Logo

தீபாவளி ஸ்பெஷல் - திகட்டாத தலை தீபாவளி கொண்டாட்டங்கள்

தமிழகத்தில் தலைதீபாவளி கொண்டாட்டம் என்பது மிக முக்கியமான நடைமுறையாக ஹிந்துக்கள் குடும்பங்களில் அனுசரிக்கப்படுகிறது. . உறவுகளுடன் நெருங்கி அன்போடு பழகிடும் பாசப்பிணைப்பு நிகழ்வாகவே தலை தீபாவளி அமைந்துள்ளது.
 | 

தீபாவளி ஸ்பெஷல் - திகட்டாத தலை தீபாவளி கொண்டாட்டங்கள்

இந்தியா முழுவதும் மொழி, இன வேறுபாடுகளை கடந்து மிக உற்சாகத்துடன் கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி.ஒவ்வொரு மாநிலத்திலும் இனிப்புகள்,உடைகள், வெடிகள் , வழிபடும் முறைகளில் சின்ன சின்ன வித்தியாசங்கள் காணப்பட்டாலும், நரகாசூரன் என்ற அசுரனை வீழ்த்திய தினமான தீபாவளிகொண்டாட்டங்களின் உற்சாகம் ஒன்று தான்.

தமிழகத்தில் தலைதீபாவளி கொண்டாட்டம் என்பது மிக முக்கியமான நடைமுறை. தீபாவளிக்கு ஒரு சில தினங்கள் முன்பு திருமணம் நடந்திருந்தாலும் அடுத்து வரும் தீபாவளி தலை தீபாவளி தான். இன்னொரு முக்கியத்துவம், தலைதீபாவளி மணப்பெண்ணின் வீட்டில் நடைபெறுவது.

பொதுவாகவே மாப்பிள்ளைக்கான சிறப்பு கவனிப்புகள் அதிகம்,மாமியார் வீட்டில் முதல் ஒரு வருடத்திற்கு இருக்கும் என்ற நிலையில் தலை தீபாவளியின் உற்சாக குதூகலம் கொடிக்கட்டிப் பறக்கும்.

தலைதீபாவளி என்பது இன்னொரு வகையில் பெண்வீட்டார் சீர் செய்யும் ஒரு நிகழ்வு. தனது மகளை மாப்பிள்ளை சீரும் சிறப்புமாக வைத்து வாழ்க்கை நடத்துகிறார் என்பதை பெண்ணின் தாய் தந்தை மற்றும் குடும்பத்தினர் உணர்ந்துகொள்ளும் ஒரு வாய்ப்பாக மணப்பெண் வீட்டில் தலை தீபாவளி கொண்டாத்தை அமைத்துள்ளனர் நமது முன்னோர்கள்.

மாப்பிள்ளைக்கு சிறப்பு எண்ணெய்க் குளியல்,பளபளக்கும் புத்தாடை, பல வகை பலகாரங்களுடன்  சுடச்சுட கறி விருந்து , வசதிக்கேற்ப பரிசுகள் பட்டாசு வாணவேடிக்கை அமர்க்களங்கள் என்று மாமியார் வீடு மகிழ்ச்சி கடலில் தத்தளிக்கும்.பொதுவாக சதுர்த்தசி அன்று  எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது என்கிறது நமது தர்ம சாஸ்த்திரம்.

ஆனால் தீபாவளியன்று மட்டும் சதுர்த்தசி எண்ணெய் முழுக்கிற்கான நாள். ஏதாவது ஒன்று தொலைந்து அல்லது அழிந்து திரும்பி வராது போனால் எண்ணெய் முழுக்கு செய்வது நம்மிடம் இருந்து வரும் வழக்கமாக உள்ளது.

தீபாவளியில் நமக்கு தீமை  தரும்  தவறான குணங்கள் மற்றும் கெட்ட எண்ணங்கள் நம்மை விட்டு நீங்கிட தலை முழுக்கு அதாவது எண்ணெய் குளியல் என்ற அடிப்படையில் உருவானதே தீபாவளி குளியல். புதிதாக வாழ்வில் அடியெடுத்து வைத்திருக்கும் தம்பதியினர் நலன் காக்க இந்த எண்ணெய்க்குளியல் மிக முக்கியமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

நம்முடைய பண்பாட்டில் இந்த தலை தீபாவளிக்கான மிக முக்கிய அடிப்படை காரணம் ஒன்று உள்ளது. நம்முடைய இந்து மதத்தில் வீட்டுக்கு வந்த பெண் மருமகள், தன் பெண்ணை திருமணம் செய்தவர் மருமகன்.

இரண்டு வீடுகளில் வளர்ந்த இருவர் ஒரு வீட்டில் புது வாழ்க்கையை தொடங்கினாலும் பெண்ணை கொடுத்த வீட்டிற்கும் பெண் எடுத்த வீட்டிற்கும் இவர்கள் பிள்ளைகள் என்பதே நம் பண்பாட்டின் உறவுப் பெருமை.தலைதீபாவளிக்கு வந்த மாப்பிள்ளைக்கு கொஞ்சம் கூடுதல் சிறப்பு கவனிப்புகள் கிடைக்கும்.

மாமியார் வீட்டு உறவுகளுடன் நெருங்கி அன்போடு பழகிட வாய்ப்புத் தரும் பாசப்பிணைப்பு நிகழ்வாகவே தலை தீபாவளி கொண்டாடப்படுகிறது.

இந்தாண்டு தலை தீபாவளி கொண்டாடும் அத்தனை புது மண தம்பதியினருக்கு மனமார்ந்த சிறப்பு தீபாவளி வாழ்த்துகள்….

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP