தீபாவளி ஸ்பெஷல் - கணவனை நொடிப்பொழுதும் பிரியா வரம் அருளும் கேதார கௌரி விரதம்.

இமயமலைச் சாரலில் உள்ள சிவதலம் "கேதாரம்". இந்தத் திருத்தலத்தில் அருள்பாலிக்கும் சிவபெருமானை வணங்கி பார்வதி தேவி ‘கௌரி’ விரதத்தினை மேற்கொண்டார். அதனால் அந்த விரதத்திற்கு கேதார கௌரி விரதம் என்ற பெயர் ஏற்பட்டது.
 | 

தீபாவளி ஸ்பெஷல் -  கணவனை நொடிப்பொழுதும் பிரியா வரம் அருளும்  கேதார கௌரி விரதம்.

இமயமலைச் சாரலில் உள்ள சிவதலம் "கேதாரம்". இந்தத் திருத்தலத்தில்  அருள்பாலிக்கும் சிவபெருமானை வணங்கி  பார்வதி தேவி ‘கௌரி’ விரதத்தினை மேற்கொண்டார். அதனால் அந்த விரதத்திற்கு கேதார கௌரி விரதம் என்ற பெயர் ஏற்பட்டது. உலகை காத்து ரட்சிக்கும் சிவபெருமானுக்கு  சமமான நிலையில் பார்வதி தேவி அன்னை பராசக்தியாகப் போற்றப்படுகிறாள்.

பார்வதி   தேவியானவள் அன்னை பராசக்தியாக பலம் பெற்றது குறித்த புராண சம்பவத்தை படிக்கும் போதே, அது நம்மை மெய்சிலிர்க்கச் செய்கிறது.சிவபெருமானை நினைத்து விரதமிருந்து, வழிபட்டு அதன் பலனாக சிவபெருமானின் இடது பக்க பாதியுடம்பை பெற்ற விரதமே கேதார கௌரி விரதமாகும்.

கேதார கௌரி விரதத்தை யார், புனிதமான மனதுடன்,எந்த வரம் கேட்டு வழிபட்டு அனுஷ்டிக்கிறார்களோ, அந்த வரங்களை உமையொரு பாகன் அன்னையின் அன்பான பரிந்துரையால் உடனடியாக அருள்பாலித்து விடுகிறார் என்பது நம்பிக்கை.

சர்வலோக மாதாவாகிய பார்வதி தேவியே இந்த கேதார கௌரி விரதத்தை  முதன் முதலில் கடைபிடித்து சிவபெருமானின் இடது  பாகத்தினைப் பெற்று பராசக்தியாக பலம் பெற்றார். அம்பிகை சிவனை நோக்கி “எம்பெருமானே இவ்விரத்தை உலகில் யார் செய்தாலும் விரும்பிய யாவற்றையும் பெறுவதற்கு அருள் புரியவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். சிவனும் அம்பிகையின் வேண்டுக்கோளை ஏற்றுக் கொண்டார்.

சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரர் ஆனது இப்படித்தான் .... 

அதிதீவிர சிவபக்தரான  பிருங்கி முனிவர், ஆதியும் அந்தமும் இல்லாத  கயிலைநாதன் அருளின்றி  ஓர் அணுவும் அசையாது என்று நொடிப்பொழுதும் தவறாது சிவபெருமானை மட்டுமே வணங்குபவர். சிவனைத்தவிர வேறு யாரையும் வணங்கிடாத பிருங்கி முனிவரின் போக்கு மற்ற கடவுள்களை அவமதிக்கும் அளவுக்கு சென்றது.

இந்த சங்கட சூழல் ஒரு முறை அன்னை பார்வதிக்கே ஏற்பட்டது. கயிலையில் சிவபெருமானுடன் அமர்ந்திருக்கும் போது அங்கு வந்த பிருங்கி முனிவர் நேராக வந்து சிவனை மட்டும் வணங்கி வலம் வந்து பின்னர் , தன்னை திரும்பியே பார்க்காமல் சென்றது கண்டு அன்னை  பார்வதி மனம் வருந்தினாள்.

இதனால் மனம் வருந்திய அன்னை,தன்னையும் எப்படியாவது பிருங்கி முனிவர் வணங்க வேண்டும் என்று எண்ணி இறைவனை நெருங்கி அமர்ந்து கொண்டாள்.

கயிலாயம் வந்த பிருங்கி முனிவர் சிவனுடன் நெருக்கமாக பார்வதி அமர்ந்திருந்ததைக் கண்டு கலங்கவில்லை. மாறாக வண்டு உருவம் எடுத்து இருவருக்கும் இடையில் புகுந்து சிவனை மட்டுமே வலம் வந்தார். இந்த செயலால் மனம் வருந்திய அன்னை  பார்வதி, தன்னை அவமதித்த பிருங்கி முனிவரின் கால்கள் முடமாகிப்போகட்டும் என்று சாபமிட்டார்.

அன்னையின் சாபம் பலிக்கவே நடக்க சக்தியில்லாமல் முனிவர் தடுமாறினார். தனது பக்தருக்கு நேர்ந்த கதியைக் கண்ட சிவபெருமான்,  பிருங்கி முனிவர் ஊன்றி நடக்க ஒரு குச்சியை அளித்தார்.

தன்னால் சபிக்கப்பட்ட முனிவருக்கு ஆதரவாக சிவன் நடப்பது கண்டு பொறுக்காத பார்வதி அவரை விட்டு விலகி பூலோகம் வந்தாள். தன் கணவரை விட்டு ஒருகணமும் பிரியாத வரம் வேண்டும் என்று தவமிருந்தாள். கடுமையான தவத்திற்கு இளகிய இறைவன் பார்வதியை காண பூலோகம் வந்தார்.

சிவனை கண்ட பார்வதி ஒருநாளும் உமை விட்டு பிரியாக வரம் வேண்டும் என்று வேண்டினாள். பார்வதியின் எண்ணத்தை உணர்ந்த இறைவனும் தன்னுடலுடன் பார்வதியை இணைத்து அர்த்தநாரீஸ்வரராய் ஆனார். இவ்வாறு அம்பிகை இறைவனின் உடலில் ஒரு பாதியாகி, கணவரிடம் இருந்து எந்நாளும் பிரிக்க முடியாத பந்தத்தை உருவாக்கிக்கொண்ட நாள் கேதார கௌரி விரதநாள். 

தீபாவளி ஸ்பெஷல் -  கணவனை நொடிப்பொழுதும் பிரியா வரம் அருளும்  கேதார கௌரி விரதம்.

புரட்டாதி மாத சுக்கிலபட்ச தசமி முதல் கிருஸ்ண பட்சத்து சதுர்த்தசி வரை (ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசை) இருபத்தொரு நாட்கள் கைக்கொள்ளும் விரதமாகும். இவ் விரதத்தை அனுஷ்டிப்போர் சிவ-சக்தி அருளால் சகல சௌபாக்கியங்களும் பெற்று தீர்க்க சுமங்கலியாக வாழ்வார்கள் என புராணங்கள் கூறுகின்றன.

கணவன் மனைவி இருவரிடம் சண்டைச் சச்சரவுகள் இன்றி இனிமையான நல்லுறவு தொடர பின்பற்றப்படும் விரதமே கேதார கௌரி விரதமாகும். தம் மாங்கல்ய பலம் நீடிக்கவும்,கணவரின் மீதான அன்பு என்றும் குறையாது நிலைத்திருக்க வேண்டியும் கேதார கெளரி விரதத்தை சுமங்கலிகள் கடைபிடித்து வருகின்றனர்.

அன்றைய தினத்தில் தீபாவளிப் பண்டிகைக்கான பூஜைகள் முடிந்த பின்னர், பூஜையறையில் விளக்கேற்றி சிவ பார்வதியின் படத்தின் முன்பு அமர்ந்து தியானம் செய்யவேண்டும். ஓம் நமச்சிவாய என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை நாள்முழுவதும் துதிக்க வேண்டும்.

தீபாவளி ஸ்பெஷல் -  கணவனை நொடிப்பொழுதும் பிரியா வரம் அருளும்  கேதார கௌரி விரதம்.

மணமாகிய பெண்கள் தங்கள் மாங்கல்யம் நிலைத்திருக்க வேண்டும் என்றும், மணமாகாத கன்னிப் பெண்கள் நல்ல மாங்கல்ய வாழ்வை வேண்டியும் கேதார கௌரி விரதம் இருக்கின்றனர். மேலும்  மங்களகரமான வாழ்க்கையை வேண்டி ஆண்களும் இந்த விரதத்தை அனுஷ்டிப்பதுண்டு.

விரதம் ஆரம்பமான நாளிலிருந்து இருபத்தொரு இழைகளைக் கொண்ட நூலில் நாள்தோறும் ஒவ்வொரு முடிச்சுகளாக இடப்பட்டு, இறுதி நாளன்று அந்நூலை கோயில் குருக்களைக் கொண்டு ஆண்கள் தமது வலது கையிலும், பெண்கள் தமது இடதுகையிலும் அணிந்து கொள்வர்.

மேலும் முதல் 20 நாளும் ஒரு பொழுது, சூரிய அஸ்தமனத்தின் பின் உணவருந்தி, இறுதி நாளாகிய சதுர்தசி அன்று உபவாசம் இருந்து மறுநாள் காலை சூரிய உதயத்திற்கு முன்னர் "பாரணம்' பண்ணி விரதத்தை முடித்தல் வேண்டும்.

கேதார கௌரி விரதத்தை கடைப்பிடித்தவர்கள்  

இத்தகைய சிறப்பு வாய்ந்த விரதத்தினை திருமால் அனுஷ்டித்து வைகுந்த பதவியைப் பெற்றதுடன் பிரம்மன் அனுஷ்டித்து உலகைப் படைக்கும் உயர் பதவியினைப் பெற்றார். இந்திரன் அனுஷ்டித்து பொன்னுலகை ஆண்டு ஐராவதம் என்று அழைக்கப்படும் வெள்ளை யானையினையும் வாகனமாக அடைந்தார்.

கேதார கௌரி விரதத்தினை அனுஷ்டித்து சிவ பெருமான் உடனுறை அன்னை பராசக்தியின் பேரருள் பெறுவோம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP