Logo

நன்மை தீமை அறிந்து இறைவனை நாடினால் வெற்றி கிடைக்கும்

பிரம்மனும் ஒப்புக்கொண்டார் கூடவே ஒரு நிபந்தனையை விதித்தார். சரி ஆனால் பேசுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். உன் மாய வேலை யெல்லாம் செய்யக்கூடாது. அப் போது தான் நான் நம்புவேன் என்றார். அப்படியே ஆகட்டும் என்றார் கிருஷ்ணன்...
 | 

நன்மை தீமை அறிந்து இறைவனை நாடினால் வெற்றி கிடைக்கும்

மகாவிஷ்ணு அவதாரத்தில் இராம அவதாரம் பற்றி நினைக்க தொடங்கினாலே மனதுக்குள் அன்பும், பொறுமையும் ஊற்றெடுக்கும். பக்தப்பிரக லாதனுக்காக இரண்யகசிபுவை வதம் செய்ய எடுத்த  நரசிம்ம அவதாரம் அச்சத்தைக் கொடுக்கும். ஆனால் மாயக் கண்ணனாய் அவனுடைய அவ தாரம் மனதுக்குள் மகிழ்ச்சியையும், அவன் குறும்புகள்  நினைத்து நினைத்து குதூகலிக்கும் வகையிலும் இருக்கும்.

திருமால் பெருமை என்று பெரியவர்கள் சொல்லும் போது எற்படாத சந்தோஷம் மாயக்கண்ணனின் குறும்புகளைப் பற்றி சொல்லும் போது வற் றாத சந்தோஷமாய் உள்ளத்தில் பெருக்கெடுக்கிறது. நமக்கு மட்டும் தான் இப்படி இருக்கிறதா. இல்லை கண்ணனுக்கும் அன்பு மிக்க பக்தர்க ளைக் கண்டால் உள்ளம் உவகையில் திளைக்கிறது என்று கூறியிருக்கிறார்.

கண்ணனுக்கு பக்தர்கள் அதிகம் உண்டு. எல்லோரும் பக்தர்களாக இல்லாமல் நண்பர்களாக இருந்தார்கள். வெண்ணெய் திருடிய போது கூட கூட் டாக இருந்தார்கள். ஒருமுறை கண்ணனைக் காண பிரம்மதேவன் வந்திருந்தார். எல்லோரும் கண்ணனைக் கேட்டு நல்ல காரியங்களை செய்வ தும் அவர் கருத்தைக் கேட்டு நடப்பதுமாக இருந்தார்கள். பிரம்மதேவனுக்கு ஆச்சர்யம் கண்ணா உன்னைப் பற்றி முழுமையாக அறிந்திருக்கிறார்  களா என்ன. எல்லாவற்றையும் உன் அனுமதிக்கு பிறகே செய்கிறார்களே என்றார். 

கண்ணன் புன்முறுவல் பூத்தான். பதில் எதுவும் சொல்லவில்லை. மீண்டும் மீண்டும் பிரம்மதேவன் கேட்கவே நான் எதையும் செய்யவில்லை யே. நீங்கள் தான் பார்க்கிறீர்களே என்றார் கண்ணன். ஆனாலும் பிரம்மனுக்கு கண்ணன் மேல் நம்பிக்கையில்லை. கண்ணனுக்கு பிரம்மனின் எண்ணம் புரிந்தது. உடனே பிரம்மதேவரிடம் சரி ஒன்று செய்வோம்.  நீங்கள் சிக்கலான அதிகம் பிரச்னையுள்ள மனிதனை என்னிடம் அனுப்புங் கள். நான் அவனை குழப்பத்திலிருந்து விடுவிக்கிறேன் என்றார்.

பிரம்மனும் ஒப்புக்கொண்டார் கூடவே ஒரு நிபந்தனையை விதித்தார். சரி ஆனால் பேசுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். உன் மாய வேலை யெல்லாம் செய்யக்கூடாது. அப்போதுதான் நான் நம்புவேன் என்றார். அப்படியே ஆகட்டும் என்றார் கிருஷ்ணன். பூலோகத்தில் எல்லா வளமும் நிறைந்தும் மன அமைதியில்லாத  ஒருவனைத் தேடி பிடித்தார். எதனால் மன அமைதி குறைந்தது என்ற காரணத்தைக் கண்டறிய முடியாமல் தவித்த அவன் முன் பிரம்மனும் ,கண்ணனும் நின்றார்கள்.

கண்ணன் அவனிடம் உங்களைப் பார்த்தால் பெரும் குழப்பத்தில் இருப்பது போல் இருக்கிறதே என்ன காரணம் என்று அறிந்துகொள்ளலாமா?என்று கேட்டார். நான் என்னுடைய குழப்பத்தைச் சொன்னால் தீர்வு சொல்கிறீர்களா என்று பதிலுக்கு கேட்டான் அவன். என்னால் தீர்வு சொல்ல முடியாது. ஆனால் உனக்கு மன அமைதி கிடைக்கும் என்றார்.

அவன் மடைதிறந்த வெள்ளம் போல் தன் குழப்பங்களைத் தெரிவித்தான். கண்ணன் அமைதியாக கேட்டு கொண்டிருந்தார். பிறகு அவனே அதற்கு தான் செய்ய போகும் தீர்வுகளைப் பற்றியும் விவரித்தான். எதை செய்தால் சாதகமாக இருக்கும். பாதகமாக உண்டாகக்கூடிய செயல்கள் என்று அனைத்தையும் தெள்ளத்தெளிவாக விளக்கினான். கண்ணபிரானோ புன்முறுவலுடன் கேட்டு கொண்டிருந்தார். அவன் சொல்லி முடித்ததும் அவன் முகத்தில் ஒரு தெளிவு பிறந்தது. சரிதான் ஐயா. நீங்கள் சொன்னது போலவே என் குழப்பத்துக்கு விடை கிடைத்துவிட்டதே என்று மகிழ்ந் தபடி விடை பெற்றான். அப்போதும் கண்ணன் புன்முறுவலுடன் விடை கொடுத்தான். 

பிரம்மனுக்கு ஒன்றும் புரியவில்லை. பிரம்மையோ என்று கூட நினைத்தார்.  எப்படி கண்ணா குழப்பமாக இருந்த அவன் தெளிவானான். எனக்கு புரியவில்லையே என்றார்.அவன் புத்திசாலி அவன் பிரச்னையை அவனே தீர்த்துக்கொள்ளும் அளவுக்கு தீர்வுகளையும் சாதக பாதகங்களையும் தெரிந்தும் வைத்திருந்தான். அதை செயல்படுத்தும் போது தடுமாற்றம் உண்டாகுமோ என்ற கவலையாலே அவன் குழப்பத்தில் இருந்தான். நான் அவன் சொல்வதை பொறுமையாக காதுகொடுத்து கேட்டேன். தீர்வை அவன் கண்டு கொண்டதை உணர்ந்து குழப்பங்கள் தீர்ந்து செல்கிறான் என்றார்.

இறைவனிடம் வேண்டும் போது இதைக் கொடு அல்லது அதைக் கொடு என்று சாய்ஸ் வைத்து வேண்டுபவர்கள் உண்டு. ஆனால் தேவை என்ன என்பதை உணர்ந்து அதன் நன்மை தீமைகளை அறிந்து துணிந்து அதன் வழி நடக்க இறைவனின் துணையை வேண்டினால் வெற்றி நிச்சயமே. 


newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP