தவம் பெரியதா? தானம் பெரியதா?

இறைவனை நினைத்துக் கொண்டே இருந்தால் இறைவன் மகிழ்ச்சி அடைவான் என்பது உண்மைதான். ஆனால் அதை விட இறைவனுக்கு மகிழ்ச்சி கொடுக்க கூடியது பிறருக்கு செய்யும் ...
 | 

தவம் பெரியதா? தானம் பெரியதா?

இறைவனை நினைத்துக் கொண்டே இருந்தால் இறைவன் மகிழ்ச்சி அடைவான் என்பது உண்மைதான். ஆனால் அதை விட இறைவனுக்கு மகிழ்ச்சி கொடுக்க கூடியது பிறருக்கு செய்யும் தானமே. இதை உணர்த்தும் கதை ஒன்றைப் பார்ப்போம்.

முனிவர்கள் பார்க்க சாதுவாக இருக்கக்கூடியவர்கள். இவர்கள் அவ்வப்போது சினம் கொண்டு சாபம் அளித்துவிடுவார்கள். அறியாமல் செய்த தவ றாயினும் கொடுத்த சாபத்தைத் திரும்ப பெற முடியாது அல்லவா.அப்படிதான் முனிவர் ஒருவர் தவம் செய்யும் போது அவரிடம் வழிகேட்ட வயோதிகர் ஒருவரை, என் தவத்தைக் கலைத்துவிட்ட நீங்கள் பறவையாய் மாறிவிடுவீர்கள் என்று சபித்து விட்டார்.

பறவையாய் மாறிய வயோதிகனைத் தேடி அவனது வயோதிக மனைவி தள்ளாடியபடி வந்தாள். முனிவரிடம் வந்து தன் கணவரை பார்த்தீர்களா என்று கேட்டாள். இப்போதுதான் அந்த முதியவர் என் தவத்தைக் கலைத்தார் என்று பறவையாக மாற்றினேன் பின்னாடியே நீயும் வந்து என்னை கேள்வி கேட்கிறாயே நீயும் பறவையாக மாறிபோ என்றார். 

ஒரு நிமிடம் என்றாள் அந்தக் கிழவி. உன் தவத்தால் உனக்கு என்ன கிடைக்கும் என்று கேட்டாள். இறைவனை என்னுள் காண்பேன் என்றார் முனி வர். மற்றவர்களைத் துன்புறுத்தி  உன் மனதில் அமைதியை நிரப்பி இறைவனை எப்படி காண்பாய். இதுபோல் எத்தனை பேருக்கு சாபம் கொடுத் தாயோ. இறைவனே உன்னை விரும்ப மாட்டார் . வேண்டுமானால் உனக்கு குரு இருந்தால் அவரிடம் போய் கேள் என்று சொல்லி பறவையாக மாறிவிட்டாள்.

முனிவருக்கு குழப்பமானது. குருவை சந்தித்து நடந்ததைக் கூறினார். ஆமாம் அவர் சொல்வது சரிதான்.  தவத்தின் வலிமையெல்லாம் நீ சாபம் கொடுக்க கொடுக்க கரைந்துவிடும். அவசரப்பட்டு யாரையும் சபிப்பது முனிவருக்கு அழகல்ல. நீ கொடுத்த சாபத்தால் பல ஆண்டுகள் நீ செய்த தவத்தின் பலனை இழந்துவிட்டாய் என்றார்.

முனிவருக்கு வருத்தமானது. அதை திரும்ப பெற என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். குரு யோசித்தார். தவத்தை விட தானம் பெரியது. இந்த ஊரில் தனஞ்சயன் என்னும் மனிதன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் சென்று உன் புண்ணியத்தைக் கொஞ்சம் கொடு என்று கேள். இழந்த உன் தவ வலிமை கிட்டும் என்றார். முனிவரும் ஊருக்குள் நுழைந்தார்.

வழியில் மீன் விற்கும் பெண் ஒருத்தி அறியாமல் இவரை தீண்டிவிட்டாள். அபத்தமான உன் செயலால் என்னை அழுக்காக்கி விட்டாயே நீயும் மீனாக கிட என்று சபித்தார். அக்கணமே அவளும் மீனாக மாறினாள்.இப்படியே வழி நெடுக இவருக்கு தொல்லை கொடுத்தவர்களையெல்லாம்  சபித்தப்படி தனஞ்செயன் வீட்டுக்கு சென்றார். இவரை உபசரித்து வணங்கினான். அப்பனே எனக்கு உன் புண்ணியத்திலிருந்து சிறிது தானம் கொடுக்கிறாயா என்று கேட்டார். அதனாலென்ன  தாரளமாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று கொடுத்தான். 

மகிழ்ச்சியாக அதைப் பெற்று மீண்டும் குருவிடம் சென்றார். எனக்கு புண்ணியம் கிடைத்துவிட்டது. இதனால் அவனது புண்ணியக்கணக்கு குறைந்துவிடுமா என்று கேட்டார். இல்லை மாறாக அவனது கணக்கு பன்மடங்கு அதிகரிக்கும். அவன் இறைவனைத் தேடி சென்று வணங்குவ தில்லை. மாறாக அதர்ம வழியில் செல்ல மாட்டான். யார் வந்து கேட்டாலும் கையிலிருப்பதைக் கொடுத்து தானம் செய்து மகிழ்வான் என்றார்.

முனிவருக்கு புரிந்தது. எனக்கு கொடுத்த புண்ணியத்தால் நான் சாபம் கொடுத்தவர்கள் விமோசனம் பெறட்டும். இனி யாரையும் சபிக்காமல் என் தவத்தால் நான் நற்பயனை மேற்கொள்கிறேன் என்று தவம் புரிந்து நற்கதியை அடைந்தார்.

தானம் புண்ணியமிக்கது. அதனால் இயன்றவரை இல்லாதவர்களுக்கு செய்து இறைவனை மகிழ்விப்போம். 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP