் அருவாளை இடதுபுறம் வைத்துவிடு என்றார்.  நாயனாரின் மனைவியும் அடியாரின் கூற்றுக்கு சம்மதித்தார். ஆனால் அதன் பிறகு நாயனார் திருவாரூரில் அடியெடுத்து வைத்தார்… எப்படி நாளை பார்க்கலாம்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP