Logo

திருநாளை போவார் நாயனார்

எம்பெருமானை நேரில் தரிசிக்க வேண்டும் என் னும் ஏக்கம் எழும்போதெல்லாம் அவர்கள் இனத்தவர்கள் அவரை எச்சரிப்பார்கள். புண் ணியமிக்கவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் அரும்பாக்கியத்தை நினைத்து ஏங்ககூடாது. நமக்கு இந்த பிறவியில் அந்த அரும்பெறும் பாக்கியம் கிடைக்காது என்று கூறுவார்கள். நந்தனார் சிவபெருமானின் நினைப்பில் மூழ்கி இருந்ததை அவருடன் இருந்த சிலர் ...
 | 

திருநாளை போவார் நாயனார்

சோழவளநாட்டில் மேற்காட்டில் கொள்ளிடத்தின் கரையை அடுத்து அமைந்துள்ள ஆதனூர் என்னும் சிற்றூரில் பிறந்தவர் நந்தனார் என்னும் திரு நாளை போவார் நாயனார். இவ்வூரை ஒட்டியுள்ள வயல் பகுதியை சூழ்ந்து சிறுகுடிசைகள் இருந்தன. இங்கு புலையர் குல மக்கள்  குடும்பம் குடும்பமாக வசித்துவந்தார்கள். உழவாரப்பணியே அவர்களது பிரதானத் தொழிலாக இருந்தது.

தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்தவர் என்றாலும் சிறுவயது முதலே சிவனாரின் மீது பற்றுக்கொண்டு திகழ்ந்தார்.கூலி வேலை செய்தும், முரசுக ளுக்கு  தோல் தைத்து கொடுத்தும் கிடைக்கும் கூலியை சிவாலய பணிகளுக்கு பயன்படுத்தி வந்தார். தமக்கு கிடைக்கும் தோல், நரம்பு முதலிய வற்றை விற்பனை செய்து கிடைக்கும் வருமானத்தைக் கோயில்களுக்கு பயன்படுத்தும் பேரிகை முதலான கருவிகளுக்கு வேண்டிய பொருள் களை இலவசமாக வழங்கினார்.

சிவபெருமானை மனதில் நினைத்து தம்மால் ஆன உழைப்பின் மூலம் கிடைக்கும் ஊதியத்தையும் அவருக்கே அர்பணித்து மகிழ்ந்தும் இருந்த நந்தனாருக்கு மனதில் பெருங்குறை ஒன்று இருந்தது. சிவனாரை மனதார தரிசித்து வந்தவருக்கு கண்ணார அவரை தரிசிக்க முடியவில்லையே என்ற மனக்குறை இருந்தது. தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த அவர்கள் இனம் கோயிலுக்குள் நுழைய அனுமதி இல்லை. வெளியில் இருந்து இறைவனை தரிசித்து ஆனந்தம் அடைந்தார்.

எம்பெருமானை நேரில் தரிசிக்க வேண்டும் என்னும் ஏக்கம் எழும்போதெல்லாம் அவர்கள் இனத்தவர்கள் அவரை எச்சரிப்பார்கள். புண்ணியமிக்க வர்களுக்கு மட்டுமே கிடைக்கும் அரும்பாக்கியத்தை நினைத்து ஏங்ககூடாது. நமக்கு இந்த பிறவியில் அந்த அரும்பெறும் பாக்கியம் கிடைக்காது என்று கூறுவார்கள். நந்தனார் சிவபெருமானின் நினைப்பில் மூழ்கி இருந்ததை அவருடன் இருந்த சிலர் பொறாமையால் சினம் கொண்டார்கள். எனினும் எம்பெருமானைத் தரிசிக்க வேண்டும் என்னும் தன்னுடைய கனவை நந்தனார் மாற்றிக்கொள்ளவில்லை.

ஒருமுறை சிவனாரை சந்திக்கவிருப்பதாக தெரிவித்தார். ஆனால்அவருடைய எஜமானர் வேலையை முடித்து விட்டு செல் என்று கட்டளையிட் டார். இப்படியே ஒவ்வொரு நாளும் தள்ளிப்போயிற்று. நாளை போவேன்என்று சொல்வார். ஆனால் அடுத்த நாளும் வேலைப்பளுவால் போக இய லாது. இப்படியே நந்தனார் நாளை போவேன் நாளை போவேன் என்றார்.

ஒருமுறை திருப்புன்கூர் சென்று இறைவனைத் தரிசித்து விட்டு வரலாம் என்று சென்றார்.ஆனால்சுவாமியை தரிசிக்கமுடியாமல் நந்தி பகவான் குறுக்கே நின்றிருந்தார். ஐயனே உன்னை தரிசிக்க வந்த எனக்கு தரிசனம் கூட கிடைக்கவில்லையே என்று கதறினார். எம்பெருமானின் அவரது கதறலைக் கண்டு உருகி நந்தியை தள்ளியிருக்க சொன்னார். ஈசனின் கட்டளைக்கிணங்க நந்திபகவான் விலகி செல்ல ஈசனைக் கண்டு ஆனந்த கண்ணீர் வழிய கண்களை இமைக்காமல்  ஈசனை விழி விரித்து பார்த்து நின்ற நந்தனாரின் பக்தியையும் ஈசனின் அருளையும் அங்கிருந்தவர்கள் ஆச்சர்யத்தோடு பார்த்து நின்றார்கள். இப்போதும் திருப்புன்கூர் தலத்தில் நந்திபகவான் சிவனுக்கு நந்தியாக இல்லாமல் தள்ளியே நிற்கிறது.

சிவபெருமானைத் தான் கண்ணார தரிசனம் செய்தாயிற்றே.ஆனாலும் நந்தனாருக்கு சிதம்பரம் நடராசனைக் காணவேண்டும் என்னும் ஆசை அதிகமாயிற்று. இம்முறை அவரது எஜமானன் கேட்டவுடன் சரி என்று சம்மதம் கொடுத்தார். கூடவே நந்தனாரிடம் எமது 40 ஏக்கர் நிலத்தையும் பண்படுத்தி அறுவடை செய்த பிறகு போகலாம் என்றார்.அப்பனே இதென்னெ சோதனை உன்னை காண முடியாதோஎன்று அந்நிலத்திலேயே அழுது மயங்கினார்.

மனமார அழைக்கும் பக்தனை வாடவிடுவாரா எம்பெருமான் .அடுத்த நொடி வயலில் அறுவடை முடிந்திருந்தது. மயக்கம் தெளிந்து எழுந்த நந்த னார் பேரானந்தம் கொண்டார். நடந்ததைக் கேள்வியுற்று மக்கள் ஓடி வந்தார்கள். நந்தனாரின் எஜமானர் தவறை உணர்ந்து உடனடியாக சிதம்ப ரம் செல் என்றார். ஆனந்தத்தோடு துள்ளிக்குதித்து சென்றவர் சிதம்பரம் தலத்தின் வாசலை அடைந்து வெளியிலேயே நின்றார்.

தாய்ப்பசுவை தேடிவரும் கன்று தாயைக் காணாமல் தவிப்பது போல் வெளியே நின்ற நந்தனாரைக் கண்டு மனம் பொறுக்காத எம்பெருமான் அந்த ணர் ஒருவரின் கனவில் எழுந்தருளி திருநாளைப் போவார் என்னும் என்னுடைய அன்பு பக்தன் தனதுபிறப்பை எண்ணிவருந்தி நிற்கிறான் அவ னை மரியாதையோடு என்னிடம் அழைத்துவாருங்கள் என்றார் அவர் சொல்படி மறுநாள் அனைவரும் பூரண கும்ப மரியாதையோடு அவரை அழைத்து வர அங்கிருந்த அந்தணர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

இறைவன் சொல்வதாகஇந்த தாழ்ந்த குல மனிதருக்கு பூரண கும்பமரியாதை செய்கிறீர்களே.வேண்டுமானால் இவர் அக்னிக்குள் இறங்கி திரும்ப வரட்டும் என்று வாக்குவாதம் செய்தார். சுற்றியிருந்தவர்கள் அதிர்ந்தாலும் நந்தனார் அமைதியாக எத்தனையோ இடர்ப்பாடுகளில் என்னை காப் பாற்றிய ஐயன் இதிலும் என்னை காப்பாற்றுவார் என்றார். தீமூட்டப்பட்டது. சுற்றி எரிக்கும் அனல் முன்பு ஒருவரும் செல்ல முடியவில்லை. எம் பெருமானின் நாமத்தை சொல்லியபடி தீக்கு அருகில் சென்ற நந்தனார் தீக்குள் இறங்கினார்.

எம்பெருமானின் அருள் பக்தனுக்கு முழுவதும் கிடைத்தது.ஆம் தீக்குள் இறங்கிய நந்தனார்.தீக்காயமின்றி தெய்விக ஒளியோடு வெளியெ வந் தார். சுற்றியிருந்தவர்கள்வாயடைத்துபோயினார். இதுவரை கஷ்டங்கள் கொடுத்து வந்த நந்தனாரை இனியும் பிரிந்திருக்கக்கூடாது என்று நினை த்த எம்பெருமான் தன்னோடு அவரை இணைத்துக்கொண்டார்.

புரட்டாசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தி இவருக்கு குருபூஜை கொண்டாடப்படுகிறது. 

 

newstm.in

 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP